Saturday, August 18, 2018

சுகம்!!!!!

🍁சுகம்!!!!!🍁

அழுவதுக் கூடச் சுகம் தான்
அழவைத்தவரே அருகில் இருந்து
சமாதானம் செய்தால்...🌹🍁

காத்திருப்பது கூடச் சுகம் தான்
காக்கவைத்தவர் அதற்கு தகுதி
உடையவரானால்..🌹🍁

பிரிவு கூடச் சுகம் தான்
பிருந்திருந்த காலம் அன்பை
இன்னும் ஆழமாக்கினால்..🌹🍁

சண்டைக் கூடச் சுகம் தான்
சட்டென முடிவுக்கு கொண்டு வரும்
சகிப்புத் தன்மை இருந்துவிட்டால்..🌹🍁

பொய்கள் கூடச் சுகம் தான் கேட்பவர்
முகத்தில் புன்னகையை மட்டும்
வரவழைத்தால்..🌹🍁

ஆத்திரம் கூடச் சுகம் தான் உரிமையையும்
அக்கறையையும் மட்டும்
வெளிப் படுத்தினால்.. 🌹🍁

விட்டுக் கொடுப்பது கூடச் சுகம் தான்
விவாதத்தை விட உயர்ந்தது உறவு
என்றப் புரிதல் இருந்துவிட்டால்..🌹🍁

துன்பம் கூடச் சுகம் தான்
உண்மையான அன்புக் கொண்ட நெஞ்சத்தை
உணர்ந்துக் கொள்ள உதவினால் ..🌹🍁

தோல்விக் கூடச் சுகம் தான்
முயற்சியின் தீவிரத்தை இன்னும்
அதிகப் படுத்தினால்..🌹🍁

தவறுக் கூடச் சுகம் தான்
தவறாமல் தவறிலிருந்து பாடம்
கற்றுக் கொண்டால்..🌹🍁

மொத்தத்தில் வாழ்வில் எல்லாம் சுகம் தான்
எதிர்மறையில் இருக்கும் நேர்மறையைத்
தேடித் தெரிந்து நம்மைத் தேற்றிக் கொண்டால்...🌹🍁

No comments: