குரூட் ஆயில் விலை முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு குறைந்திருக்கிறது ...
ஆனால் பெட்ரோல் விலை 75 லிருந்து 61 ஆக மட்டுமே குறைந்திருக்கிறது ..ஏன் பாதியாக குறைக்கப்படவில்லை ..?
என்னிடம் என் நண்பர்கள் பலர் கேட்கும் கேள்வி இதுதான் ....
இதற்க்கு முன்பாக , நாம் வரலாற்றில் நடந்த ஒன்றை தெரிந்துவைத்திருக்க வேண்டும் .
"சோவியத் யூனியன் 1957 அக்டோபர் 4ஆம் நாள் ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைத் துணைக்கோளை விண்வெளியில் செலுத்தியது. உலகம் முழுவதும் ஆர்வமுடன் கவனிக்கப்பட்ட இச்செயல் , உலகின் அதிகாரம் மிக்க நாடாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு எரிச்சலூட்டியது .
தானும் உலகின் அண்ணன் என்பதைக்காட்ட ,அமெரிக்கா 1958 ஜனவரி 31-ல் எக்ஸ்ப்ளோரர்-1 என்ற தனது துணைக்கோளை விண்வெளியில் செலுத்தியது. இதனைப் பொறுத்துக்கொள்ள இயலாத சோவியத் ரஷ்யா அடுத்து வந்த சில ஆண்டுகளில் ஸ்புட்னிக்-1ஐத் தொடர்ந்து மற்றொரு விண்வெளிக்கலமான ஸ்புட்னிக்-ii-ஐச் செலுத்தியது. அதில் லைகா என்ற பெயர் கொண்ட பெண் நாய் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு வாரம், பல இன்னல்கள் நிறைந்த விண்வெளிச் சூழ்நிலையில் அந்த நாய் இருந்து உயிர் வாழ்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனவே விண்வெளிக்குச் சென்று உயிருடன் திரும்பி வந்த முதலாவது உயிரினம் என்ற பெருமை லைகா என்ற அந்தப் பெண் நாய்க்குக் கிடைத்தது. இந்நிகழ்வு உலகநாடுகள் மத்தியில் ரஷ்யாவிற்கு ஒரு அந்தஸ்த்தைப் பெற்றுத்தர , இதனால் பொறாமை கொண்ட அமெரிக்கா 1969 ஜூலையில், அப்பலோ-ii, விண்கலத்தில் நெயில் ஆம்ஸ்ட்ராங்க், எட்வின் இ ஆல்ட்வின் ஆகிய இரு விண்வெளிப் பயணிகளுடன் 1969 ஜூலை 20-ல் நிலவில் சென்று இறங்கியதாக உலகிற்கு அறிவித்தது . இதை உண்மையா என ஆராய்ந்து அறிந்துகொள்ள நவீன கருவுகளும் விஞ்ஞானமும் வளர்ச்சி அடைந்திருக்காததால் உலக நாடுகள் இதை உண்மை என்றே நம்பின .
இன்றும் நிலவில் மனிதன் காலடி வைத்தது குறித்து பல சந்தேகங்கள் உள்ளன .
இதுபோல இரண்டு நாடுகளுக்கும் விஞ்ஞானப் போட்டிகள் நிகழ்ந்தவாறே இருக்க,சோவியத் யூனியனுடைய வளர்ச்சியைக் குலைக்க அமேரிக்கா ஒரு நரித்தந்திரமான ஆபரேசனில் இறங்கியது ...
இதன்படி ,
தன் நாட்டின் கோதுமை உற்பத்தியை பன்மடங்கு பெருக்கும் விதமாக கோதுமைப்பயிர்களுக்கு மானியங்களையும் ஏற்றுமதிக்கு சலுகைகளும் கொடுக்கப்படும் என அறிவித்தது ..
இதன்காரணமாக உள்நாட்டில் கோதுமை உற்பத்தி பலமடங்கு தேவைக்கு அதிகமாக அதிகரித்தது .தன நாட்டின் தேவைக்குப்போக உபரியாக இருந்த கோதுமையை ரஷ்யாவிற்கு உற்பத்தி விலையைவிட பலமடங்கு குறைவாக விற்பனை செய்தது .
ரஷ்யாவின் உள்சந்தையில் விற்பதைக்காட்டிலும் கோதுமை பலமடங்கு விலை குறைவாக,
,அதே சமயம் நன்கு சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதையறிந்த மக்கள் அமெரிக்க கோதுமையை விரும்பி வாங்க ஆரம்பித்தனர் .
நாளாக நாளாக இந்த கோதுமையின் தரத்தை உயர்த்தி அதேவேளையில் விலையை மேலும் மேலும் குறைக்க ரஷ்யாவின் உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் பலமடங்கு குறைந்தது ... உள்நாட்டு விவசாயிகள் பெரும்பாலோனோர் தகுந்த விலை கிடைக்காததால் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில் செய்ய ஆரம்பித்தனர் ..
நாளடைவில் விவசாய நிலங்களும் அற்றுப்போக , கோதுமை உற்பத்தியே ஒருகட்டத்தில் ஏறத்தாழ இல்லை என்ற நிலை உருவானது . இதற்காக இதுவரை அமெரிக்கா செலவிட்ட தொகையோ , பல்லாயிரம் கோடிகள் ...
இதற்காகவே காத்திருந்த அமேரிக்கா தன் திட்டத்தின் அடுத்த கட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது ...
திடீரென ஒருநாள் தன் நாட்டில் கோதுமை உற்பத்தி குறைந்துவிட்டதாகக் கூறி ,
ரஸ்யாவிற்கு அனுப்பப்படும் கோதுமை ஏற்றுமதியை தடை செய்தது .
பல வருடங்களாக அமெரிக்க கோதுமையை நம்பியிருந்த பல கோடிக்குடும்பங்கள் நடுத்தருவிற்கு வந்தது .
இந்தவிஷயத்தின் வீர்யம் அறியாமல் இத்தனை நாளாக தூங்கிக் கொண்டிருந்த ரஷ்ய அரசாங்கம் எத்தனை அவசர முயற்சிகள் எடுத்தும் உள்நாட்டில் நிலவிய பசி பட்டினி சாவுகளை தடுக்க முடியாமல் திணறியது .
கூட்டம் கூட்டமாக மக்கள் பட்டினியால் இறந்தனர் ...
வீட்டின் தாய்மார்கள் தெருவில் நின்று வசதியான ஆண்களை 'அழைத்து ' வரும் காசை கொண்டு தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டன .... பல மாகாணங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா இந்த வறட்சிக்குப்பின்னால் பல குட்டிக்குட்டி நாடுகளாக சிதறுண்டது ...
அமெரிக்காவின் தந்திரம் செவ்வனே நிஜமானது ..."
இன்றும் குருட் ஆயிலின் அதீத விலைகுறைப்புக்குப் பின்னால் அமெரிக்காவின் இதுபோன்ற நரித்தந்திரமான வேலைகள் கண்டிப்பாக இருக்ககூடுமோ என சந்தேகப்பட வைக்கிறது !
இன்றைய விலைகுறைப்பிர்க்குக் காரணம் அமெரிக்கா தன் குரூட் ஆயில் விநியோகத்தை 70% வரை அதிகரித்திருக்கிறது ..
ஆனாலும் நம் நாட்டில் விலைவாசியும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளும் அதிரடியாக குறைக்கப்படாததற்க்குக் காரணமும் இதுவே !
படிப்படியாக குறைக்கப்படும் இந்த குரூட் ஆயிலுடைய விலைகுறைப்பும் உலக அரங்கில் இன்று அமெரிக்காவை விஞ்சி வளரும் சீனா , பாரதம் போன்ற நாடுகளுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டிருகிற புதிய தந்திரமே !
இந்த தற்காலிக விலைக்குறைப்பை நிரந்தரமானது எனக்கருதி விலைவாசியைக் குறைக்கும் நாடுகள் திடீரென ஒருநாள் விலை மூன்றுமடங்கு நான்குமடங்கு அதிகரிக்கப்படும் போது மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் ...
மக்கள் எதிர்பார்ப்பின் படி , விலைவாசியும் பெட்ரோலியப்போருட்களின் விலையும் பாதியாகக் குறைக்கப்படுவதாகக் கொண்டால் இரண்டு மூன்று வருடங்களில் குரூட் ஆயில் விலை நான்கு மடங்கில் உயரும் தருவாயில் விலைவாசியை நான்கு மடங்கு உயர்த்துவது என்பது மிகப்பெரிய உள்நாட்டுக்குழப்பத்தை ஏற்படுத்தும் ...
எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஏதுவாகிவிடும் ...
ஆதலால் விலைவாசியை குறைக்காமல் மீதமாகும் பணத்தை அரசின் கஜானாவில் சேகரமாக உதவுவதே இந்நேரத்தில் பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டிய காரியம் .
நிச்சயம் சேகரமாகும் பணம் நாட்டின் வளர்ச்சிக்கு கண்டிப்பாக ஏதாவது ஒருவழியில் செலவுசெய்யப்படும் என நம்புவோம் .
இந்த நம்பிக்கைக்கூட ஊழலுக்கு இடம் கொடுக்காத ஒருவர் மத்தியில் ஆசனத்தில் இருப்பதினாலேயே ....
இக்கட்டான சூழ்நிலையில் அரசின் பக்கம் நிற்க வேண்டியது மக்களின் கடைமையே !
இவற்றையெல்லாம் கற்பனை என ஒதுக்கிவிட முடியாது ...
நான் யூகிப்பது சரியென்றால் , இந்த குரூட் ஆயில் விலைகுறைப்பு நிரந்தரமானதே என்பதுபோன்ற மாயைகள் ஏற்படுத்தப்படும் . தொடர்ந்து மத்திய அரசு விலைவாசியை குறைக்காத பட்சத்தில் அமெரிக்கா குரூட் ஆயிலுடைய ஏற்றுமதியை இன்னும் அதிகரிக்கும் . ஒரு பேரலுடைய விலை இன்னும் கணிசமான அளவு குறைக்கப்படும் .....
பொறுத்திருந்து பார்ப்போம்