Pages

Saturday, January 14, 2023

தைப்பொங்கல் 2023


பச்சரிசி பால் பொங்கல் 
பானையில் பொங்கிட... 
அச்சு வெள்ளம் செங்கரும்பாய் 
வாழ்க்கையும் இனித்திட... 

கதிராடும் நெல்மனிகள் 
களத்தினில் குவிந்திட... 
கொத்துமஞ்சள் நெல்மனிகள் 
உறவுகள் பகிர்ந்திட... 

ஆடு மாடு கலப்பைஎல்லாம் 
அதிகமாய் பெருகிட... 
கவலையெல்லாம் கனவைப்போல் 
காணாமல் போயிட... 

ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும்
உழவர்கள் அனைவரும் 
ஓரிருநாள் ஓய்ந்து கொண்டாடும் 
பொங்கல் திருநாளில் 

உங்கள் மனம் மகிழ்ச்சியில் பொங்க...
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment