Tuesday, June 25, 2019

இது கதையல்ல... நிஜம்

3 மகன்களை கலெக்டர், என்ஜினியர், டாக்டராகிய
துப்புரவு பெண் தொழிலாளி

30 ஆண்டுகள் வெளிவராத ரகசியம் பிரிவு உபச்சாரத்தில் ஊருக்கு தெரிந்தது

ஜார்க்கண்ட், ராஜ்புரா நகராட்சியில்
பார்வையாளர்களை நெகிழ வைத்த சம்பவம்

ராஜ்புரா, ஜூன். 10–

இது கதையல்ல நிஜம்... என்று சொல்ல வைத்திருக்கும் ஒரு சம்பவம். இந்த செய்தியை படிக்கும் வாசகர்கள் உண்மையிலேயே நெகிழ்ந்து போய் விடுவார்கள். இப்படியும் ஒரு தாயா என்று ஆச்சரியக் கேள்வி எழுப்பி விழி ஓரம் திரளும் ஆனந்தக் கண்ணீரை துடைத்து மானசீகமாக அந்த தாயை வாழ்த்திக் கொண்டிருப்பார்கள்.

அந்தத் தாய் சாதாரண துப்புரவு தொழிலாளி தான். இருந்தாலும் மூன்று மகன்களில் ஒருவனை மாவட்ட கலெக்டராகவும் இன்னொருவனை ரெயில்வே என்ஜினீயராகவும் மூன்றாமவனை டாக்டராகவும் உருவாக்கி சமுதாயத்தில் ரோல் மாடலாக உருவாக்கி இருக்கிறார் ... என்றால் அந்தத் தாய், ஊரும் உலகமும் பேசப்பட வேண்டிய தாய் என்றால் அதை ஏற்க மறுப்பவர்கள் யார் இருக்கிறார்கள்?

தாய்க்குலமே ஏன் தந்தை குலமும் தான் – பெருமையும் மகிழ்ச்சியும் அடையக்கூடிய அந்தப் பெண் – சுமித்ராதேவி. 60 வயது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஜபுரா நகராட்சியில் பெண் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்தவர். நடந்த பிரிவு உபச்சார விழாவில் அதாவது பணி நிறைவு பாராட்டு விழாவில் தான், கடந்த 30 ஆண்டுகளாக வெளி உலகத்திற்கு தெரியாமல் ரகசியமாக இருந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

மேடையில் பாராட்டு விழா நடைபெறும் 30 நிமிடத்திற்கு முன்பு வரை அவர் மாவட்ட கலெக்டர், என்ஜினியர் டாக்டர் ... இப்படி உயர்ந்த பொறுப்பில் இருக்கும் மகன்களின் தாய் என்று தெரியாது. அது தெரிந்ததும், அரங்கில் திரண்டிருந்த சக ஊழியர்களும், பார்வையாளர்களும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார்கள்.

சுமித்ரா தேவிக்கு பாராட்டு விழாவை நகராட்சி நிர்வாகமும், சக ஊழியர்களும் இணைந்து நடத்தினார்கள். விழா தொடங்குவதற்கு அரை மணி நேரம் இருக்கும்போது, சைரன் ஒலிக்க ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து பீகார் மாநிலம் சிவாஞ்சலி மாவட்டத்தின் கலெக்டர் மகேந்திரகுமார் இறங்கினார். அவரை அங்கு இருந்தவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு காரில் ரெயில்வே என்ஜினியரிங் வந்து இறங்கினார். அடுத்து டாக்டர் வந்திறங்கினார். அவர்களையும் விழா அமைப்பாளர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று மேடையில் அமர்த்தினார்கள். ஒரே நேரத்தில் கலெக்டர் டாக்டர், ரெயில்வே பணியாளர் விழாவிற்கு வந்திருப்பதைக் கண்டு பார்வையாளர்கள் ஆச்சரியத்தோடு அமர்ந்திருந்தார்கள்.

