Wednesday, March 15, 2017

கோடிகள் குவிந்தாலும்......ஸ்டீவ் ஜாப்சின் இறுதி வாக்குமூலம்.

"நான் வணிகவுலகில் வெற்றியின் உச்சத்தைத் தொட்டிருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானதுதான்.

எப்படியிருந்தாலும் என்னுடைய பணிச்சுமைகளை எல்லாம் தாண்டி நானும் என் வாழ்க்கையில் ஒருசில மகிழ்ச்சியான தருணங்களைச் சந்தித்திருக்கிறேன்; உணர்ந்திருக்கிறேன் அனுபவித்திருக்கிறேன். பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை என் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில்தான் 
அறிந்துகொண்டேன். இதோ !  இந்த மரணத்தருவாயில், நோய்ப்படுக்கையில் படுத்துக்கொண்டு என் முழுவாழ்க்கையையும்  திரும்பிப் பார்க்கும் இந்தத் தருணத்தில் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ், சொத்து, செல்வாக்கு  எல்லாமே செல்லாக்காசாக, பொருளற்றதாக மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்பதை உளமார உணர்கிறேன்.
இந்த இருளில் என் உயிரைத் தக்கவைக்கப் ராடிக்கொண்டிருக்கும் 
மருத்துவ இயந்திரங்களின் மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது.

கடவுளின் மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக - மிகஅருகில் உணர்கிறேன். வாழ்க்கையில் நாம் வாழ்வதற்குப் போதுமான பணத்தை ஈட்டிய பின், பணத்திற்குத் தொடர்பில்லாத - மனத்திற்குத் தொடர்புடைய சிலவற்றையும்  சம்பாதிக்கத் தொடங்கவேண்டும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.
அவை உறவாகவோ, நட்பாகவோ, கலையாகவோ, அறமாகவோ,  
நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம்.

அவைதான் வாழ்வில் மிகமிக இன்றியமையாதன என்பதை - காலங்கடந்து இப்போது நான் உணர்கிறேன். அதைவிட்டுப் பணத்தை மட்டுமே நோக்கமாகக்  கொண்டு ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது, என் வாழ்க்கையை போல.

கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனத்திலும்  இருக்கும் அன்பை உணரச்செய்யும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார், பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும் அனைத்து மகிழ்ச்சியும்  வெறும்  மாயைகளே!

நான் சம்பாதித்த பணம் எதையும் என்னுடன் கொண்டுபோக முடியாது. நான் மகிழ்ந்திருந்த என் நினைவுகள் மட்டுமே இப்போது என்னுடன் இருக்கின்றன.

அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும்.  வாழ்க்கைக்கு  எந்த எல்லைகளுமில்லை.

எங்குச் செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்குச் செல்லுங்கள்.

தொட நினைக்கும் உயரத்தை - உச்சத்தைத்  தொட முயலுங்கள். நீங்கள் வெற்றியடைவது உங்கள் எண்ணத்திலும் கைகளிலும்தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் அந்தப் பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரையும் வாங்கிகொள்ளுமாறு செய்யமுடியாது; முடியவே முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால் மீண்டும் வாங்கிவிடலாம்.

ஆனால் நீங்கள் தொலைத்து,  அதைப் பணத்தால் வாங்கமுடியாது என்ற ஒன்று உண்டென்றால் அது உங்கள் வாழ்க்கைதான்.

வாழ்க்கையில் எந்தக் கட்டத்தில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை, இப்போதாவது வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.

நாம் நடித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களின் குடும்பத்தினருக்கு, பெற்றோர்க்கு, மனைவிக்கு, மக்களுக்கு, உறவினர்க்கு, நண்பர்களுக்கு, இயலாதவர்களுக்கு  அன்பை வாரிவாரி வழங்குங்கள்.

உங்களை நீங்கள் எப்பொழுதும்  மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள். நேசியுங்கள். நேசித்துக்கொண்டே இருங்கள்" மரணப்படுக்கையில் ஸ்டீவ்..

Apple Inc.,
Founder
U.S.A.

கோடிகள் குவிந்தாலும்......ஸ்டீவ் ஜாப்சின் இறுதி வாக்குமூலம்.


"நான் வணிகவுலகில்
வெற்றியின் உச்சத்தைத்
தொட்டிருக்கிறேன்.
பிறரின் பார்வையில்
என் வாழ்க்கை வெற்றிகரமானதுதான்.
எப்படியிருந்தாலும்
என்னுடைய பணிச்சுமைகளை
எல்லாம் தாண்டி
நானும் என் வாழ்க்கையில்
ஒருசில மகிழ்ச்சியான தருணங்களைச்  சந்தித்திருக்கிறேன்; உணர்ந்திருக்கிறேன் அனுபவித்திருக்கிறேன்.
பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை
என் வாழ்க்கையின்
இறுதிக்கட்டத்தில்தான்
அறிந்துகொண்டேன்.
இதோ !  இந்த மரணத்தருவாயில், நோய்ப்படுக்கையில் படுத்துக்கொண்டு
என் முழுவாழ்க்கையையும்
திரும்பிப் பார்க்கும் இந்தத் தருணத்தில் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ், சொத்து, செல்வாக்கு  எல்லாமே செல்லாக்காசாக, பொருளற்றதாக மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்பதை உளமார உணர்கிறேன்.
இந்த இருளில்
என் உயிரைத் தக்கவைக்கப் போராடிக்கொண்டிருக்கும்
மருத்துவ இயந்திரங்களின்
மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது.
கடவுளின்
மூச்சுக்காற்றையும் மரணத்தையும்
மிக - மிகஅருகில் உணர்கிறேன்.
வாழ்க்கையில் நாம் வாழ்வதற்குப் போதுமான பணத்தை ஈட்டிய பின், பணத்திற்குத் தொடர்பில்லாத - மனத்திற்குத் தொடர்புடைய சிலவற்றையும்  சம்பாதிக்கத் தொடங்கவேண்டும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.
அவை
உறவாகவோ,
நட்பாகவோ,
கலையாகவோ,
அறமாகவோ, 
நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம்.
அவைதான் வாழ்வில்
மிகமிக இன்றியமையாதன என்பதை - காலங்கடந்து
இப்போது நான் உணர்கிறேன்.
அதைவிட்டுப் பணத்தை மட்டுமே நோக்கமாகக்  கொண்டு
ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது,
என் வாழ்க்கையை போல.
கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனத்திலும்  இருக்கும் அன்பை உணரச்செய்யும்
ஆற்றலைக் கொடுத்திருக்கிறார்,
பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும்
அனைத்து மகிழ்ச்சியும் 
வெறும்  மாயைகளே!

நான் சம்பாதித்த பணம் எதையும் என்னுடன் கொண்டுபோக முடியாது.

நான் மகிழ்ந்திருந்த
என் நினைவுகள் மட்டுமே
இப்போது என்னுடன் இருக்கின்றன.

அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும்.
வாழ்க்கைக்கு
எந்த எல்லைகளுமில்லை.

எங்குச் செல்ல ஆசைப்படுகிறீர்களோ
அங்குச் செல்லுங்கள்.

தொட நினைக்கும் உயரத்தை - உச்சத்தைத்  தொட முயலுங்கள்.

நீங்கள் வெற்றியடைவது
உங்கள் எண்ணத்திலும்
கைகளிலும்தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து
நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம்,
ஆனால் அந்தப் பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரையும் வாங்கிகொள்ளுமாறு செய்யமுடியாது; முடியவே முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால்
மீண்டும் வாங்கிவிடலாம்.

ஆனால் நீங்கள் தொலைத்து, 
அதைப் பணத்தால்
வாங்கமுடியாது என்ற ஒன்று உண்டென்றால்
அது உங்கள் வாழ்க்கைதான்.

வாழ்க்கையில் எந்தக் கட்டத்தில்
நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை ,
இப்போதாவது வாழ்க்கையை
வாழத் தொடங்குங்கள்.

நாம் நடித்துக்கொண்டிருக்கும்
வாழ்க்கை எனும் நாடகத்தின்
திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களின்
குடும்பத்தினருக்கு,
பெற்றோர்க்கு,
மனைவிக்கு,
மக்களுக்கு,
உறவினர்க்கு,
நண்பர்களுக்கு,
இயலாதவர்களுக்கு 
அன்பை வாரிவாரி வழங்குங்கள்.

உங்களை நீங்கள் எப்பொழுதும்  மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள். நேசியுங்கள். நேசித்துக்கொண்டே இருங்கள்"

மரணப்படுக்கையில் ஸ்டீவ்..
Apple Inc.,
Founder
U.S.A.

Saturday, February 11, 2017

Beauty of Human Relations.

A man married a beautiful girl. He loved her very much. One day she developed a skin disease. Slowly she started to lose her beauty. It so happened that one day her husband left for a tour. While returning he met with an accident and lost his eyesight. However their married life continued as usual. But as days passed she lost her beauty gradually. Blind husband did not know this and there  was not any difference in their married life. He continued to love her and she also loved him very much. 

One day she died. Her death brought him great sorrow. He finished all her last rites and wanted to leave that town. A man from behind called and said, now how will you be able to walk all alone? All these days your wife used to help you.

He replied, I am not blind. I was acting,  because if she knew l could see her ugliness it would have pained her more than her disease. So I pretended to be blind. She was a very good wife. I only wanted to keep her happy.


Moral:- Some times it is good for us to act blind and ignore one another's short comings, in order to be happy.

No matter how many times the teeth bite the tongue, they still stay together in one mouth. That's the spirit of FORGIVENESS. Even though the eyes don't see each other, they see things together, blink simultaneously and cry together. That's UNITY." May the Lord grant us all the spirit of forgiveness and togetherness.

Alone I can 'Say' but together we can 'talk'.
Alone I can 'Enjoy' but together we can 'celebrate'.
Alone I can 'Smile' but together we can 'Laugh'.

That's the BEAUTY of Human Relations. We are nothing without each other. STAY CONNECTED

The razor blade is sharp but can't cut a tree; the axe is strong but can't cut the hair.

Moral:- Everyone is important according to his/her unique purpose,Never look down on anyone unless you are admiring their shoes.

Saturday, January 14, 2017

18th Duck..

A father left 17 ducks as asset for his Three Sons.

When the Father passed away, his sons opened up the will.

The Will of the Father stated that the Eldest son should get Half of 17 ducks,

The Middle Son should be given 1/3rd of 17 ducks,

Youngest Son should be given 1/9th of the 17 ducks.

As it is not possible to divide 17 into half or 17 by 3 or 17 by 9, the sons started to fight with each other.

So, they decided to go to a wise man who lives in a cave.

The wise man listened patiently about the Will. The wise man, after giving this thought, brought one duck of his own & added the same to 17. That increased the total to 18 ducks.

Now, he started reading the deceased father’s will.

Half of 18 = 9.
So he gave 9 ducks
to the eldest son.

1/3rd of 18 = 6.
So he gave 6 ducks
to the middle son.

1/9th of 18 = 2.
So he gave 2 ducks
to the youngest son.

Now add this up :
9 + 6 + 2 = 17 &
This leaves 1 duck
which the wise man took back.

MORAL : The attitude of negotiation & problem solving is to find the 18th duck i.e. the common ground. Once a person is able to find the common ground, the issue is resolved. It is difficult at times.

However, to reach a solution, the first step is to believe that there is a solution. If we think that there is no solution, we won’t be able to reach any.

A very interesting management lesson.

Friday, January 13, 2017

This is life.. இதுதான் வாழ்க்கை.


ஒரு கிராமம். சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.

அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது. 

’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.

ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.

முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் கையை பிடித்துக் கொண்டது .

”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க,

“அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.

சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன.

அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.

ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.

கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.

‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும்,

’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல்.

கையை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது.

உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் கையை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை.

முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’ என்கிறது.

சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது, வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது.

கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல்.

தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர்.

சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பாற்றுவதற்குள் முயலை நாய் கொன்றுவிடுகிறது.

உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.

கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.


உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் அவனை குழப்பிவிடுகிறது.

இதுதான் உலகமா? 

இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!.


முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!.

அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.

வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை ....

Wednesday, January 11, 2017

Real Happyness... உண்மையான மகிழ்ச்சி...

ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்,ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள்,

அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்."

கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார்......

அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்ல சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார்.

பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..

" என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்லை.யாரிடமும் சிரிக்க முடியவில்லை. என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.....


இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழுது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது.

வெளியே சில்லென்று மழை பெய்துக்கொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக்கொடுத்தது.

கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன்.நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷய்ம் எனக்கு சந்தோஷமளிக்கிறது எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.

அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன்.

இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி அவர்தம் மகிழ நானும் அதிகமகிழ்வுற்றேன்.


இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.

மகிழ்ச்சி என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்."


இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள். அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால் வாங்க முடியாத விஷயம் அவளிடம் இல்லை.

வாழ்க்கையின் அழகு என்பது

நீ
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்
என்பதில் இல்லை...
உன்னால் அடுத்தவர்
எவ்வளவு மகிழ்ச்சி ஆகின்றார்க்ள்
என்பதிலேயே இருக்கிறது...
மகிழ்ச்சி என்பது
போய் சேரும் இடம் அல்ல
அது
ஒரு பயணம்...
மகிழ்ச்சி என்பது
எதிர்காலம் இல்லை
அது நிகழ்காலம்...
மகிழ்ச்சி என்பது
ஏற்றுக்கொள்வது அல்ல
அது
ஒரு முடிவு...
நீ என்ன வைத்திருக்கிறாய்
என்பதில் இல்லை
மகிழ்ச்சி...
நீ
யார் என்பதில் தான் மகிழ்ச்சி !!!


Spinach..... கீரை

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.

🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.

🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.

🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.

🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.

🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.

🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.

🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.

🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.

🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.

🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.

🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.

🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.

🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.

🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.

🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.

🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும்.