Wednesday, March 27, 2019

Mission Sakthi

27.03.19, புதுடெல்லி.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த உரையில் பிரதமர் மோடி இந்தியா விண்வெளித்துறையில் செய்த சாதனையை குறிப்பிட்டு பேசினார். மோடி பேசியதாவது:- 

இன்றைய நாள், இந்தியா விண்வெளித்துறையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளது. விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் 'மிஷன் சக்தி' எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்துள்ளது.

விண்வெளி ஆய்வுத்துறையில் வளர்ந்த நாடுகளுக்கு உரிய இடத்தில் இந்தியாவும் இன்று இடம் பெற்றது. ஏ-சாட் எனப்படும் செயற்கைக்கோளைப் பாதுகாக்கும் வகையில் பூமியில் இருந்து குறைந்த நீள்வட்ட பாதையில் அதாவது 300. கி.மீ தொலைவில்  செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

மிஷன் சக்தி என்று  பெயரிடப்பட்ட இந்த சோதனை நடத்துவதும், வெற்றிகரமாக இலக்கை அடைவதும் கடினமானது. ஆனால், அதை இந்திய விண்வெளித்துறை 3 நிமிடங்களில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இன்றுவரை விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே செய்துள்ளன. இந்த சோதனையை இந்தியா 4-வது நாடாக வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது” என்றார்.