‘‘30 ஆண்டுகள் சுமித்ராதேவி பணிபுரிந்து இருக்கிறார்; கடமையில் அர்ப்பணிப்போடு இருந்திருக்கிறார்; எந்த ஒரு புகாரும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அவரைப் போல ஒரு தொழிலாளி கிடைப்பது என்பது அபூர்வம்’’ என்று நகராட்சி நிர்வாகிகள் மனம் திறந்து பாராட்டினார்

கலெக்டர் மகேந்திரகுமார் பேச்சைத் துவக்கினார். கடந்த 30 ஆண்டுகளாக ஒரு பெண்மணி, அதுவும் ஒரு பெண் துப்புரவு தொழிலாளி தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம், அதில் கிடைத்த சொற்ப சம்பளத்தை வைத்து குடும்பத்தையும் நடத்திக் கொண்டு சமுதாயத்தில் 3 பேரை உயர்த்தி உயர்ந்த பொறுப்பில் அமர வைத்து இருப்பது என்பது மகிழ்ச்சிக்குரியது, பெருமைக்கு உரியது’ என்று குறிப்பிட்டார்

இப்படி அவர் பீடிகையோடு துவக்கிய பேச்சைக் பார்வையாளர்கள் கூட்டம் உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தது. அவர் தொடர்ந்து பேசுகையில், தான் ஒரு துப்புரவு தொழிலாளியாக இருந்தாலும் கொடுத்த பணியை நேசித்து நேசித்து செய்தார் கடமை உணர்வோடு பணியாற்றினார். தன்னுடைய சவுகரியத்தை எல்லாம் குறைத்துக்கொண்டு, படிப்பு ஒன்றே குறியாக இருக்க வேண்டும் என்றும் மகன்களை படிக்க வைத்தார். சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஒரு வைராக்கிய வெறியுடன் இறங்கினார். அவளின் எதிர்பார்ப்புக்கு கொஞ்சமும் குறை வைக்காமல் 3 பேரும் படித்தார்கள். வாழ்க்கையில் உயர்ந்தார்கள். அவர்களை உயர்ந்த இடத்தில் உட்கார வைத்தார். அவர்கள் தான் நாங்கள்’’ என்று தொடர்ந்து பேசிய நிறுத்தியபோது அரங்கில் பலத்த கைதட்டல் எழுந்தது.

இதுவரை வெளி உலகத்திற்கு 30 ஆண்டுகளாக வராத ஒரு ரகசியத்தை உண்மையை உங்களிடம் சொல்கிறேன் அந்தக் கலெக்டர் நான்தான், ரெயில்வே பொறியாளர் இவன். டாக்டர் இவன்... பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அடுத்த நிமிடம் மூன்று பேரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்து எழுந்து நின்று, இந்த சபைக்கு அந்த உண்மையை சொல்கிறோம். ‘‘அந்தத் தாயின் மகன்கள் தான் நாங்கள்’’ என்று சொன்னதும் அரங்கமே உணர்ச்சிப் பிழம்பாய் மாறியது. பார்வையாளர்களின் விழியோரம் ஆனந்தக் கண்ணீர். அத்தனை பேரும் அசந்து போனார்கள். எழுந்த கைதட்டல் அடங்குவதற்கு 120 வினாடிகள் பிடித்தது.

செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து செயல்பட்வள் தான் எங்கள் தாய். துப்புரவுத் தொழிலாளி என்றாலும் அது தரக்குறைவான பணி என்று உதறித்தள்ளவில்லை. எங்களிடம் அந்த வேலையைப் பற்றி சொன்னதும் நாங்களும் அவளை வேலையிலிருந்து விலக்கவில்லை. விடு என்று வற்புறுத்தவில்லை. அவளும் வேலையை தொடர்ந்தார் எங்களை படிக்க வைத்தாள். நாங்கள் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளோம். அவர் வாழ்க்கையில் எத்தனையோ தியாகங்களை செய்து எங்களைக் கரையேற்றி இருக்கிறார்ள். அவள், எங்கள் பார்வையில் வெறும் தாய் அல்ல – உண்மையிலேயே தெய்வத்தாய் ...’ என்று சொல்லி நிறுத்தியபோது பார்வையாளர்கள் மீண்டும் (எழுந்து ஸ்டாண்டிங் ஓவேஷன் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

தனக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள் அவர்கள் மூவருமே உயர் பொறுப்பில் அந்தஸ்தில் இருக்கிறார்கள் என்பதை வெளி உலகத்திற்கு ஏன் உடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களுக்குக் கூட சொல்லாமல் கடமையில் அர்ப்பணிப்பாய் இருந்து குடும்பத்தை கரையேற்றி இருக்கும் சுமித்திரா தேவியினுடைய அந்த எளிமையை, பண்பை, பாசத்தின் எச்சத்தை கேட்டு ஒட்டுமொத்த அரங்கமே மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியில் திளைத்தது.

