Pages

Wednesday, October 11, 2023

உண்மையான அன்பு


சர்ச்சையைக் கிளப்பிய ஒரு புகைப்படம் தசாப்தத்தின் சிறந்த புகைப்படத்திற்கான விருதை வென்றது. 

அவர்கள் புகைப்படக் கலைஞரிடம் "இந்தப் படத்தை எப்படி எடுத்தீர்கள்?" என்று கேட்டனர். 

அதற்கு அவர் சிறுத்தைகள் ஒரு தாய் மான் மற்றும் அதன் இரண்டு குட்டிகளை துரத்தியது, தாய் மான் அந்த சிறுத்தைகளை விட வேகமாக ஓடியது, அதன் குழந்தைகளால் தாய் மானுக்கு ஈடாக ஓடி வர இயலவில்லை. எனவே அம்மா தனது இரண்டு குட்டிகளும் தப்பிக்க சிறுத்தைகளுக்கு தன்னையே இறையாக கொடுக்க முன் வந்தது. தான் விழுங்கப்படும் போதும் தன் குழந்தைகள் பாதுகாப்பாக ஓடுவதை அந்த தாய் எப்படி சந்தோசமாக பார்க்கிறது என்பதைதான் இந்த புகைப்படம் காட்டுகிறது. தாயால் சிறுத்தைகளிடமிருந்து எளிதில் தப்பியிருக்க முடியும். ஆனால் அதற்குப் பதிலாக, தன் குழந்தைகளுக்காக அது சிறுத்தைகளுக்குத் தன்னையே இறையாக கொடுத்தது. உனக்காக உன் பெற்றோர் எத்தனை தியாகங்களை செய்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதை எத்தனை முறை நிறுத்தியிருப்பாய்? நீங்கள் சந்தோஷமா இருக்கும்போது, சிரித்து, நீங்கள் அழும்போது அழுது வாழ்க்கையை உங்களுக்காக அர்ப்பணிக்கிறார்கள். அவர்களுக்கு வயதாகிறது என்பதையே மறந்து விடுகிறோம், ஒவ்வொரு நாளும் அவர்களின் நேரம் குறைவாக உள்ளது. 

உண்மையான அன்பு நாம் நேசிப்பவர்களுக்காக எல்லாவற்றையும் கொடுக்க வைக்கிறது.

No comments:

Post a Comment