Saturday, October 19, 2019

Perfection is a Habit, not an Attitude!!


American Computer Giant IBM decided to have some parts manufactured in Japan on a trial basis. 

In the contract while writing specifications, they had set the standard that they will accept only three defective pieces per 10,000 pieces. Otherwise the whole consignment of 10000 parts would be rejected.

When the first consignment  came from Japan to IBM there was a letter accompanying it.

"We, the  Japanese people, had a hard time in understanding American business contract & practices. However, the three defective parts per 10,000 pieces have been separately manufactured at our end to meet the specifications of contract. 

Those three have been included in the consignment in a separate package mentioning - Defective pieces as required; not for use. Hope this meets your requirement."

Perfection is a Habit, not an Attitude!!

Friday, October 18, 2019

யாதும் ஊரே...... யாவரும் கேளிர்....

சிந்திக்க வைத்த ஒரு
புறநாணுறுப் பாடல் ஒன்று.....

அப்துல் கலாம், நரேந்திர மோடி ஆகிய இரு தலைவர்களும் ஐநா சபையில் இந்த பாடலை நினைவூட்டி பேசினார்கள்....
ஆனால் முதல் இரு வரிகள் மட்டுமே,
எல்லோருக்கும் பரிச்சயம்...
ஆனால்,இந்த பாடலின் எல்லா வரிகளும்
வாழ்வின் முழு தத்துவத்தசொல்கிறது..

வாழும் நெறியை, இவ்வளவு சிந்தித்து
எழுதிய கவி பிறந்த சமூகழ்த்தில்,
இந்த தமிழை தாய் மொழியாக கொண்டு, நாமூம் பிறந்து இருக்கிறோம் என்று நினைத்து மெய் சிலிர்க்கிறது மனம் நெகிழ்கிறது மிகவும் பெருமையாக இருக்கிறது 

பாடல்......

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....
சாதலும் புதுவது அன்றே;...
வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; 
மின்னோரு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம்...
ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

– கணியன் பூங்குன்றனார்


பாடலின் வரிகளும் ,புரிதல்களும்,
👇அடம்
"யாதும் ஊரே
யாவரும் கேளிர்...."
👇
எல்லா ஊரும் வஎனது ஊர்....
எல்லா மக்களும் எனக்கு உறவினர்
என்று நினைத்து, அன்பே வாழ்வின்
அடிப்படை, ஆதாரம் என் வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது.....சுகமானது..?..

"தீதும் நன்றும்
பிறர்தர வாரா...."
👇
தீமையும், நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை.......எனும் உண்மையை,
உணர்ந்தால்,சக மனிதர்களிடம், விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சம நிலை, சார்ந்த வாழ்வு கிட்டும்.....

"நோதலும் தனிதலும்
அவற்றோ ரன்ன...."
👇
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை....மனம் பக்குவப்பட்டால்,
அமைதி அங்கேயே கிட்டும்.....

"சாதல் புதுமை யில்லை...."
👇

பிறந்த நாள் ஒன்று உண்டெனில் .....
இறக்கும் நாளும் ஒன்று உண்டு....இறப்பு
புதியதல்ல....அது இயற்கையானது....
எல்லோருக்கும் பொதுவானது....இந்த உண்மையை உணர்ந்தும்,உள் வாங்கியும்
வாழ்ந்தால்....எதற்கும் அஞ்சாமல்,
வாழ்க்கையை,வாழும் வரை ரசிக்கலாம் 

"வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே.....
முனிவின்
இன்னாது என்றலும்
இலமே....."
👇
இந்த வாழ்க்கையில் எது, எவரக்கு
எப்போது, என்னாகும் என எவர்க்கும் தெரியாது.....இந்த வாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.....அதனால், இன்பம் வந்தால் மிக்க மகிழ்வதும் வேண்டாம்...
துன்பம் வந்தால்வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்.........
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து
இயல்பாய் வாழ்வோம்......

"மின்னோரு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ....."
👇

இந்த வானம் நெருப்பாய், மின்னலையும்
தருகிறது....நாம் வாழ மழையையும்
தருகிறது.....இயற்கை வழியில் அது,அது
அதன் பணியை செய்கிறது....

ஆற்று வெள்ளத்தில்,கற்களோடு, அடித்து முட்டி செல்லும் படகு போல, வாழ்க்கையும், சங்கடங்களில் அவர்,அவர் ஊழ்படி அதன் வழியில் அடி பட்டு
போய்கொண்டு இருக்கும்....இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...


"ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே...."
👇
இந்த தெளிவு பெற்றதால்....பெரிய நிலையில் உள்ள பெரியவர்களை பாத்து
மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்.
சிறிய நிலையில் உள்ள சிறியவர்களை
பார்த்து ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்....அவரவர் வாழ்வு அவரவர்க்கு.
அவற்றில் அவர்,அவர்கள் பெரியவர்கள்.

இதை விட வேறு எவர் வாழ்க்கை பாடத்தை சொல்லி தர முடியும்.......

Thursday, October 17, 2019

Baapu's Quotes

Non-violence is the greatest force at the disposal of mankind. It is mightier than the mightiest weapon of destruction.
(H,20-7-1935,pp180-1)

Nonviolence is the first article of my faith. It is also the last article of my creed. (Young India, 23 March 1922)

To call woman the weaker sex is a libel; it is man's injustice to woman. (Young India, Oct 4, 1930)

I attach the highest importance to quality, irrespective almost of quantity. I plead for quality and quality alone. (Young India, April 30, 1925)