நல்ல உத்யோகத்தில் கணவன் – மனைவி இருந்தும் ஒரு குழந்தையை பெற்று அவர்களைப் படிக்க வைப்பதற்குள் விழிபிதுங்கவிடும் காலக்கட்டத்தில்.. செய்யும் வேலை... இன்னதென்று கண்டு இகழ்ந்து கொண்டிருக்காமல், தொழிலை மதித்து, குடும்பத்தை உயர்த்திய தாய் சுபத்ரா தேவி, மாதர்குல மாணிக்கம் என்று பாராட்டி சொன்னால்... இதையும் இல்லை என்று யார் தான் மறுக்கப் போகிறார்கள்?

சைக்கிள்

அப்போதெல்லாம்
வீட்டில் சைக்கிள் இருந்தாலே கெளரவமாகப் பார்க்கப்பட்டது.

அதிலும் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் பசங்க வந்தால்,
அவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள் என்று எல்லோருமே சொல்லுவார்கள்.

இப்போது லோன் கிடைக்கிறது என்பதற்காக கார் வாங்கிவிட்டு, பிறகுதான் கற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால் அப்போது
சைக்கிள் ஓட்டத் தெரியாமல்,
அப்பாக்கள் சைக்கிள் வாங்கித் தரமாட்டார்கள்.
’முதல்ல சைக்கிள் ஓட்டக் கத்துக்கோ. அப்புறம் பாக்கலாம்’ என்று பதில் வரும்.

சைக்கிளே இல்லாமல் எப்படி ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்வது?

அதற்குத்தான் வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன.

இப்போதும்
உலக அதிசயமாக ஏதோவொரு ஊரில், இருக்கின்றன.
ஒருமணி நேரத்துக்கு அப்போதெல்லாம் 20 பைசா என்றிருக்கும்.
அதிலும் சின்ன சைக்கிள் கூட உண்டு.

கேரியர் வைத்த சைக்கிள்,
கேரியர்இல்லாத சைக்கிள்,
டைனமோ வைத்த சைக்கிள் என்று வாடகைக்கு விடுவார்கள்.

‘நோட்ல பேரும் டைமும் எழுதிக்கிட்டு எடுத்துட்டுப் போ’ என்று விசிறிக்கொண்டே,
தாத்தாவோ பாட்டியம்மாவோ சொல்லுவார்கள்.

உடனே வாடகை சைக்கிள் எடுக்க வந்த சின்னப்பசங்க முதல் பலரும்
10.20 மணிக்கு சைக்கிள் எடுத்தால், 10.30 என்று எழுதுவார்கள்.
அந்த ஒரு பத்து நிமிஷம்,
இன்னும் கொஞ்சம் ஓட்டலாமே என்கிற ஆசையின் வெளிப்பாடுதான் அது!

வாடகை சைக்கிள் எடுப்பவர்கள், நியூமரலாஜிப்படி அந்த எண் கொண்ட சைக்கிளை எடுப்பார்கள்.

’ஏழாம் நம்பர் வண்டி வெளியே போயிருக்குப்பா’ என்று சொன்னால், அந்த சைக்கிள் வரும்வரைக்கும் காத்திருப்பார்கள்.

இன்னும் சில காமெடிகளும் நடக்கும்.

சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு,
தெரிந்தவரிடம் அல்லது நண்பரிடம் அல்லது உறவினரிடம் பணம் கேட்கச் செல்வார்கள்.

