Saturday, June 25, 2022

IYD - 2022 @ SMN





யார் பணக்காரன் ? யார் ஏழை ?

யார் பணக்காரன் ? யார் ஏழை ? இதென்ன கேள்வி ... படியுங்கள் தெரியும் புதிய கோணம். 

பணம் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் . கஷ்டப்படுபவன் ஏழை . அது தானே உங்கள் பதில் ? இந்த பதில் சரியா ? 

சம்பவம் 1 

ஒரு பெரிய சீமாட்டி ஒரு புடவைக் கடைக்கு செல்கிறாள் புடவை எடுக்க . " எனக்கு கொஞ்சம் பட்டுச்சேலைகள் காட்டுங்கள் . விலை மலிவாக இருக்கட்டும் . என் மகனுக்கு திருமணம் . என் வீட்டு வேலைக்காரிக்கு கொடுக்கவேண்டும் ... " என்கிறாள் . சேல்ஸ்கேர்ள் எடுத்து போட்ட புடவைகளில் மலிவானதாக ஒன்றை செலக்ட் செய்து பணத்தை கட்டிவிட்டு எடுத்துச் சென்றாள் . சற்று நேரம் கழித்து அந்த வேலைக்காரி வருகிறாள் . " என் முதலாளியம்மா பையனுக்கு கல்யாணம் . நல்ல சேலையா ஒன்னு அவங்களுக்கு எடுத்து கொடுக்கணும் . விலை கொஞ்சம் கூட இருந்தாலும் பரவாயில்லை . நல்ல டிசைன்ஸ் எடுத்துப் போடுங்க என்றாள்..

சம்பவம் 2 

ஒரு பெரிய இடத்துப் பெண், ஒருமுறை பிக்னிக்கிற்கு சென்ற இடத்தில ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தாள் . அவளது கைக்குழந்தை திடீரென பாலுக்காக அழ , ஹோட்டல் நிர்வாகத்திடம் " குழந்தைக்கு பால் கிடைக்குமா ? " என்றாள் . " எஸ் மேடம் ... கிடைக்கும் . ஒரு கப் நூறு ரூபாய் ஆகும் " என்று பதில் வந்தது . " பரவாயில்லை ... உடனே ஒரு கப் வேண்டும் " என்று கூறி ஆர்டர் செய்து பாலை வரழைத்தாள் . 

அவள் ஊருக்கு திரும்பிப் போகும்போது. 
 அவள் ஊருக்கு திரும்பிப் போகும்போது வழியில் மறுபடியும் குழந்தை பாலுக்காக அழ , சாலையோரம் இருந்த ஒரு டீக்கடையில் காரை நிறுத்தி , பால் கிடைக்குமா என்று விசாரித்தாள் . 
" பசும்பாலே இருக்கும்மா " என்று கூறி அக்கடைக்கார் , பசும்பால் கொடுத்தார் . " ரொம்ப தேங்க்ஸ்பா ... எவ்ளோ ஆச்சு ? " " பணம் வேண்டாம்மா ... குழந்தைங்க குடிக்கிற பாலுக்கு நான் காசு வாங்குறதில்லை " என்று பதில் சொன்னவர் , " இன்னும் வேணும்னாலும் வாங்கிக்கோங்க . போற வழியில குழந்தை அழுதா என்ன பண்ணுவீங்க ? " என்றார் பரிவுடன் . 

சம்பவம் 3 

அலுவலகத்துக்கு புறப்படும்போது தான் அந்த இளைஞன் கவனித்தான் . செருப்பு பிய்ந்துபோயிருந்தது . பிரதான சாலை வந்ததும் அந்த செருப்பை தைக்க செருப்பு தைப்பவரை தேடிச் சென்றான் . ஒரு நபர் சாலையோரம் ஒரு குடைக்கு கீழே செருப்புக்களை தைத்தபடி அமர்ந்திருந்தார் . 