பணம் கிடைக்காத நிலையில், சைக்கிளை விடவும் பணமிருக்காது. அதற்காக, நான்கைந்து நாட்கள் சைக்கிளை வைத்துக்கொண்டு சுற்றுபவர்களும் உண்டு.
பிறகு பணம் வந்ததும் சைக்கிளை ஒப்படைப்பார்கள்.

‘செகண்ட் ஹேண்ட்’ சைக்கிள் வாங்கிவிட்டாலே பசங்களுக்கு தலைகால் புரியாது.

அந்த வண்டியைத் துடைப்பது என்ன, தேங்காய் எண்ணெய் தொட்டு பாலீஷ் போடுவதென்ன,
உப்புத்தாள் கொண்டு,
வீல்கள் இரண்டையும் தேய்த்து பளிச்சென்று ஆக்குவதென்ன...
என எப்போதும் சைக்கிள் பற்றிய நினைவுகளுடனேயே இருப்பார்கள்.

எண்பதுகளில் ராலே சைக்கிள்தான் கதாநாயகன்.
ராலே சைக்கிள் கமல் என்றால் ஹெர்குலிஸ் சைக்கிள் ரஜினி.

நடுவே, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் மாதிரி அட்லஸ், ஹீரோ என்றெல்லாம் சைக்கிள்கள் இருந்தன.

‘ராபின்ஹூட்’ என்றொரு சைக்கிள். அந்த ஹேண்டில்பாரில் இருந்து சீட் வரை உள்ள தூரம், கம்பீரம் காட்டும்.

பத்துமுறை பெடல் செய்தால்,

ஒரு கி.மீ. தூரத்தை சுலபமாகத் தொடலாம் என்று
அந்த சைக்கிள் வைத்திருப்பவர்கள் பந்தா காட்டுவார்கள்.

ஆனால் அந்த சைக்கிள் பாண்டிச்சேரியில்தான் கிடைக்குமாம். சொல்லிச் சொல்லி அலட்டிக்கொள்வார்கள்.

டைனமோ இல்லையெனில்
போலீஸ் பிடித்த காலமும் உண்டு. அபராதம் கட்டவேண்டும்.
அதேபோல்,
சைக்கிள் செயின் அடிக்கடி கழன்றுகொள்ளும் போது,
அதை மாட்டுவதற்கு முயற்சிக்கும் போது, கையெல்லாம் மையாகியிருக்கும்.

‘இந்த சைக்கிளுக்கு ஒரு விமோசனம் வரமாட்டேங்கிது’ என்று அலுப்பும்சலிப்புமாக அந்த சைக்கிளுடனே பயணிப்பார்கள்.

‘ஓவராயிலிங்’. சைக்கிள் மருத்துவத்துக்கு இதுதான் பெயர்.

அக்குவேறு ஆணிவேறு என கழற்றி ஆயிலில் ஊறப்போட்டு,
அதைத் தேய்த்து, சுத்தம் செய்து, திரும்பவும் பொருத்தி,
ஹேண்டில் பார் கைப்பிடி,
சீட்டுக்கு முன்னே இருக்கும்
பார் பகுதிக்கு ஒரு கவர்,
சீட்டுக்கு குஷன் கவர்,

இரண்டு வீல்களுக்கும் நடுவே கலர்கலராய் வளையம் என சைக்கிளுக்கு அழகுப்படுத்துவது
ஒரு கலை.

இன்னும் சிலர்,
சின்னச்சின்ன மணிகளை,
வீல் ஸ்போக்ஸ் கம்பிகளுக்குள் வரிசையாக கோர்த்துவிடுவார்கள்.

டைனமோவுக்கு மஞ்சள் துண்டு
அல்லது மொத்தமாக மெத்மெத்தென்று ஒரு கவர் என்று மாட்டுவார்கள்.

இப்போது எதற்கெடுத்தாலும் பைக்கை எடுக்கிறோம்.
கறிவேப்பிலை வாங்கவே,
டூவீலரை எடுத்துக்கொண்டுதான் செல்கிறோம்.

அப்போது சைக்கிளில் சிட்டாகப் பறந்து, எட்டெல்லாம் போட்டு,
கெத்துக் காட்டுவோம்.

சைக்கிளின் ரெண்டுபக்கமும்
பெல் வைத்து,
வித்தியாச ஒலி எழுப்புவார்கள்.

மாற்றங்கள். வேகங்கள்.

சைக்கிளின் மதிப்பும் மரியாதையும் டூவீலர்களால் குறைந்துவிட்டன.

‘என்னடா மாப்ளே...
இன்னமும் சைக்கிளை ஓட்டிக்கிட்டிருக்கே.
இப்ப ஒரு சைக்கிள் நாலாயிரம் ரூபா.
இதுக்கு செகண்ட் ஹேண்ட்ல எக்ஸ் எல் சூப்பரே வாங்கிடலாம்’ என்றார்கள்.

அப்பா ஓட்டிய சைக்கிள்,
முதன்முதலில் வேலைக்குச் சென்ற போது வாங்கிய சைக்கிள் என்பதெல்லாம்
மியூஸியம் போல் வீட்டில் வைக்கப்பட்டு, பிறகு அவற்றுக்கு இடமில்லை என்று காயலான் கடைக்குப் போடப்பட்டன.

இப்போதெல்லாம் ஒரு வீட்டில்,
இரண்டு அல்லது மூன்று டூவீலர்கள் இருக்கின்றன.
அப்பாவுக்கு பைக்,
மனைவிக்கு ஆக்டீவா, 
மகளுக்கு ஸ்கூட்டி என்று நிற்கின்றன.

குழந்தைகளுக்கும் பசங்களுக்கும் குட்டியூண்டு சைக்கிள் கூட பரிதாபமாகக் காட்சி தருகின்றன.

வாகனத்துக்கும் நமக்குமான பந்தமோ செண்டிமெண்டோ இப்போதெல்லாம் இல்லை.

’ரெண்டு வருஷத்துக்கு ஒருதடவை வண்டியை மாத்திட்டே இருப்பேன். அதான் நமக்குக் கையைக் கடிக்காது’ என்று தோள் குலுக்கி புத்திசாலித்தனம் காட்டத் தொடங்கிவிட்டோம்.

காலச் சுழற்சியில்...
தொப்பையைக் குறைக்கவும்
சர்க்கரை அளவைக் குறைக்கவும் தினமும் சைக்கிளிங் செல்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள்.

ஸ்டாண்ட் போட்டு,
சைக்கிளிங் பண்ணுவதற்கு,
காத்தாட வண்டி ஓட்டலாம் என்று சைக்கிள் வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.

சைக்கிளுக்கும் நமக்குமான பந்தம்... பால்யத்தில் இருந்தே இரண்டறக் கலந்தது.
எத்தனை ராயல் என்பீல்டுகளும் யமஹாக்களும் இருந்தாலும்,
நமக்கும் நம் உடலுக்கும் எனர்ஜியையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிற சைக்கிளை, மறக்கமுடியுமா?

சைக்கிளுக்கு லைசென்ஸ் வில்லை முன்புறம் மாட்ட வேண்டும். அது இல்லை என்றால் போலீஸ் பிடித்து அபராதம் போடுவதும் உண்டு. சிலர் தொலைவிலேயே இது குறித்து ௭ச்சரிப்பதும் உண்டு. மாற்றுப்பாதையில் செல்வதும் உண்டு.

உங்கள் நினைவுகளை
கொஞ்சம் தட்டி விடுங்கள்.

Friday, June 14, 2019

MARRIAGE

A few interesting GLOBAL OPINIONS ABOUT MARRIAGE :

After marriage, husband and wife become two sides of a coin, they just can’t face each other, but still they stay together.
– Al Gore

By all means marry. If you get a good wife, you’ll be happy. If you get a bad one, you’ll become a philosopher.
– Socrates

Women inspire us to great things, and prevent us from achieving them.
– Mike Tyson

I had some words with my wife, and she had some paragraphs with me.
– Bill Clinton

“There’s a way of transferring funds that is even faster than electronic banking. It’s called marriage.”
– Michael Jordan

A good wife always forgives her husband when she’s wrong.
– Barack Obama

When you are in love,
Wonders happen.
But once you get married,
You wonder, what happened.

And the best one …

“Marriage is a beautiful forest where Brave Lions are killed by beautiful Deer”.