வண்டியை அவர் முன் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி , செருப்பை அவர் முன் போட்டவன் , " இதை கொஞ்சம் தைச்சு கொடுங்க . புது செருப்பு . எப்படி பிஞ்சதுன்னு தெரியலே ... " ' எவ்ளோப்பா ஆகும் ? " செருப்பை வாங்கி ஆராய்ந்த அந்த தொழிலாளி , ' இருபது ரூபா ஆகும் சார் ... " " இருபது ரூபாயா ? பத்து ரூபாய் வாங்கிக்கோங்க .... * அந்த இளைஞரை சற்று தலையை | நிமிர்த்தி பார்த்தார் . கதிரவனின் கதிர்கள் சுட்டெரித்தது . சரியாக பார்க்க முடியவில்லை . " இருபதுக்கு கம்மி தைக்க முடியாது சார் ’ " என்ன இதுக்கு போய் இருபது ரூபாயா ? பதினைஞ்சு வாங்கிக்கோங்க ' " நான் கம்மியாத் தான் சொல்லியிருக்கேன் . சொல்யூஷன் போட்டு ஒட்டி தைக்கணும் . அப்போ தான் தையல் நிக்கும் " இளைஞனின் பேரம் தொடர்ந்துகொண்டிருந்தது .

 இதனிடையே ... டீ ஆர்டர் எடுக்க பக்கத்து டீக்கடை சிறுவன் வந்தான் . " ஒரு டீ கொண்டு வாப்பா ..... சார் டீ சாப்பிடுறீங்களா ?? அந்த இளைஞனின் பதிலுக்கு காத்திராமல், " சாருக்கும் ஒரு டீ சேர்த்து ரெண்டு டீ கொண்டுவாப்பா ... " என்றார் . " இல்லே ஐயா வேண்டாம் ... ! " பரவாயில்லை சார் ... சாப்பிடுங்க ... நல்லா இருக்கும் . இந்த ஏரியாவுல முப்பது வருஷமா இருக்குற கடை அது ... " சற்று நேரத்தில் சூடான டீ வந்தது . அந்தப் பெரியவரிடம் பத்து ரூபாய்க்கு பேரம் பேசிய அந்த இளைஞன் நெளிந்தபடி அந்த டீயை அருந்தினான் . 

செருப்பு தைத்து முடித்த பிறகு . பைசா கொடுக்கும்போது சாப்பிட்ட டீக்கும் சேர்த்து தர , அந்த பெரியவர் சொன்னார் ... " செருப்பு தைச்சதுக்கு மட்டும் காசு கொடுங்க ... டீக்கு வேண்டாம் ... என்னோட கஸ்டமர் நீங்க ... உங்களை உபசரிக்கிறது என்னோட கடமை .. " என்றார் . ( தாம்பரம் சானடோரியம் பேருந்து நிறுத்தம் அருகே உண்மையில் நடந்த சம்பவம் இது நம் வாசகர் ஒருவர் கவனித்த சம்பவம் !!! இங்கு யார் பணக்காரர் ? காரில் வத்து விலை குறைந்த புடயை வாங்கிச் சென்ற அந்த சீமாட்டியா அல்லது நடந்து வந்து விலையுயர்ந்த புடவையை தனது எஜமானிக்கு வாங்கிச் அவள் வீட்டு வேலைக்காரியா ?

குழந்தையின் பாலுக்கு கூட அறியாய விலை வைத்த அந்த ஸ்டார் ஓட்டல் மேனஜரா ? அல்லது குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு பணம் வேண்டாம் . என்று சொன்ன இந்த சாலையோர டீக்கடைக்காரரா ? செருப்பு தைப்பவரிடம் பத்து ரூபாய்க்கு பேரம் பேசிய பைக்கில் வந்த இளைஞரா அல்லது டீயை அவருக்கு கொடுத்து உபசரித்த செருப்பு தைப்பவாரா ? 

பணக்காரன் , ஏழை குறித்த தவறான மதிப்பீடுகள் ( WRONG DEFINITION ) ஆண்டாண்டு காலமாக நமது சிந்தனையில் ஊறிப்போயிருக்கிறது . நம்மால் இந்த உலகை மாற்றமுடியுமா என்று தெரியாது . குறைந்த பட்சம் இதை படிப்பவர்கள் மாற்றத்தை ஏற்படுத்தலாம் . அவர்கள் உலகை மாற்றுவார்கள் . பணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் பணக்காராகிவிடமுடியாது . அதே நேரம் , பணம் இல்லாததால் ஒருவர் ஏழையும் கிடையாது . பணத்திற்கான ஓட்டத்தில் நாம் மனிதர்களை பொருட்படுத்துவதில்லை . பணத்தை பெரிதாக கருதாத இதயங்களை கவனிக்க மறந்துவிடுகிறோம் .

தேவையுள்ளவர்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவுவோம் . அது தரும் மனநிறைவை பணம் நிச்சயம் தரமுடியாது ! தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை !