Wednesday, December 23, 2020

புத்தகங்கள்.

ஒரு கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது,
ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் மகாத்மா...

தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு...

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிற தென்றாராம் பெட்ரண்ட் ரஸல்...

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்...

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா....

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்...

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்...

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்..

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்...

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்...

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன்.
ஆபிரகாம் லிங்கன்...

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள் அவனே எனது வழிகாட்டி
ஜூலியஸ் சீசர்...

உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக் கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
டெஸ்கார்டஸ்...

போதும் என்று நொந்து போய், புது வாழ்வைத்தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
இங்கர்சால்...

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
பிரான்சிஸ் பேக்கன்...

புரட்சிப் பாதையில் கைத் துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்...

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்...

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்...

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
மாசேதுங்...

வாசிக்கும் பழக்கம் ஓர் மனிதனை முழு மனிதனாக மாற்றிவிடும்...

உலகில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்கள் பலரும் நூல்கள் வழியாகத் தான் வாழ்வின் வெளிச்சத்தை நோக்கி பயணித்தனர்...

Thursday, October 22, 2020

இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம்


இந்தியாவின் "முதல் நடமாடும் நூலகம்", 1931-ம் ஆண்டு அக்போபர் 21 (21.10.1931) அன்று, மன்னார்குடி மேலவாசல் கிராமத்தில் துவக்கப்பட்டது. எஸ்.வி.கனகசபை பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்ட இந்நூலகம்,நூலக தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.

முதியோர் கல்வியை இலக்காகக் கொண்டு, எளிய தமிழில், தோட்டக்கலை, தேனீ வளர்ப்பு, குடிசைத்தொழில் மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் முறைகளைப் பற்றிய குறிப்புகளுடன் புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டு நடமாடும் நூலகத்தின் மூலம் விநியோகம் செய்யப்பட்டன.

மன்னார்குடி மற்றும் 12 மைல் சுற்றுவட்டார கிராமவாசிகளின் கல்வி நலனிற்காக கௌமார குருகுலம் நிறுவப்பட்டது. நடமாடும் நூலகத்தின் மூலம் 95 கிராமக் கிளைகளுக்கு இலவசமாக புத்தகங்கள் கொடுத்து வாங்கப்பட்டன. சித்திரை, ஐப்பசி மாதங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு சிறப்பு பள்ளிக்கூடம் மூலம் கல்வி போதிக்கப்பட்டது.

மன்னார்குடியின் பெருமைகளில் ஒன்றான இந்நடமாடும் நூலகத் திட்டம், பின்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் துவக்கப்பட்டது.

Saturday, October 17, 2020

பாரதியைக் கொண்டாடுங்கள்! - கண்ணதாசன்

பாரதியோடு பலர் என்னை ஒப்பிடும் போது, எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும்.

என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட செயற்கைப் பாடல்களும் உண்டு.
பாரதி முழுக்க, முழுக்கத் தன்னுணர்வுக் கவிஞன்...”

இப்படி மனம் திறந்து பாரதியை பாராட்டியவர் கவியரசர் கண்ணதாசன்…

இதோ..

இன்னும் கூட பாரதியார் பற்றி கவியரசு கண்ணதாசன்…

“இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள் ரசிக்கிறார்கள், பாடுகிறார்கள். 

அதைக் கண்ணால் பார்க்கும் போதும், காதால் கேட்கும் போதும் எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

அதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன்... 

அந்த மாதிரி ஒரு வாய்ப்பே இல்லாமற் போனவன் பாரதி!

தன் கவிதையை யார் ரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவன் பாடினான்... 

“காலம் எப்படி வரவேற்கும்; யார் எப்படி இரசிப்பார்கள்?” என்பது தெரியாமலேயே தனக்குத் தோன்றியதை எல்லாம் பாடினான். அதனால், எந்தக் கவிதையைப் பாடினாலும் தேன் வந்து பாய்கிறது காதுகளில்... 

பாரதி ஒரு ஜாதிக்கு, ஒரு மதத்துக்கு உரியவனல்ல; அவன் சர்வ சமரசவாதி. அவன் வங்காளத்தில் பிறந்து இருந்தால் நோபல் பரிசு தாகூருக்குப் போயிருக்காது.

துர்பாக்கியம் பிடித்த தமிழகமே! பாரதியைக் கொண்டாடு! அதன் மூலம் பாரதத்தை நீ கொண்டாடுகிறாய், தேச பக்தியைக் கொண்டாடுகிறாய், தெய்வ பக்தியைக் கொண்டாடுகிறாய், தமிழ் மொழியைக் கொண்டாடுகிறாய்,

பாரதியைக் கொண்டாட முடியாதவர்களுக்கு, தங்களைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதை இல்லை!

- கவிஞர்.கண்ணதாசன்.

மகாகக்கவி பாரதியாருக்கு இந்த சமூகம் தந்த மரியாதை

பாரதி உயிரோடு இருந்த போது அவரையும் அவரின் குடும்பத்தையும் வறுமையின் கோரப் பிடியில் உழல விட்டு, கண்டும் காணாது போலிருந்தது அவரைச் சுற்றி வாழ்ந்திருந்த சமூகம்.

குனிந்த தலை நிமிராமல் வரும் மனைவி செல்லம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு பீடு நடை போட்டு வரும் பாரதியை பைத்தியக்காரன் என செல்லம்மாள் காது படவே சத்தம் போட்டுச் சொல்லி கேலி செய்தது அந்த சமூகம்.

பாரதி சாதம் சாப்பிடும் முறையே விசித்திரமாக இருக்கும்! 

சாப்பிட உட்காரும் போதும் ஒரு மஹாராஜா உட்காருவது போல தரையில் உட்காருவார்.

கட்டை விரல் நடுவிரல் மற்றும் மோதிர விரல் மட்டுமே பயன்படுத்துவார். 

அவருக்குப் பிடித்த உணவே சுட்ட அப்பளம் தான். வறுமையின் கோரப் பிடியினால் மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே ஏதாவது காய்கறி இருக்கும். மற்ற நாட்களில் சுட்ட அப்பளம் தான்.

பாரதி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு உடல் நலிவுற்றுக் காலமானதாக இக்கணம் வரை பள்ளிப்பாடங்களிலும் தவறாகச் சொல்லப்படுகிறது.

அத்துயர நாளில் பாரதி யானைக்குத் தேங்காய் பழம் கொடுக்கச் சென்ற போது பலரும் தடுத்து எச்சரித்தார்கள்.

ஆனால் பாரதி நெருங்கிய போது யானை அமைதியாகவே இருந்தது.

ஆனால் துதிக்கையால் தேங்காய் பழத்தைப் பற்றாமல் பாரதியின் இடுப்புக்கு மேலே சுற்றி தன் நான்கு கால்களுக்கும் நடுவே வீசியது..

கண்ணிமைக்கும் நேரத்தில் குவளைக்கண்ணன் என்ற பாரதியின் சிநேகிதரான அந்த புண்ணிய ஆத்மா, தன் உயிரையும் பொருட்படுத்தாது யானையின் கால்களுக்கு நடுவே புகுந்து, குனிந்து பாரதியை தன் தோளில் போட்டுக் கொண்டார்.

யானை நினைத்திருந்தால் தன் கால்களுக்கு நடுவே இருக்கும் இருவரையும் அக்கணமே நசுக்கி சட்னி செய்திருக்க முடியும்.

ஆனால் தான் பண்ணிய மாபெரும் தவறு அதற்கு உரைத்ததோ என்னவோ அதற்குப் பிறகு அதனிடத்தில் எந்த சலனமும் இல்லை.

கீழே பாரதி விழுந்த போது முண்டாசு இருந்ததால் பின்புற மண்டை தப்பியது.
ஆனால் கட்டாந்தரையில் விழுந்ததில் முகம், மூக்கு, தோள்பட்டை, முழங்கை மற்றும் முழங்கால்களில் பலத்த ரத்தக்காயத்தோடு பாரதி மயங்கினார்.

காயம்பட்ட கவிஞனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நண்பர் சீனுவாசாச்சாரியார் கொண்டு போய்ச் சேர்த்தார்.

பகைவனுக்கும் அருளச் சொன்ன பாரதி தன்னைப் பழுதாக்கிய யானையை பழித்தாரா? இல்லவே இல்லை!

கொஞ்சம் நினைவு வந்ததும் சொன்னாராம், 
''யானை முகவரி தெரியாமல் என்னிடம் மோதி விட்டது. என்ன இருந்தாலும் என்னிடம் இரக்கம் அதிகம் தான். இல்லையென்றால் என்னை உயிரோடு விட்டிருக்குமா?''

அங்கங்களின் காயம் ஆறத் தொடங்கியது.
பாரதியும் 
சுதேசமித்திரன் ஆபீஸூக்கு ஐந்தாறு மாதங்கள் சிரமத்தோடு சென்று வந்தார்.

காயம் ஆறியதே தவிர, அந்த அதிர்ச்சியோ அவசர வியாதிகளை அழைத்து வந்தது.

சீதபேதி பாரதியின் உடலைச் சிதைக்கத் தொடங்கியது.

மீண்டும் அதே ராயப்பேட்டை ஆஸ்பத்திரி.

செப்டம்பர் 11, அதிகாலை இரண்டு மணி.

வெளியேறத் துடிக்கும் உயிரோ பாரதியின் உடலை உதைத்துக் கொண்டிருக்கிறது.

சில நிமிடங்களில் அந்த 39 வருஷக்
கவிதைக்கு மரணம் முற்றுப்புள்ளி வைத்தது.

ஒரு யுக எரிமலை எப்படி அணைந்ததோ?

ஒரு ஞானக்கடல் எப்படித் தான் வற்றியதோ?

குவளைக்கண்ணன், லட்சுமண ஐயர், ஹரிஹர சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா, நெஞ்சு கனத்துப் போன நெல்லையப்பர் ஐவரின் தோள்களும் அந்த ஞான சூரியனின் சடலத்தைச் சுமந்து கிருஷ்ணாம்பேட்டை மயானம் நோக்கி நடந்தன.

இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கையோ வெறும் பதினொன்று, சுமந்தவர்களையும் சேர்த்து.

மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ?

அவர் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் வரவில்லையே.

இது புலிகளை மதிக்காத புழுக்களின் தேசமன்றோ.

தூக்கிச் சென்றவர்களோ தோளின் சுமையை இறக்கி வைத்தார்கள். ஆனால் துயரத்தின் சுமையை?

எரிப்பதற்கு முன் ஒரு இரங்கல் கூட்டம்...

பாரதியின் கீர்த்தியை சுரேந்திரநாத் ஆர்யா சொல்லி முடிக்க, ஹரிஹர சர்மா சிதைக்குத் தீ மூட்டுகிறார்.

ஓராயிரம் கவிதைகளை 
உச்சரித்த உதடுகளை
ஞான வெளிச்சம் வீசிய 
அந்த தீட்சண்ய விழிகளை
ரத்தம் வற்றினாலும் 
கற்பனை வற்றாத 
அந்த இதயத்தை... 

தேடித்தேடித் தின்றன 
தீயின் நாவுகள்.

மகா கவிஞனே! 
எட்டையபுரத்து கொட்டு முரசே!

உன்னைப் பற்றி உள்ளூரே புரிந்து 
கொள்ளாத போது, 
இவ்வுலகதிற்குப் புரிவது ஏது?

உன் எழுத்துக்களை வாழ்க்கைப் படுத்தினால் அன்றி உன் பெயரை உச்சரிக்கக் கூட எமக்கு யோக்கியதை தான் ஏது?

Friday, October 9, 2020

முதல் மரியாதை - திரைக்கு பின்னால்.

"எப்படியும் இந்தப் படம் ஓடாது. 
அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு..."

என்று பாரதிராஜாவிடம் பணம் 
வாங்க மறுத்தாா் இளையராஜா !

முதல் மரியாதை 1985 ஆம் 
ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் . 

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.!

இந்தப் படம் வெளியாகி சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருதையும் , பாடலாசிரியருக்காக கவிஞர் வைரமுத்துக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது . 

ஃபிலிம்ஃபேர் நடிகர் திலகம் சிவாஜியையும் ராதாவையும் சிறந்த நடிகர் , நடிகையாகத் தேர்வு செய்தது .

கல்யாணமான ஒரு நடுத்தர வயது 
ஆள் , இளம்பெண்ணோடு காதல் கொள்கிறார் என்பது அப்போதைய காலகட்டத்தில் எவருமே எதிர்பார்க்காத ஒரு முயற்சி ! 

அந்த வயது ஆட்கள் ஒரே நாளில் அடுத்தடுத்த காட்சிகளுக்குப் போய் கண்ணீர் சிந்திய கதையெல்லாம் உண்டு .

திருப்பிய பக்கமெல்லாம் 
சிவாஜியின் நடையும் , ராதாவின் சிரிப்பும் பற்றித்தான் பேச்சு ! அந்தச் சிரிப்புக்குச் சொந்தக்காரர் பின்னணி குரல் கொடுத்த நடிகை ராதிகா என்பது அப்போது எவருக்கும் தெரியாது . 

காதல் தோல்வியடைந்த இளசுகள் 
மைக் செட் போடும் அண்ணன்களிடம் போய் கெஞ்சிக் கூத்தாடி முதல் மரியாதை பாடல்கள் மறுபடியும் போடச்சொல்லிக் கெஞ்சுவார்கள் . 

ஒட்டு மொத்த திரையுலகமும் 
இயக்குநர் பாரதிராஜாவை அண்ணாந்து  பார்க்க வைத்தது . இவை யாவுமே படம் வெளிவந்த பிறகு நடந்த வரலாற்றுச் சுவடு . 

ஆனால், படம் தொடங்கி ரிலீஸ் ஆகிறவரை பாரதிராஜா பட்டபாடு சொல்லி மாளாது !

தஸ்தாவெஸ்கி ! உலகத்தின் 
மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான இவர் கதையை வைத்து முதல் மரியாதை படத்திற்கான கரு கதாசிரியர் ஆர்‌. செல்வராஜ் மூளையில் உதித்தது . 

இந்த செல்வராஜ் சிறுவயது முதலே பாரதிராஜா , இளையராஜா இவர்களோடு நெருங்கிப் பழகி வந்தவர் . இவர் மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் என். சங்கரய்யாவின் அண்ணன் மகன் . `

'குற்றமும் தண்டனையும்', 'கரமசோவ் சகோதரர்கள்’ என்று தஸ்தாவெஸ்கி எழுதிய எல்லாம் இன்றும் கொண்டாடப்படும் ஆகச் சிறந்த படைப்புகள் . 

அரசைக் கடுமையாக எதிர்த்து 
எழுதக் கூடியவர் தஸ்தாவெஸ்கி . 
அவர் வறுமையில் வாடினாலும் 
அரசை எதிர்த்துத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார் . 

எனவே அவருக்கு மரண தண்டனையை விதித்து அரசு உத்தரவிட்டது.  

தூக்குமேடைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட இன்னும் மூன்று நாட்களே இருந்தன . அவருடைய எழுத்தை வாசிக்கும் ஆதரவாளர்கள் சிலர் அதிகார மையங்களில் இருந்தனர் . 

எனவே, அரசிடம் 'அவரை ஒருமுறை மன்னித்துவிடலாம்’ என்று  கோரிக்கை வைத்தார்கள் . அது ஏற்கப்படவில்லை . 

பொதுவாக மரண தண்டனை கைதிகளுக்கெனச் சில விதிமுறைகள் இருந்தன . அதில் முக்கியமானது கைதியின் உடல் எடை குறையக் கூடாது.. எடை குறைந்தால் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டுவிடும் . 

அப்படியாக , தூக்கிலிடும் நாளுக்கு முன்பாக தஸ்தாவெஸ்கியின் எடையைப் பார்த்தபோது , அவர் எடை குறைந்திருந்தார் . அதனால் , அவர் தூக்கிலிடப்படவில்லை . பின்னர் , அந்தத் தண்டனையிலிருந்து அவர் விடுதலையானார் . 

அதன் பிறகு மீண்டும் அவர் 
கடனால் கைதாகும் சூழல் ஏற்பட்டது . இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார் . 

கடனால் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க ...... மூன்று மாதங்களுக்குள் அவர் ஒரு நாவலை எழுதித் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு நீதிமன்றத் தரப்பில் ஒரு வாய்ப்பு தரப்பட்டது . 

தஸ்தாவெஸ்கி அப்போது ஓர் உதவியாளர் மட்டும் தேவை என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார் . அவருக்கு அன்னா என்கிற இளம்பெண்ணை உதவியாளராக அனுப்பி வைத்தனர் . 

அந்தப் பெண்ணுக்கு 
தஸ்தாவெஸ்கியை தொடக்கத்தில் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை .  'என்னடா ஒரு கிழவன்கிட்டே வந்து மாட்டிக்கிட்டோமே ..’ என்று நொந்து போனார் இளம்பெண் அன்னா . 

வேறு வேலைக்குச் செல்லவும் 
முயற்சி செய்துகொண்டிருந்தார் . 
இந்தச் சூழலில் தஸ்தாவெஸ்கி தனது நாவலை சொல்லச் சொல்ல .... அந்தப் பெண் டைப் செய்து கொண்டே வந்தார் .

மெல்ல மெல்ல அந்தப் 
பெண்ணுக்கு தஸ்தாவெஸ்கியின் எழுத்துப் பிடித்துப் போகிறது . காலப்போக்கில அவரது எழுத்தில் மயங்கிப் போகிறாள் . 

குறிப்பிட்ட நாளுக்குள் நாவலை முடிக்காவிட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்பதால் , அந்தப் பெண் இரவு பகல் பாராமல் அந்த நாவலை டைப் செய்து முடிக்கிறார் . 

அந்த நாவல்தான் `குற்றமும் தண்டனையும்’. அதன்பிறகு அவர் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார் ; கடனையும் அடைத்துவிடுகிறார் . 

அதன்பின் , அன்னாவுக்கு தஸ்தாவெஸ்கியின் மேல் அன்பு மலர்கிறது . அவருடைய எழுத்துகளை டைப் செய்வதில் ஆர்வமாகிறாள் . அதனால், தனக்குத் திருமணமே வேண்டாம் என்றும் மறுத்துவிடுகிறாள் . 

தஸ்தாவெஸ்கிக்கு அவளது நட்பு பிடித்துப் போக , அவரும் அவள் மீது அன்பு செலுத்த ஆரம்பித்துவிடுகிறார் . அன்னாவுக்கும் தஸ்தாவெஸ்கிக்கும் ஏறக்குறைய 40 வயது வித்தியாசம் இருக்கும் . 

ஆனாலும், அவரால் அவளை மறக்க முடியவில்லை . அவள் இல்லாமல் வாழ முடியவில்லை . தஸ்தாவெஸ்கி இறந்து , 30 வருடங்கள் ஆன பின்பும் கூட அன்னா அவரது நினைவாகவே இருக்கிறாள் . 

இந்த உண்மைச் சம்பவம் கதாசிரியர் ஆர். செல்வராஜ் மனதைப் பாதித்தது . அதுதான் அவருடைய எழுத்தில் `முதல் மரியாதை’ படமாக உருவானது !

அந்த இருவரின் களங்கமில்லா அன்புதான் , `முதல் மரியாதை' படத்தின் அடிநாதம் . அன்பு என்பது உடலால் வருவதல்ல , மனதால் வருவது .  

இந்தக் கதையைச் சொன்னதும் 
இயக்குனர் பாரதிராஜாவுக்கு 
ரொம்பவும் பிடித்துப் போய்.விட்டது . 

பாம்குரோவ் ஓட்டலில் வைத்து 
ஆர்.செல்வராஜிடம் ஒரு இலட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து , 'என் வாழ்வும் தாழ்வும் உன் கையில்தான் இருக்கு .... இந்தப் படம் ஜெயிக்க வேண்டும்’ என்று சொன்னார் . 

'இது எனக்கு எதுக்கு... நீங்க 
வீட்டை வேற அடமானம் (அப்போது 
தி.நகரில் உள்ள ஒரு வீட்டை படம் 
எடுப்பதற்காக பாரதிராஜா அடமானம் 
வைத்திருந்தார்) வெச்சிருக்கீங்க ...... 
வேண்டாம்’ என மறுத்தார் 
ஆர். செல்வராஜ் .

பிறகு ,  பெங்களூருவில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலில் அறை ஒதுக்கித் தந்தார் . அறை எண் 46 . 

ஏறக்குறைய 40 நாட்கள் 'முதல் மரியாதை’ படத்தின் திரைக்கதையை எழுதினார் செல்வராஜ் . அவ்வப்போது பாரதிராஜா வருவார் . 

தேவையானதைச் செய்து கொடுத்துவிட்டு , திரும்பிச் செல்வார்ா. ஒருநாள் அவரை அழைத்து 'ஸ்கிரிப்ட் ரெடி.. வாங்க’ என்று அழைத்தார் செல்வராஜ் . 

அன்றே , சென்னையிலிருந்து விமானத்தில் பறந்து வந்து, ஸ்கிரிப்ட்டைப் படித்தார் . 

'நட்புக்கும் காதலுக்கும் இடையே 
நீ ஒரு கப்பல் ஓட்டியிருக்கே ..... இந்தக் கப்பல் கரை தெரியாத கடலில் மிதக்குது.. கதை சூப்பர்... சூப்பர்!' என்று, பாராட்டினார் . 

உடனே , தொலைபேசியில் சித்ரா லட்சுமணனை அழைத்து , படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார் . 

கதை பிரமாண்டமாக இருந்தது . ஏற்கனவே சிவாஜிகணேசனை ஒரு படத்திலாவது இயக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த பாரதிராஜாவே சொன்னார் .... 'நாம சிவாஜியை இதில் நடிக்க வைக்கலாம் ...’

நடிகர் திலகம் சிவாஜி பொதுவாகவே கதை கேட்காமல் எந்தப் படத்தையும் ஒப்பு கொள்வதில்லை ! அவரிடம் போய் பாரதிராஜா , 'அண்ணே .... இதுதான் படத்தோட ஐடியா , நீங்க நடிச்ச நல்லா இருக்கும்' என்று நான்கு வரியில் படத்தின் கதையைச் சொல்லி இருக்கிறார் . 

அப்போது உச்சத்தில் 
இருந்தார் இயக்குநர் பாரதிராஜா .
அவர் மீது கொண்ட நம்பிக்கையில் நடிகர் திலகமும் ஒப்புக்கொள்கிறார் .

மைசூருக்கு அருகே, சிவசமுத்திரம் 
என்ற மலைக் கிராமத்தில் படப்பிடிப்பு.. காவிரிக் கரை ஓரம் அமைந்த மிக எழில் வாய்ந்த கிராமம் . சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலம் . 

எல்லோரும் ஸ்பாட்டில் ஆஜர். இயக்குநரும் வந்து சேர்கிறார் . அப்போது நடிகர் திலகம் திரிசூலம் ராஜசேகர் கெட் அப்பில் மேக்கப் போட்டுக்கொண்டு ஸ்பாட்டுக்கு வருகிறார் . அதைப் பார்த்ததும் இயக்குநருக்கு செம மூட் அவுட் ! 

படப்பிடிப்புக் குழுவை விட்டுத் 
தள்ளி வெகுதூரம் போய் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கிறார். பற்ற வைக்கிறார் ..... கிறார் ..... சிகரெட் பாக்கெட் காலியாகிறது .

நடிகர் திலகம் உட்பட மொத்த யூனிட்டுக்கும் அதிர்ச்சி ! முதல் ஷாட் வைக்க வேண்டிய முகூர்த்த நேரமும் கடந்து விட்டது . நடிகர் திலகம் ஏதோ குழப்பம் என்பதை மட்டும் உணர்கிறார் .

அப்போது உதவி இயக்குநராக 
இருந்த சித்ரா லட்சுமணனை அழைத்து 'அந்தக் கருவாயனுக்கு என்ன பிரச்சினையாம் !' எனக் கேட்கச் சொல்கிறார் . 

சித்ராவும் இயக்குநரிடம் போய் அமைதியாக நிற்கிறார் . இயக்குநர் 'பேக்கப்' என்று ஒற்றை வார்த்தை சொல்கிறார் . இயக்குநர் சொன்னால் சொன்னதுதான் !

யூனிட் ஆட்கள் இப்போது 
ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவதா 
வேண்டாமா என்று தயக்கத்தோடு நிற்கிறார்கள் . 

இந்தக் கலவரங்கள் எதுவும் 
தெரியாத சிவாஜி மனைவி 
கமலாம்மா ஸ்பாட்டிலேயே 'சுடச் சுட' இட்லி தயார் பண்ணி நடிகர் திலகத்திற்கு கொண்டு வந்து சாப்பிடச் சொல்கிறார் . 

நடிகர் திலகமும் மேக் அப்பைக் கலைத்துவிட்டு நார்மல் தோற்றத்தோடு அமர்ந்திருக்கிறார் . டைரக்டரையும் சாப்பிட வரச் சொல்லுங்க என்று கமலாம்மா சொல்ல , தகவல் இயக்குனருக்குத் தெரிவிக்கப்படுகிறது .

தட்ட முடியாமல் சாப்பிட வருகிறார். 
நடிகர் திலகம் உட்கார்ந்திருந்த அந்தக் காட்சியைப் பார்த்ததும் உற்சாகமாகி, 'அண்ணே ..... இதான் எனக்கு வேணும் ! இப்படியே இருங்க ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம்' என்று சாப்பிட மறந்து படப்பிடிப்புக்குத் தயாராகிறார் இயக்குநர் .

நடிகர் திலகத்திற்கு பேரதிர்ச்சிா! 
மேக் அப் , விக் இல்லாமல் நடிச்சா தன்னோட ரசிகர்கள் எப்படி ஒத்துக்குவாங்க என்று இயக்குநரிடம் எவ்வளவோ சொல்கிறார் . 

'அண்ணே், நான் சொல்றேன் .... 
நல்லா வரும் வாங்க' , என்று சொல்ல படப்பிடிப்புத் தொடங்குகிறது .

ஒருநாள் ஷூட்டிங் முடிந்ததும் 
சிவாஜி , ‘‘மறுநாள் எங்கே படப்பிடிப்பு?” எனக் கேட்கிறார் . அப்போதுதான் கவனித்தார்கள். சிவாஜி அன்று முழுவதும் செருப்பு போட்டபடியே நடித்திருப்பதை . தவறு நடந்துவிட்டது . கதைப்படி அவர் செருப்பு அணியக் கூடாது .

‘‘நாளைக்கும் இதே காட்சிகள்தான் எடுக்க வேண்டும்’’ என்றார் பாரதிராஜா.. ‘‘ஏன்?’’ என்றார் சிவாஜி.‘மாமன் தொட்டுக் கும்பிட்ட காலில் செருப்பு அணிய மாட்டேன்’ என வைராக்கியமாக இருக்கும் பாத்திரம் சிவாஜிக்கு. 

‘‘படப்பிடிப்பில் அதைக் கவனிக்கத் தவறிவிட்டோம்’’ எனச் சொன்னார் பாரதிராஜா . சிவாஜி ஒரு கணம்  ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குப் போய்விட்டார் .

அந்தக் கலைஞனின் அக்கறையை அடுத்த நாள் காலையில் பார்த்து எல்லோரும் அசந்து போனார்கள் . அடுத்த நாளில் இருந்து அவர், செருப்பு அணியாமல்தான் எல்லா நாளும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தார்.. 

செருப்பு, அவர் தங்கியிருந்த அறையிலேயே கிடந்தது . அவர் செருப்பே இல்லாமல் நடிப்பதால் அவருடைய காலில் முள்ளோ, கல்லோ தைத்துவிடக் கூடாது என்ற கவனம் பாரதிராஜா உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினருக்கு இருந்தது . 

அவர் நடிக்கப் போகும் இடத்தைச் சுத்தமாகப் பெருக்கி வைக்கச் சொல்லியிருந்தார்கள் . அதைப் பார்த்துவிட்டு, ‘‘ஏன் அந்த இடத்தைப் பெருக்கறீங்க’’ எனக் கேட்டார் . 

‘‘உங்க கால்ல முள் தைச்சுவிடக் கூடாதேன்னுதான்’’ என இழுத்தார் பாரதிராஜா.

‘‘அட யாருப்பா நீங்க ..... பெருக்கறத நிறுத்தச் சொல்லு மொதல்ல . காட்லயும் மேட்லயும் இப்படித்தான் சுத்தமா பெருக்கி வைப்பாங்களா ? இயற்கையா இருந்தாத்தானே சரியா இருக்கும்?’’ எனச் சொல்லிவிட்டார் .

பக்கம் பக்கமாக வசனம் 
இருக்கும் என்று எதிர்பார்த்தார் சிவாஜி .அதுவும் இல்லை ! அண்ணே, இப்படி உட்காருங்க இத மட்டும் சொல்லுங்க என்று பாரதிராஜாவுக்கே உரிய ஸ்டைலில் படப்பிடிப்பு போகிறது.. 

ஒருநாள் , 'அண்ணோ, லைட் போகப்போகுது ..... சீக்கிரம் வாங்க என்கிறார் . அண்ணே , அந்த மரத்துல கை வச்சு நில்லுங்க ... அப்படியே 
திரும்பி நடந்துவாங்க...' 

என இயக்குநர் சொல்ல, 
'டேய் நான் சிவாஜிடா... என்ன காட்சி , எதுக்கு நடக்கணும் .... என்ன சிச்சுவேஷன்னு கூட சொல்லாம நடன்னா என்னடா அர்த்தம்' என்று ஒரு கட்டத்தில் பொங்கியிருக்கிறார் . 

ஆனால் அசரவில்லை இயக்குநர் . மொத்தப் படப்பிடிப்பும் இப்படியே நடந்து முடிகிறது .

தேவையில்லாமல் வந்து 
மாட்டிக்கிட்டேன் என்கிற 
மனநிலையோடு இயக்குநர் 
சொன்னதை மட்டும் செய்து விட்டு 
வருகிறார் நடிகர் திலகம் . 

அவர் கேரியரில் இதுபோல் நடப்பது இதுதான் முதல் முறை ! இயக்குநர் மீது ஏக வருத்தம் .

சென்னைக்கு வந்து மொத்தப் படத்தையும் எடிட் பண்ணி ஒவ்வொரு ஆர்டிஸ்டாக டப்பிங் பேச வைக்கிறார் இயக்குநர் . எல்லோரும் பேசியாச்சு. நடிகர் திலகம் மட்டும்தான் பாக்கி . 

அவர் எந்த மீட்டரில் பேச வேண்டும் என்று இயக்குநர் ட்ராக் பேசி வைத்திருக்கிறார் . அண்ணன் வந்து அதை மட்டும் பேசிக் கொடுத்தால் போதும் என்று தகவல் போகிறது அன்னை இல்லத்துக்கு .

நடிகர் திலகம் இயக்குநர் மீது 
கடும் கோபத்தில் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் புரிகிறது . சமாதானம் செய்து அழைத்து வருகிறார்கள் . 

மொத்தப் படத்தையும் பார்க்க மறுத்து விட்டு , அவர் பேச வேண்டிய ரீலை மட்டும் போடச் சொல்லி டப்பிங்கை முடித்துக் கொடுக்கிறார்ா.

சிவாஜி், ராதா , வடிவுக்கரசி , 
சத்யராஜ் , ரஞ்சனி , தீபன் , வீராசாமி , அருணா என அந்தப் படத்தின் அத்தனை பாத்திரங்களும் காவியக் கதாபாத்திரங்கள் . 

படத்தின் உச்சபட்சக் காட்சி . அன்று படப்பிடிப்பில் 92 பேர் . காலையில் படப்பிடிப்புக்குக் கிளம்பும் நேரத்தில் , பாரதிராஜாவின் திரையுலக குருவான புட்டண்ணா கனகல் மறைந்துவிட்டதாகச் செய்தி . பதறிப் போய் விட்டார் பாரதிராஜா . 

‘‘நான் உடனே அவருடைய 
மறைவுக்குப் போயாக வேண்டும்’’ எனக் கதறுகிறார் . ‘‘இவ்வளவு கலைஞர்களைக் காக்க வைப்பது சரியில்லை . நாம் இன்னொரு நாள் அவருடைய வீட்டுக்குப் போய் வருவோம்’’ எனச் செல்வராஜ் போன்றவர்கள் சொல்லியும், பாரதிராஜா கிளம்பிப் போய் விட்டார்.

‘முதல் மரியாதை’ படப்பிடிப்பிலிருந்து கிளம்பிப்போன பாரதிராஜா , பாதி வழியில் என்ன நினைத்தாரோ ...... மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தார் . அவர் கண்ணீர் நிற்கவில்லை . 

படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த இடத்தில் இருந்து , சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் அவருடைய குருவுக்கு இறுதிச் சடங்கு நடத்திக்கொண்டிருந்தார்கள் . இங்கே படப்பிடிப்பு நடத்த அவர் மனம் கேட்கவில்லை . 

எல்லோரும் ஒருவழியாக அவரைத் தேற்றினார்கள் . ஒருவழியாக அந்த ஷெட்யூல் முடிந்ததும் , கதாசிரியர் செல்வராஜும் பாரதிராஜாவும் புட்டண்ணாவின் இல்லத்துக்குச் சென்று துக்கம் விசாரித்துவிட்டு வந்தார்கள் .

இப்படியாக , படப்பிடிப்பு ஆரம்பித்த 
100 ஆவது நாளில் படம் ரெடியாகிவிட்டது . இசையமைப்புக்காகப் படத்தை இளையராஜாவிடம் போட்டுக் காட்டினார்கள் . 

அவர் பார்த்துவிட்டு, `படம் 
நல்லாயில்ல... இதைத் தூக்கிப் போடச் சொல்லு . தீபன் , ரஞ்சனியை வைத்து வேறு கதையை பாரதிராஜாவைப் பண்ணச் சொல்லு . ஏற்கெனவே கஷ்டத்தில் இருக்காரு . இந்தப் படம் வந்தா மேலும் கஷ்டப்படுவார்’ என்று சொல்லிவிட்டார் கதாசிரியர் செல்வராஜிடம் .

இயக்குனர் பாரதிராஜாவுக்குப் 
படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருந்தது. 

கதாசிரியர் செல்வராஜிடம், 'இளையராஜா என்ன சொல்றார்.. பேசாமல் ரீ-ரெக்கார்டிங் பண்ணச் சொல்லு’ என்று சொன்னார் பாரதிராஜா . 

ரெக்கார்டிங் முடிந்ததும் ,
'பாரதி ... நாம பேசினபடி அவருக்கு என்ன சம்பளமோ அதைக் கொடுத்துடுவோம்’ என்று சொன்னார் செல்வராஜ் . 

அவரும் பணத்தை 
எடுத்து , கையில் கொடுத்து இளையராஜாவிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வரச் சொன்னார் . பணத்தை எடுத்துக்கொண்டு போனார் செல்வராஜ் . 

`என்ன...’ என்று கேட்டார் 
இளையராஜா . `பாரதி.. பேமென்ட் கொடுத்துவிட்டு வரச் சொன்னார்’ என்றார் செல்வராஜ் . 

'எனக்கு வேண்டாம்... எப்படியும் 
இந்தப் படம் ஓடாது . அவர் மறுபடியும் கஷ்டப்படுவார் . திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார் . அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு...’ என்றார் . 

`யோசித்துப் பாருங்கள்...’ என்று சொல்லியும், `முடியவே முடியாது’ என்று , பணத்தை வாங்க இளையராஜா மறுத்துவிட்டார் .

பிறகு , படத்தைத் தயாரிப்பாளர் 
பஞ்சு அருணாசலத்திடம் போட்டுக் காட்டி இருக்கிறார்கள் ... அவர் படம் பார்த்து , முடித்ததும் , 'இந்தக் குதிரை அதிர்ஷ்டத்தில்கூட ஜெயிக்காது’ என்று சொன்னார் . 

ஆனாலும், பாரதிராஜா பயப்படவில்லை .... சோர்ந்து போகவில்லை . இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் .   

அப்போது , சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவுக்குப் பக்கத்தில் `சுபாஷினி தியேட்டர்'  இருந்தது . 

அந்த தியேட்டரில் படத்தைப் போட்டு , படத்தில் பணியாற்றிய மற்றும் நெருக்கமான நண்பர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரையும் படம் பார்க்க அழைத்தார்கள் . 

அவர்களது கையில் ஒரு பேப்பரைக் கொடுத்துவிட்டார்கள் . படம் பார்த்து முடித்துவிட்டு, அவரவர் கருத்துகளை அதில் எழுத வேண்டும். பெயர் அவசியமில்லை என்று சொல்லப்பட்டது . 

படத்தைப் பார்த்த பல பெண்கள் `சூப்பர்... பிரமாதம்’ என்று எழுதி விட்டனர் . இப்படியாக , இரண்டு மூன்று முறை வெவ்வேறு ஆட்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்கள் .

இதன்பின் , படத்தின் மீது பாரதிராஜாவுக்கு மிகப் பெரும் நம்பிக்கை வந்துவிட்டது . 

செல்வராஜும் பாரதிராஜாவும் 
தாஜ் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் . பிறகு, பரிமாறுபவரை அழைத்து பில் கொண்டு வரச் சொன்னார்கள். அவர், `ஏற்கெனவே பணம் கட்டி விட்டார்கள் சார்’ என்றார் . 

யார் என்று தேடினால் , அத்தானி பாபு என்கிற கோயம்புத்தூர் விநியோகஸ்தர் . இவர்களுக்காகப் பணம் செலுத்தியிருந்தார் . அவர் படம் பார்த்திருக்கிறார். அவருக்குப் படம் பிடித்திருந்தது . 

அவர் பாரதிராஜாவிடம் , `முதல் மரியாதை படத்தை நான் வாங்கிக்கிறேன் சார்’ என்று சொன்னார் . பிறகு , ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு படத்தை வாங்கி, வெளியிட்டார்கள். அதற்குப் பிறகு படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது .

படம் மகத்தான வெற்றியடைந்ததும் ‘‘ஏம்பா ... எனக்குக் கொடுக்க இருந்த சம்பளத்தைக் கொடுங்கப்பா’’ என இளையராஜா பாரதிராஜாவிடம் எவ்வளவோ கேட்டுப்பார்த்தார் . 

பாரதிராஜாவோ, ‘‘எப்ப வேணாம்னு சொல்லிட்டியோ, அதோட விட்டுடு... உனக்குச் சம்பளம் தரவே மாட்டேன்’’ என ஒற்றைக்காலில் நின்றுவிட்டார் . 

இந்த நேரத்தில் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் இருந்து பாரதிராஜாவுக்கு ஒரு போன். ‘‘ரஷ்யாவுக்கு ‘முதல் மரியாதை’ படம் வேண்டும். ஒரு பிரின்ட் எவ்வளவு ?” என விசாரித்தார்கள் . 

அன்றைய தேதியில் 25 ஆயிரம் ரூபாய்தான் பிரின்ட் செலவு. ‘எதற்கும் இருக்கட்டும்’ என பாரதிராஜா ‘ஒரு லட்ச ரூபாய்’ எனச் சொல்லியிருக்கிறார் .

ஆனால், அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு செக் அனுப்பியிருந்தார்கள் . அவர்கள் கேட்டது , ரஷ்யாவுக்கு மட்டும் 100 பிரின்ட் . 

பாரதிராஜா இதை எதிர்பார்க்கவே இல்லை. ஏதோ ஒரு பிரின்ட் என்பதால் அந்த விலை சொன்னார் . 100 பிரின்ட் என மொத்தமாகக் கொடுத்தால், அன்றைய மதிப்பில் ஒரு பிரின்ட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய்கூட இருக்காது . இலாபம் கோடிகளில் கொட்டியது. 

படம் எடுக்கப்பட்ட கதையே சுவாரசியம் தானே?

Sunday, October 4, 2020

Care about Others Happiness...


They brought balloons to a school.
One was given to every student, who had to inflate it, write their name on it and throw it in the hallway.

The professors then mixed all the balloons.

The students were given 5 minutes to find their own balloon. Despite a hectic search, no one found their balloon.

At that point the professors told the students to take the first balloon that they found and hand it to the person whose name was written on it.

Within 5 minutes everyone had their own balloon.

The professors said to the students:

′′These ballons are like happiness. We will never find it if everyone is looking for their own. But if we care about other people's happiness... we'll find ours too."

Friday, September 25, 2020

SPB - Paadum Nila Balu.....


RIP - 25.09.20



சிந்தனை துளிகள் - 2

1. நிராகரிக்கப்பட்ட  இடங்களில் அன்பிற்கான பாடமும் ......

அவமானப்பட்ட இடங்களில் வாழ்க்கைக்கான பாடமும் தொடங்குகின்றது...!


2. என்னைத் தவிர யாரும் உன்னோடு
குப்பை கொட்ட முடியாது என்று
இருவருக்கும் தோன்றும் போது
தான் மேட் ஃபார் ஈச் அதர் என்பது
நிரூபணமாகிறது.


3. நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என ஆரம்பித்து

இந்த நிலையே போதும் என்ற நிலைக்கு தள்ளி விடுகிறது....!!

சிலரின் வேண்டுதல்கள்...


4. உங்களை திருத்திக் கொள்ளாமல்

வாசலை இடித்து ஜன்னலாக்குவதாலோ

கழிவறையை இடித்து சமையலறையைக் கொண்டு வருவதாலோ

வசதிகள் மாறலாம்
 
வாழ்க்கை மாறிவிடாது


5. வாழ்க்கை என்பது

வாழை இலையில் ஊற்றிய ரசம் போல

எந்த பக்கம் போகும் என்று கணிப்பது கடினம்.


6. சிந்திக்க தெரிந்த உனக்கு, ஆலோசனைகள் தேவை இல்லை..

சந்திக்க தெரிந்த உனக்கு, தோல்விகளால் கவலை தேவை இல்லை.. 

எதிர்க்க ஆள் இருந்தால் தான், 
ஆட்டத்திலும் ஓட்டம் இருக்கும்... 

காக்க வேண்டாம் நல்ல நேரத்திற்க்காக, 
நீ நடக்கும் நேரமே, நல்ல நேரம்... 

வெற்றி நிச்சயம்!


7. அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்று நினைத்து வருந்தாதீர்கள்

அழகான ஓன்றை தான் அசிங்கப்படுத்த முடியுமே தவிர அசிங்கமாக இருப்பதையல்ல


8. ஆமையை ரோட்டில் விட்டு அதன் வேகத்தை குறை கூறுவது நமது வழக்கம்...

அதை நீரில் விட்டால், நம்மால் தான் பிடிக்க முடியுமா...

இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், எவரும் வல்லவரே... 


9. நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட... 

நம் காதுகளை மூடிக் கொள்வது மிகச் சிறந்தது ...


10. பிறப்பு இறப்பு மட்டுமே நம்மை தேடி வரும்...

மற்றவற்றை நாம் தான் தேடி செல்ல வேண்டும்...


11. ஒரு பெண் தேவதை ஆவதும்

தேவையில்லாமல் போவதும்

அவள் வாழ்க்கையில் சந்திக்கும் ஆண்மகனால் தான்


12. உங்கள் காலில்
நில்லுங்கள்...

அது தானாகவே உங்களை வழிநடத்திச் செல்லும்...


13. சாதிக்க நினைக்கும் உன்னை
சோதிக்க வருவது தான் கோபம்... 

லாபம் யாருக்கு உன் கோபத்தால்... 
தடுக்க நினைப்பவருக்கு தான்..

பொறுமை கொண்டு, உண்மையாய் உழைத்து வா.  

வாய்மைக்கு என்றும்...  வெற்றி நிச்சயம்!


14. உயரத்தில் இருக்கிறோம் என ஆட்டம் போடாதீர்கள்...

தவறி விழ நேர்ந்தால் தரையில் இருப்பவரை விட உங்களுக்கே பாதிப்பு அதிகம்...


16. குறை சொன்னது யார் என்பதை இரண்டாவதாக பாருங்கள்...

சொல்லப்பட்ட குறை உங்களிடம் உள்ளதா என முதலாவதாக பாருங்கள்...


17. காரணம் இன்றி நாம் யாரையும் சந்திப்பது இல்லை...

பாடமாக சிலர்...

பாலமாக சிலர்...


18. மனத்திருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம்...

ஆடம்பரம் என்பது நமக்கு நாமே தேடிக்கொள்ளும் வறுமை...


19. அகம்பாவம் இல்லாமல் பேசுதல்... 
உள்நோக்கம் இல்லாமல் அன்பு செலுத்துதல் ... 
எதிர்பார்ப்பு இல்லாமல் அக்கறையாக இருத்தல்... 
சுயநலமில்லாமல் ப்ரார்த்தனை செய்தல் ...
இவைகள் உண்மையான அன்பின் அடையாளங்கள்.


20. உங்களுக்கு மன அமைதி வேண்டுமென்றால்...

பிறர் குறைகளைக் காண்பதற்குப் பதிலாக உங்கள் குறைகளைக் காண முயற்சி செய்யுங்கள்...


21. எதையும் செய்யாமல் ஆலோசனை மட்டுமே சொல்லும் அறிவாளியை விட...

ஏதாவது செய்து காலத்தை வீணடிக்காமல் அனுபவத்தை கற்று கொள்ள தோல்வியை பெறும் முட்டாள் மேலானவன்...


22. உங்களுக்கு நீங்கள் நல்லவராய் இருந்தால் போதும்...

மற்றவருக்கு நீங்கள் கெட்டவராய் தெரிந்தால் அது உங்கள் குற்றம் அல்ல...


23. முக்கியத்துவம் இல்லாத இடத்தில் 
மீண்டும் மீண்டும் முகம் காட்டுதல் முட்டாள்தனமானது...


24. உதவி என்பது எப்பொழுதும் உனக்கு கிடைத்து கொண்டே இருக்காது. கடைசியில் உன்னிடம் மிஞ்சுவது உன்மேல் நீ கொண்ட தன்னம்பிக்கை மட்டுமே. அதை என்றுமே இழந்து விடாதே.


25. மற்றவர்களின் தூண்டுதலின்பேரின் இல்லாமல்...

 உங்களுக்குள் இயல்பாகவே உண்மையான ஆர்வமும் உழைப்பும் இருக்குமேயானால்...

நீங்கள் இருக்கக்கூடிய துறையில் உங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது...


26. வேடிக்கை பார்ப்பவர்கள் மத்தியில் உங்கள் வேதனையை வெளிப்படுத்தாதீர்கள்...

அதையும் அவர்கள் வேடிக்கையாய் கடந்து சென்று விடக்கூடும்...


27. செய்யும் உதவியை சொல்லிக்காட்டாதீர்கள்

சொல்லிக்காட்டும் வழக்கம் இருந்தால்

உதவியே செய்யாதீர்கள்...


28. உங்களை வளப்படுத்த அதிக நேரம் செலவழியுங்கள்...

பிறரை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்...


29. நம்மால் ஒருவருக்கு பிரச்னை வருகிறது என்றால் அந்த இடத்தை விட்டு விலகிரணும்...

அது உறவானாலும் சரி... உயிர் நட்பென்றாலும் சரி...


30. தன்னுடைய தேவையை கேட்டுப் பெறுபவர்கள் மற்றவர் கண்களுக்கு முட்டாளாக தெரியலாம்...

தனக்கு என்ன தேவை என்றே தெரியாதவர்கள் வாழ்நாள் முழுவதுமே முட்டாளாக வாழ்கின்றார்கள்...


31. பணத்தின் மதிப்பு தெரிய வேண்டும் என்றால் செலவு செய்யுங்கள்...

உங்கள் மதிப்பு தெரிய வேண்டும் என்றால் கடன் கேளுங்கள்...


32. கண்ணுக்கே தெரியாத காற்றில், பட்டம்
எதிர் நீச்சல் போடுகிறது..

மண்ணுக்குள்ளே புதைந்த ,விதை போராடி வருகிறது...

பெண்ணுக்குள்ளே இருந்து, அணுவாய் புறப்பட்டவன் நீ . ...

விண்ணை இலக்காக கொண்டு,  
முன்னே நடந்து வா.... வெற்றி நிச்சயம்!


32. தகுதிக்கு மீறி ஆசைப்படகூடாது என்பது சரிதான்...

ஆனால், நம் தகுதி என்ன என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கக்கூடாது


33. எல்லோருக்கும் ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்பாத ஒன்று தான்...

மறக்க முடியாத ஒன்றாகவும் இருக்கிறது...


34. அன்று வயதை பார்த்து வந்தது..

இன்று வசதியை பார்த்து தான் வருகிறது

மரியாதை...


35. உறவுகள் என்பது நிலாவை போன்றது தான்...

தூரத்தில் இருக்கும் வரை ரசித்து கொண்டாடப்படும்...


36. வாழ்க்கையில் பாடங்களை கற்றுக் கொள்ள தயங்காதே!! 

படங்கள் மனதில் நிற்ப்பது இல்லை... 
பாடங்கள் அனுபவங்களாய் நிற்க்கும்.. 

வீழும் நிலை வந்தாலும், 
வாழ வைக்கும்.. 

கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.... 

கற்றுக் கொண்டே இருந்தால்........ வெற்றி நிச்சயம்!


37. சிந்தனையில் இருந்து தான்அறிவு தோன்றுகிறது....

சிந்தனையில் தொடர்ந்து ஈடுபடும் போழுது நம்முடைய அறிவு நாளுக்கு நாள் பெருகும்......

அந்த அறிவின் தன்மை நம்முடைய வாழ்க்கையை வளமுடன் வாழ வழி காட்டும்..

சிந்தனை பெருகும் போது நம்முடைய அறிவு 
வளரும்....


38. உங்களுக்காக தங்கள் நேரத்தை ஒதுக்குபவர்களை மதியுங்கள்...

அவர்கள் ஒதுக்குவது நேரத்தை அல்ல வாழ்க்கையின் ஒரு பகுதியை...


39. எரிந்து விழுவதை விட
புரிந்து வாழ்வதில்... 

அதிகம் வாழ்கிறது
அன்பு...


40. எதிர்த்து நிற்பவர்கள் எல்லாம் எதிரியும் இல்லை...

உடன் இருப்பவர்கள் எல்லாம் உறவுகளும் இல்லை...

காலமும் சூழ்நிலைகளும் உணர்த்தும் யார்.. யார் என்று...


41. போட நினைத்த சண்டைகள்...

பேச துடித்த சமாதானங்கள்...

கொண்டாட விரும்பிய சந்தோசங்கள்...

இவையெல்லாம் பெரும்பாலும் மௌனமாகவே கழிய வேண்டிய நிர்பந்தத்தை வாழ்க்கை ஏற்படுத்தி விடுகிறது....


42. உங்களது நம்பிக்கையும் செயல் ஊக்கமும்... எந்த அளவிற்கு வலிமையாக உள்ளதோ... அந்த அளவிற்கு வெற்றி விரைந்து வரும்...


43. கனவு காண்பவர்கள் தோற்பதில்லை.....

ஆனால் கனவு மட்டுமே கண்டு கொண்டு மனக் கோட்டை கட்டுபவர்கள் தான் தோற்கிறார்கள்.....

வருங் காலத்தைப் பற்றியே வருடக்கணக்கில் யோசிக்காமல்  
நிகழ் காலத்தைப் பற்றி நிமிடக் கணக்கிலாவது யோசியுங்கள்.....


44. அவங்க நல்லா இருக்காங்க.. நமக்கு மட்டும் ஏன் இப்படி என்று எண்ணாதீர்கள்...

வெளியே சிரிப்பும் உள்ளே வேதனையும் கொண்ட முகமூடி அணிந்த மனிதர்களே இங்கு அதிகம்...


45. கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை...

கனவு மட்டுமே காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்...


46. தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்
குணங்களைப் பண்படுத்திக் கொள்ளுங்கள்
 
திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்

 உங்கள் தகுதி தானாகவே உயரும்!


46. நிம்மதியுடன் வாழ்கிறேன் என்று யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை

வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்துவிடுவதில்லை...


47. மனநிலை சரியில்லை என்றாலும் புலம்புகிறோம்...

உடல்நிலை சரியில்லை என்றாலும் புலம்புகிறோம்...

ஆனால் இரண்டும் சரியாக இருந்தால் நம் பேச்சை நாமே கேட்க மாட்டோம்...


48. ஏதாவது வரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம் கடவுளிடம்...
 
வாழ்வென்பதே வரம் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்...


49. சில நேரங்களில் நமக்குப் பிடித்த உறவுகளுக்கு...

துயரமாக இருப்பதை விட. தூரமாக இருப்பதே நல்லது...


50. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அதை அமைதியான முறையில் எடுத்துச் சொல்லுவதே எப்போதும் வலிமைக்கு அடையாளமாகும். 


51. உனக்கு எது பிடிக்கவில்லையோ அதனிடமிருந்து விலகி நில் - அது உறவானாலும், நண்பர் ஆனாலும் பொருளானாலும் சரி அதையே நினைத்து வருந்தி உடலையும் மனதையும் வருத்திக் கொள்ளாதே அதனால் பாதிக்கப்படுவது நீ மட்டுமே!!


 52. நிராகரிப்புகளின் மூலம் யாரையும் நிர்மூலமாக்கி விட முடியாது.... உண்மையில் நிராகரிப்புக்கு பின் தான் ஒருவருடைய விஸ்வரூபமே வெளிப்படுகிறது....!!!


53. தன்னைப் போல் தானே எல்லோருக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கும் என உணர்ந்து தெளிந்த பின் யாரிடமும் கோபமோ பிழையோ கண்டு பிடிக்க மாட்டான்...!!! உணராதவரே உறவையும் நட்பையும் உதறிவிடுகிறார்கள்...!!!


 54. நிஜத்தை விட கனவுகள் அழகாய் இருக்கிறது....ஏனென்றால் அங்கு எந்த ஏமாற்றமும் இருப்பதில்லை... அதனால் தான் கனவுகள் அதிக நேரம் நீடிப்பதில்லை...


55. நம்மிடம் ஒன்று பேசுவதும்... பிறரிடம் ஒன்று பேசுவதும்.. ஒரு சில மனிதர்களின் ரத்தத்தில் ஊறியது . உலகமே தலைகீழாகநின்றாலும் இவர்களை திருத்த முடியாது...!!! அவர்களைப்பற்றி கவலைப்படாதே..


56. வாழ்க்கையில் உயரும் வரை காதை பொத்திக் கொள்ளுங்கள்...

உயர்ந்த பிறகு வாயைப் பொத்திக் கொள்ளுங்கள்...


57. வாழ்க்கையில் யாரையும் குறைவாக எடை போடாதீர்கள்...

உலகத்தையே மூழ்கடிக்கும் கடலால்...

ஒரு துளி எண்ணெய்யை மூழ்கடிக்க முடிவதில்லை...


58. நல்லவர்களின் கடினமான வார்த்தைகள் கூட கசப்பாகத் தான் தெரியும்... ஆனால் நோயைக் குணப்படுத்தும்...

தீயவர்களின் சிரிப்பு விஷம் போன்றது... அது மனிதனை எளிதாகக் கொல்லும்... 


59. கால் நனையாமல் கப்பலில் கடல் கடந்தவர்கள் உண்டு...

ஆனால், கண் நனையாமல் வாழ்க்கையை கடந்தவர்கள் யாருமில்லை...


60 வாழ்க்கை என்பது மெழுகுவர்த்தி போல...

தூரத்தில் இருந்து பார்த்தால் பிரகாசமாக தான் தெரியும்...

அருகில் சென்று பார்த்தால் தான் உருகி கொண்டிருக்கிப்பது தெரியும்...


61. ஏமாறுவதற்கும் ஏமாற்றுவதற்கும் சிறு வித்தியாசம்

ஒருவருக்கு அலட்சியம் மற்றவருக்கு அவசியம்.


62. முள்ளின் திறமையைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்...

தன்னைக் காலால் மிதித்தவரைக் கூட தன் கையால் எடுக்க வைக்கிறது...


63. மகிழ்ச்சி என்பது நம் வீட்டில் விளைவது ஆகும்...

மற்றவர் தோட்டத்தில் அதை தேட வேண்டியதில்லை...


64. எதிர்நோக்குவது குறைவாக இருந்தால் ஏமாற்றம் மிகுதியாய் ஏற்படாது. எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித்தான் வாய்ப்புகள் தேடி வரும்.


65. எல்லா உறவுகளும் கண்ணாடி போன்றதே..

உடையாத வரை ஒரு முகம்.... ஆனால் உடைந்து விட்டால் பல முகம்.....


66. இப்படி இருந்தால் தான் பிடிக்கும் 
என்று கூறும் அன்பை விட,

எப்படி இருந்தாலும் பிடிக்கும் என்று கூறும் அன்பே சிறந்தது...


67. அனைத்து புயல்களும் மோசமானவை அல்ல...

சில புயல்கள் உங்களுக்கான பாதையை தெளிவாக்கலாம்...


68. இன்பத்திலும் துன்பத்திலும் நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய ஒரே உண்மை என்னவென்றால்...

இந்த நிமிடம் நிரந்தரம் இல்லை...


69. எத்தனை விதமான மனிதர்களோ அத்தனை விதமான மனங்கள். ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.


70. பாதையில் தடைகள் வந்தால் அதை தகர்த்து விட்டுத் தான் செல்ல 
வேண்டுமென்று அவசியமில்லை......

அதை தவிர்த்து விட்டும் செல்லலாம்
எறும்பைப் போல......


71. மரக் கிளையில் அமரும் பறவைகள் கிளை உடைந்து விடுமோ என அஞ்சி அஞ்சி உட்காருவதில்லை.....

ஏனெனில் பறவைகள் நம்புவது தனது சிறகுகளை மட்டுமே.......

ஐந்தறிவு கொண்டவைகளே இப்படி 
தன்னம்பிக்கையோடு இருக்கும் போது ஆறறிவு கொண்ட மனிதர்களால் முடியாதா என்ன.......


72. சிரிப்பதற்கு கற்று கொள்ளுங்கள்...

அழுவதற்கு உறவுகள் கற்று தந்து விடுவார்கள்...


73. சாதம் பொங்கும் போது
தீயைக் குறையுங்கள்...

மனது பொங்கும் போது வாயைக் குறையுங்கள்..

இரண்டும் நமக்கு நல்லது...


74. வாழ்க்கையில் நல்லவர் கெட்டவர் என்று யாரும் இல்லை...

மத்தவங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்தா நீங்க நல்லவர்...

நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்தா நீங்க கெட்டவர்...


75. உழைத்துப்பெற வேண்டியது வருமானம்...
 
உணர்ந்து பெறவேண்டியது தன்மானம்...


76. தப்பான உறவுகளை விட நட்பான உறவுகளில் தடம் புரண்டவர்கள் நிறைய பேர். சண்டை போட்டு பேசாமல் இருப்பவர்களை விட பேசினால் சண்டை வரும் என இருப்பவர்கள் நிறைய பேர். 


77. மறைத்துப் பேசுபவர்கள் நல்லவர்களாகவும்...

மனதில் பட்டதை பேசுபவர்கள் கெட்டவர்களாகவும்...

சித்தரிக்கப் படுகின்றனர் இவ்வுலகில்...


78. ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை அல்ல...

ஆஸ்பத்திரி போகாமல் வாழ்வதே சிறந்த வாழ்க்கை...


79. தொலைந்தும் போகாமல் தொந்தரவாகவும் இல்லாமல்...

தேடும் போது தென்படும் தூரத்தில் இருந்தால் போதும் என்றே முடிகிறது...

ஒரு காலத்தில் நாம் கொண்டாடிய உறவுகள்...


80. எல்லோரும் நல்லவர்கள் என்று நினைப்பது தவறில்லை

எல்லா நேரமும் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று நினைப்பது தான் தவறு.


81. நாளைய மழையை அறியும் எறும்பாய் இருங்கள்...

நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இருக்காதீர்கள்...


82. இப்ப எல்லாம் யாரும் யாரையும் நல்லவரா கெட்டவரானு பாக்குறது இல்ல...

நாளைக்கு இவர் நமக்கு தேவைப்படுவாரா இல்லையானு தான் பாக்குறாங்க...


83. ரசிப்பதை எல்லாம் அடைய நினைக்கிறோம்...

ஆனால் அடைந்ததை எல்லாம் ரசிக்க மறக்கிறோம்...


84. மற்றவர்களிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கிறோமோ...

முதலில் அதை நாம் ஒரு முறை மற்றவர்களுக்காக செய்து காட்டுவோம்...


85. உங்களுடைய தோல்விகளுக்கும், பலவீனங்களுக்கும் காரணங்களைத் தேடி உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்... 

வெற்றியின் வித்துக்கள் நீங்கள் பிறக்கும் போதே உங்களுக்குள் தூவப்பட்டுள்ளன. 

இந்த விதைகளை வளரச் செய்யும் சக்தி உங்களுடையதே... 

உங்கள் வெற்றிக்கு யாரும் பொறுப்பல்ல...

வெற்றியின் விதைகளை வளர்த்தால்.. வெற்றி நிச்சயம்!


86. கடந்து கொண்டே இரு. 
யார் வென்றாலும், தோற்றாலும், பூமி நிற்காது.

உன்னுடைய தனித்துவ பாதையில் நடைபோடு. 

பழி உணர்வை அழித்திடு. 
பசியைப் போக்க உணவை அளித்திடு. 

ஒவ்வொரு நொடியும் கொண்டாடு. 

நட்சத்திரங்களைப் போல் இருந்தாலும் வானத்தின் அங்கமாய் ஒளிர்ந்திடு. வெற்றி நிச்சயம்!


87.வாழ்விலிருந்து அதிகமாக பெறுவதற்கு...

வாழ்க்கைக்கு நீங்கள் அதிகமாக கொடுக்க வேண்டும்...


88. மற்றவர்களுக்கு நீங்கள் எவ்வளவு அதிக மதிப்பு கூட்டுகிறீர்களோ...

உங்கள் வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்கும்...


89. புரிந்து கொள்ளும் அளவிற்கு சிலருக்கு பக்குவம் இருப்பது இல்லை...

புரிய வைக்கும் அளவிற்கு பலருக்கு பொறுமை இருப்பதில்லை...

 
90.கண்ணீர் துளி மதிப்புக்குரியது...

அதை பொய்யான உறவுகளுக்காக வீணடிக்காதீர்கள்...


91. உடல் காயத்திற்கு மருந்து இடுங்கள்...

மன காயத்திற்கு...

அனைத்தையும் மறந்து விடுங்கள்...


92. ஒன்று கடந்து போங்கள்... 

இல்லை என்றால்...

கண்டு கொள்ளாமல் போங்கள்...

அவ்வளவு தான் வாழ்வின் பிரச்சனைகள்...


93. சிந்திக்காத வாழ்க்கை என்றும் சிகரம் தொடுவதில்லை. சந்திக்காத பிரச்சனை என்றும் நம்மை சிந்திக்க வைப்பதில்லை. 


94. வாழ்க்கை என்பது நமக்கு திணிக்கப்பட்ட பாடம் தான்......

அதற்காக அதை வெறுக்காதீர்கள்....

வெறுத்து ஒதுக்குவதால் எந்த 
ஒரு பிரயோசனமும் இல்லை.....

விரும்பிப் படித்துப் பாருங்கள், ஒவ்வொரு பக்கமும் சுவராஸ்சியமாக இருக்கும்..

வாழ்க்கை வாழ்வதற்கே......


95. செருப்புக்கு உள்ளே சிக்கிய கல்
நடக்கும் போது நெருடலாக தான் இருக்கும்... 

மனதுக்கு உள்ளே இருக்கும் கவலை,
வாழ்க்கை பயணத்தை திசை மாற்றி விடும்... 

எதையும் நீ எடுத்துக் கொள்வதில் தான் உள்ளது.


96. நம்மை வெற்றி பெற யாரும் பிறக்கவில்லை என்பது பொய் பிறரை தோற்கடிக்க நாம் பிறந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. 


97. கிழிக்கப்படும் போதுதான் துணி அழகிய உடையாகிறது கசக்கப்படும் போதுதான் வாழ்க்கை சாதனையாக மாறுகிறது.


98. எதையும் எதிர் கொள்வேன் என்ற
மன நிலை நம்பிக்கையைக்
கொடுக்கும்...

என்ன செய்யப் போகிறோம் என்று
யோசிக்காதீர்கள்...

என்ன செய்ய வேண்டும் என்று
யோசியுங்கள்..

வெற்றி உங்களை வந்தடையும்......


99. ஓடினால் தான் அது நதி....
 வீசினால் தான் அது காற்று.....
 பாடினால் தான் அது குயில்.......அதுபோல
பாடுபட்டால் தான் அவன் மனிதன்.
எதிர்பாராத தோல்வியடையும் போது அதைக் கண்டு வருந்தாதீர்கள் அதனால் ஏற்பட்ட படிப்பினையை ஏற்று முன்னேற முயற்சியுங்கள்.


100. உங்களை நிராகரித்த அதே இடத்தில் நிராகரிக்கவே முடியாத சக்தியாக வந்து நிற்பது தான் உங்கள் வெற்றி.


101. வாழ்க்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ அப்படியேதான் உழைப்பும்.


102. நீரின் ஓட்டத்தை 
யாராலும் தடுக்க முடியாது.. 

காற்றின் வேகத்தை யாராலும் தடுக்க முடியாது.. 

சூரியனின் வெப்பத்தை யாராலும் தடுக்க முடியாது... 

உன் உழைப்பின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது... 

முயற்சித்துக் கொண்டே இரு....
வெற்றி நிச்சயம்!


103. சாதனையில் உலகம் நம்மைத்
தெரிந்து கொள்கிறது......

சோதனையில் உலகை நாம் புரிந்து கொள்கிறோம்.....

ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்திருக்கிறது..

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுவோம்....

கஷ்டங்கள் வரும் போது் கண்களை மூடினால் உங்களை அது வென்று விடும்....

கண்களைத் திறந்து பாருங்கள், கஷ்டத்தை நீங்கள் வென்று விடலாம்.....


104. தூய்மையான எண்ணத்துடன் ஒருவர் பேசினாலும் செயல் புரிந்தாலும் மகிழ்ச்சி அவரை பின் தொடர்ந்து செல்லும்.


105. ஒருவன் அடைவதை கண்டு பொறாமைப்படாதீர்கள்.....
அவன் இழந்தவை தெரிந்தால் அடைய வேண்டும் என்ற ஆசையே வராது உங்களுக்கு.....


106. கடினமான பாதைகளே மிகவும் அழகான இடங்களுக்கு நம்மை கொண்டு செல்கின்றன..

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல.

தன்னுடைய தவறுகளை உணராதவனே குருடன்....

தவறுகள் ஏற்படுவது இயல்பு. அதை திருத்திக் கொள்ளுங்கள்..


107. என்றோ ஒரு நாள் பூக்கும் பூவுக்காக,
நாளும் நீரை ஊற்றி பாதுகாக்கிறோம்...

பூத்து பின்
நிலைத்து இருக்கப் போவதில்லை...

என்றாவது வரும் உன் வெற்றிக்காக உழைத்துக் கொண்டே இரு....

உழைப்பால் கிடைத்த
வெற்றி, நிலைக்காமல் இருக்கப் போவதில்லை....

ஓடிக் கொண்டே இரு.. 
வெற்றி நிச்சயம்!


108. கொஞ்சம் இடைவெளி விட்டு தொடருங்கள,  

நாம் ஓட்டிச் செல்லும் வாகனங்கள் மட்டுமல்ல,  உறவுகளையும் தான்.....
.
வாழ்க்கையின் உறவுகள் மேம்பட இது மிகவும் அவசியம்.....

எல்லா உறவுகளும் நீடித்து நிலைக்க வேண்டுமெனில் சிறு
இடைவெளியாவது அவசியம்....


109. கண்களை காக்க
இமைகள் துடித்துக் கொண்டே இருக்கின்றன...

தென்றலை தர இலைகள் அசைந்து கொண்டே இருக்கின்றன...

உணவைத் தேடி,
சிற்றெறும்பு கூட
ஓடிக் கொண்டே இருக்கின்றன...

உன்னைத் தேடி,
உனக்கான பயணத்தில் போய் கொண்டே இரு...

எதையும் தாண்டி, நகர்ந்திடு!...

வெற்றி நிச்சயம்!

Thursday, September 24, 2020

மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்.

*"மகாபாரதம்* 
        *உணர்த்தும்*,  
             *உண்மைகள்.”*

 மோகத்தில் 
     வீழ்ந்துவிட்டால்
        மொத்தமாய்
            வீழ்ந்திடுவாய்!
         *சாந்தனுவாய்.!*

 சத்தியம் 
    செய்துவிட்டால்
       சங்கடத்தில் 
         மாட்டிடுவாய்
 *கங்கை மைந்தனாய்.!*

 முற்பகல்  
    செய்யின்
       பிற்பகல்
         விளையும்.
     *பாண்டுவாய்.!*

வஞ்சனை 
    நெஞ்சில் 
       கொண்டால்
         வாழ்வனைத்தும்
                வீணாகும்.
           *சகுனியாய்.!*

ஒவ்வொரு 
    வினைக்கும்
       எதிர்வினை
          உண்டு.
     *குந்தியாய்.!*

குரோதம் 
     கொண்டால், 
        விரோதம் 
           பிறக்கும்.
 *திருதராஷ்டிரனாய்.!*

பெற்றோர்கள் 
    செய்யும் 
      பாவங்கள், 
        பிள்ளைகளை 
          பாதிக்கும்.
  *கௌரவர்களாய்.!*

பேராசை 
     உண்டாக்கும், 
        பெரும் 
         அழிவினையே.
  *துரியோதனனாய்.!*

கூடா நட்பு, 
         கேடாய் 
               முடியும்.
      *கர்ணனாய்.!*

சொல்லும் 
      வார்த்தை, 
         கொல்லும் 
            ஓர்நாள் .
     *பாஞ்சாலியாய்.!*

தலைக்கணம் 
     கொண்டால், 
        தர்மமும் 
          தோற்கும்.
    *யுதிஷ்டிரனாய்.!*

பலம் மட்டுமே, 
     பலன் தராது .
            *பீமனாய்.!*

இருப்பவர் 
     இருந்தால்,  
         கிடைப்பதெல்லாம்
          வெற்றியே.
    *அர்ஜூனனாய்.!*

சாஸ்திரம் 
      அறிந்தாலும், 
         சமயத்தில் 
            உதவாது.
    *சகாதேவனாய்.!*

விவேகமில்லா 
     வேகம், 
        வெற்றியை 
            ஈட்டாது.
    *அபிமன்யூவாய்.!*

 அண்ணனாலும் 
       அரசனாலும் 
           நீதி தவறாத 
               *விதுரனாய்.!* 

தவமும்
     அவமாய் போன 
          *காந்தாரியாய்.!*

பிறருக்கு வழிகாட்டி 
        தன் மகனின் 
             தரம் உயர்த்தா 
           *துரோணராய் .!*

சிரஞ்சீவி
    வரம் பெற்றும்
        சின்னாபின்னமான 
       *அஸ்வத்தாமனாய்.!*

நிதர்சனம் 
     உணர்ந்தவன், 
       நெஞ்சம் 
           கலங்கிடான்.
      *கண்ணனாய்.!.*


           *_வாழ்க்கையும்_*
       *_ஒரு பாரதம்தான்.!_*
          *_வாழ்ந்திடலாம்_*
           *_பகுத்தறிந்து.!_*

Monday, August 17, 2020

நீ . . .நீயாக இரு !

வாழ்வோம்..
பிறரையும் வாழ வைப்போம்.

 நீ . . .நீயாக இரு !
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்ய வேண்டியதை
தங்கம் கொண்டு
செய்ய முடியாது . . .
அதனால்
தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
எனவே நீ . . .நீயாக இரு !

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால்
கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
நீ . . .நீயாக இரு !

காகம் மயில் போல்
அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ
காக்கைக்குத்தான் !
நீ . . .நீயாக இரு !

நாய்க்கு சிங்கம் போல்
வீரமில்லை தான் . . .
ஆனாலும்
நன்றி என்னவோ
நாய்க்குத் தான் !
நீ . . .நீயாக இரு !

பட்டு போல் பருத்தி
இல்லை தான் . . .
ஆனாலும்
வெயிலுக்கு சுகமென்னவோ
 பருத்திதான் !
நீ . . .நீயாக இரு !

ஆகாசம் போல் பூமி
 இல்லைதான் . . .
ஆனாலும்
 தாங்குவதற்கு இருப்பது
பூமிதான் !
நீ . . .நீயாக இரு !

நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால்
 ஒவ்வொன்றும்
 அற்புதம்தான் !
எனவே நீ . . .நீயாக இரு !

அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாவம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து
 கொண்டே வா . . .
நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல்
வாழ ஆசைப்படும் ! ! !
நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னை உதாரணமாகக்
கொள்ளும் ! ! !
நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக
 ஏற்கும் ! ! !
நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
நீ . . .நீயாக இரு !

அடுத்தவனுக்காக மாறி மாறி
 உனக்காக உள்ளோரை இழக்காதே ! ! !
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாகவே இரு !

வாழ்க வையகம். வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.

Saturday, August 15, 2020

அடக்கமாகும் வரைஅடக்கமாக இரு! - கவிஞர். வாலி.

காலத்தின் ஆளுமை!

முப்பது ஆண்டுகளுக்கு முன்.
காரைக்குடியில் கம்பர் விழா; என் தலைமையில் கவியரங்கம்.

 இத்தகு சபையினில், சினிமாக்காரர்களை ஏற்ற மாட்டார் திரு. கம்பனடிப் பொடிகள். விதிவிலக்காக-
கண்ணதாசனைக் கவியரங்கத் தலைமைக்கு அழைத்தார். அடுத்த வருடம் அடியேனுக்கு வந்தது அந்த வாய்ப்பு.
'வாலியைக் கூப்பிடலாம்; வாலியைக் கூப்பிடலாம்’ என்று கம்பனடிப் பொடிகளுக்கு விடாமல் வேப்பிலை அடித்தவர் - காரைக்குடி மக்கள் கவிஞர் திரு. அரு.நாகப்பன்.  

ஒருவழியாக, என்னை ஏற்றுக்கொண்ட கம்பனடிப் பொடிகள் -
'கவிதையை, வாலி முன்கூட்டியே அனுப்ப வேண்டும்’ என்று ஒரு கண்டிஷன் போட்டார்.
அதற்கு நான் 'அது சாத்தியமில்லை’ என்று சொன்ன கையோடு -
'நான் திருச்சியில் வந்து இறங்குவேன்; அங்கிருந்து என்னைக் காரைக்குடிக்குக் காரில் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று தீர்மானமாகச் சொன்னேன்.

ஏனெனில், சென்னையிலிருந்து காரைக்குடிக்கு ரயிலில் செல்வதானால் - அது மெயின் லைன் வழியாகத்தான் போகும்; தலையைச் சுற்றி மூக்கைத் தொடும்!
'இப்படிக் கண்டிஷன் போடுகிறானே!’ என்றெண்ணாமல் -
கொஞ்சம் வெகுளியோடும் கொஞ்சம் வியப்போடும் -
என் வேண்டுகோள்களை ஏற்றார்,  சட்டையைச் சட்டை செய்யாத கம்பனடிப் பொடிகள்; ஆம்; அவர் சட்டை அணியாதவர்!

மயிலாசனத்தில் நான்; ம.வே.பசுபதி, மரியதாஸ், அரு.நாகப்பன், பெரி.சிவனடியான், தமிழவேள், கம்பராமன், பாவலர் மணிசித்தன் முதலிய மகாக்கவிகள் என் தலைமையில்!

முன் வரிசையில்- ம.பொ.சி; ஏ.என்.சிவ ராமன்; ஜஸ்டிஸ் மகராஜன்; கி.வா.ஜ; அ.ச.ஞானசம்பந்தம், தெ.பொ.மீ; ஜி.கே.சுந்தரம் - என
முத்தமிழில் துறைபோன மூதறிஞர் பலர். தகவார்ந்த மனிதரும் தருக்கேறி என்னணம் தரைசேர்ந்தார் என்பது பற்றிப் பாடினேன்.

'மனத்தாலே மனிதகுலம்
மேம்பா டெய்தும்; நல்ல
மனங்கெட்டால் மானுடம்தான்
மெல்லச் சாகும்; கொண்ட
தனத்தாலே கல்வியாலே
தருக்கு ஏறித் - தலை
கனத்தாலே கனத்த தலை
கவிழ்ந்து போகும்!’

- இப்படிப் பாடிவிட்டு, இதற்கு உதாரணமாய் இலங்கை வேந்தைச் சொன்னேன்.

'விலங்கு மனம் கொண்டிருந்தான்
இலங்கை வேந்தன்; அந்த
விலங்கு இனம் தன்னாலே
வீழ்ச்சி யுற்றான்; சிறு
குரங்கு என அதன் வாலில்
தீ வைத்தானே - அது
கொளுத்தியதோ அவனாண்ட
தீவைத்தானே!’

- இதைக் கேட்டு 'தீவைத்தானே சிலேடை பிரமாதம்’ என வாய்விட்டுக் கூவிக் கை தட்டினார் சிலம்புச் செல்வர்!     
                         
கவியரங்கம் முடிந்த பின், முன் வரிசையில் அமர்ந்திருந்த கி.வா.ஜ மேடைக்கு வந்து, என் முதுகில் தட்டிக் கொடுத்து 'நீர் பாடியபடி - நீர் எந்தக் காலத்திலும் தருக்கில்லாமல் இருக்கக் கடவது!’ என ஆசீர்வதித்தார்.

நான் - அன்று முதல் 'நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்!

செருக்கு மட்டுமல்ல; சூழலும் சிலர் சரிவுக்குக் காரணமாகிறது. இதைத்தான் 'விநாச காலே விபரீத புத்தி!’ என்று சாத்திரங்கள் சாற்றுகின்றன. காரியங்களை நாமறிவோம்; காரணங்களை, நாயகனே அறிவான்!

ஒரு பழம்பாடல்.
'வால் நீண்ட கரிக்குருவி
வலமிருந்து இடம் போனால் - கால்நடையாய்ச்
சென்றவர்தாம்
கனக தண்டிகை ஏறுவரே!’

- கனக தண்டிகை என்றால், தங்கப்பல்லக்கு. கரிக்குருவி என்பது 'வலியன்’ எனும் பறவை. இதைத்தான் ஆண்டாள் 'ஆனைச் சாத்தான்’ எனத் திருப்பாவையில் பாடுகிறாள்.
இந்த கரிக்குருவி - இடம்இருந்து வலம் போனால் - கனக தண்டிகை ஏறியோர் கால்நடையாய்ச் செலக்கூடும் எனப் பொருள் கொள்ள வேண்டும்!

இதனை எண்ணுங்கால் - திரைத் துறையில் சிலரது தாழ்வு - என்னைத் திகைக்கவைக்கிறது!

'இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் - இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்!’
இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் ஓரிரு சமயங்களில் வந்தபோதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்!

எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்; அவருக்கா இப்படிஒரு சிரமம்?

ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன். அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய்! வாலி!’ என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத அண்ணனோடும் - சிரிக்கச் சிரிக்க அளவளாவிவிட்டு, ''வாலி! உன் டிரைவரைவிட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே!''

எவ்வளவு பெரிய நடிகர்! எம்.ஜி.ஆர்; சிவாஜி படங்களில் அவர் களைவிட அதிகம் சம்பளம் வாங்கி யவர்! படுக்கையறைக்கே கார் வரும் மாதிரி - பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்?

என் வீட்டு வாசலில் ஒரு Taxi; ஒரு நடிகை! என்னைப் பார்க்க வந்தவர், 'வாலி சார்; எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; நான் ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்!’ என்று சொன்னதும் -
நான் நூறு சுக்கல்களாய் நொறுங்கிப் போனேன்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை.
நான் கவனித்துவிட்டேன். ஓடிப் போய் அவரருகே சென்று, 'நமஸ்காரம் அண்ணா! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன்தான்; இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி!’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரை வணங்குகிறேன்.

'ஓ! நீங்கதான் அந்த வாலியா?’ என்று என் கைகளைப் பற்றுகிறார்.
அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன் -

அவர் தொட்டதால் அல்ல; அவரை மக்கள் கவனியாது விட்டதால்!
காலம் எப்படியெல்லாம் காட்டுகிறது - தன் ஆளுமையை!
இப்போது எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை!

என்னிடம் கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு.இளங்கோவன்!

என்னிடம் சிகரெட் கேட்டவர் 'மாடி வீட்டு ஏழை’யான திரு.சந்திரபாபு அவர்கள்!

நாடகம் எழுதித் தரக் கேட்டவர் - நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்!

எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் -
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் - திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர்!

இவர்களைவிடவா நான் மேலானவன்? எனவே எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்:

அடக்கமாகும் வரை
அடக்கமாக இரு!

கவிஞர் வாலி ஐயாவின் "நினைவு நாடாக்கள்"
.
எதுவும் நிலையில்லாதது..
நான் என்ற எண்ணம் விடுத்து, நாளெல்லாம் நல்லவர்களை நினையுங்கள்..!!

Sunday, July 26, 2020

அம்மா, அப்பா தமிழ் அர்த்தம்

பெத்தவங்கள ஏன் ..............???

"அம்மா",  "அப்பா" ன்னு கூப்பிட்றோம்.. எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.? 

அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..? 

அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...?

அ – உயிரெழுத்து.

ம் – மெய்யெழுத்து.

மா – உயிர் மெய்யெழுத்து.

அ – உயிரெழுத்து.

ப் – மெய்யெழுத்து.

பா – உயிர் மெய்யெழுத்து.

தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.

தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் 
(கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். . 

இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. 

எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.
 
நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!

"மம்மி -என்பது பதப்படுத்தப்பட்ட பிணம்...".

​தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...​

Monday, June 29, 2020

Marie Antoinette

Marie Antoinette, while going for getting executed, stepped over the foot of her executioner. 

Her last words,  " I beg your parden,  Sir ".

Marie Antoinette on the way to her execution.

The Execution of Marie Antoinette, Queen of France, October 16, 1793

உலகின் மிகப்பெரிய பொய்கள்:

Sunday, June 28, 2020

ஜனாதிபதி அப்துல் கலாம் தடுத்து நிறுத்திய திருமணம்

"அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா ?
என்ன சொல்றீங்க...?"

"ஆமா. அந்தப் பெண்ணின் பெயர் சரஸ்வதி."

"எப்போ நடந்தது இது ? எதுக்காக அந்த கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?"

என் கேட்ட என் நண்பரிடம் விளக்கமாக நான் அதை சொன்னேன்.

ஆம். அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம்.

அப்போது உயர் அதிகாரியாக திருச்சியில் பணி புரிந்து வந்த கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.

"சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.

கலாம் சொன்னார் அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.

காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.
மாப்பிள்ளைக்கு 47. இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன்.

கலாம் தொடர்ந்தார்,  "கட்டாய கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம் அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுது. அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை..."

"அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியபெருமாள். "பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"

ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.

அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார். ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.

கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது. அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ சரஸ்வதி நன்றி சொன்னாள்.

"சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்."

"நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. அதற்கான ஏற்பாடு பண்றோம்."

சொன்னாள். கவனமாக குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.

"ஓகே, நாங்க புறப்படறோம். அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்."

"என்ன சார் ?"

"உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே.  அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?"

"நான்தான் சார்."

ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.

"எப்படீம்மா ?"

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை. அந்த கூட்டத்திற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள்.

பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம். Only four students..."

கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.

கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்து பாராட்டினார் கலாம்.

"இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்."

அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன.

எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.

இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார். அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார். அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.

காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?

சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி.

அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.

யார் இந்தப் பெண் ? எங்கோ பார்த்தது போல இருக்கிறதே !

மேடையில் நின்ற அந்தப் பெண்
மூச்சு வாங்க சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்."

யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்? எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.

"கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன்.
மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம்.

நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா ?"

"தெரியவில்லை" என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.

அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள்:

"ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள். 
படிக்க வைக்கப்பட்டவள். நான்தான் துறையூர் சரஸ்வதி."

இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கி போகிறார்.

"உங்களுக்கும் நன்றி. உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி."

சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண்.

ஆச்சரியம்தான். அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது. தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.

ஆம்.... அது ஒரு அழகிய கலாம் காலம்.

முருகனின் 100 அழகிய பெயர்கள்.

Friday, June 26, 2020

பிரபுவின் சிறுகதை - 2

அருமையான கதை தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும்.

ஒரு ஊரில் குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். 

அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. 

சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். 

இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை !

அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை !

நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள்.

பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். 

ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். 

எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. 

குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார். 

உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். 

எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும்.

எனவே அவரை வீழ்த்துபவருக்க 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்!

பெரிய தொகைதான்,  இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது.

இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 

10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. 

இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். 

பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். 

அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். 
வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். 

போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.

புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான். 

அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான்.

அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள்.

அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான்.

அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். 

வந்தவன் திடீரென்று ,  "என்னய்யா ஆச்சு உங்களுக்கு ?, பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே ! உடம்பைப் பாத்துக்குங்க" என்று சொல்லிக் கிளம்பினான்.

"எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " . 

அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.

மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான்.

" ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன். நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க. 
அதுல சந்தேகமே இல்லை. ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? " என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.

'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது.

போட்டி துவங்கும் நேரம் வந்தது. 

பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர்.

அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான்.

"என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே  என்னாச்சு உங்களுக்கு ? " என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் . 

அவ்வளவுதான்  வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார்.

போட்டி துவங்கியது . 

அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது.

இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார். 

எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும், வீரத்தையும் பாராட்டினார்கள் . 

அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.

பலருடைய வாழ்வில், வந்துவிட்ட வியாதியைவிட, வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது. 

பலப்படுவோம் எண்ணங்களால், நம்பிக்கைகளால் !

உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில் மிருகபலத்தோடு இருப்போம்.

பிறரின் வார்த்தைகளால், பயப்படவும் வேண்டாம், பலவீனப்படவேண்டாம்
கொரான வந்து விடும். நமது வாழ்வு முடிந்து விடும் என்ற எண்ணமே நம்மை கொன்று விடும்.. அந்த கெட்ட எண்ணங்களை தூக்கி வீசிவிட்டு நமது எதிர்கால திட்டங்கள் நோக்கி பயணம் செய்வோம்.

Saturday, May 30, 2020

பிரபுவின் சிறுகதை - 1.

அதிகாலை மணி இரண்டு. தூக்கம் வராமல், புரண்டு புரண்டு படுத்தவாறு இருந்தான், சொக்கலிங்கம். 

முதல் நாள் மாலையில், தன் தம்பி ராமலிங்கத்துடன் தொலைபேசியில் பேசியதிலிருந்து தவிப்பாகவே இருந்தது அவனுக்கு. 

வீட்டு கட்ட உதவும் சாமான்கள் மற்றும் வண்ணங்கள் விற்கும் கடை நடத்துபவன் சொக்கலிங்கம். 'தொழில் பழகுகிறேன்'- என்று சென்னைக்குச் சென்ற தம்பி ராமலிங்கம் ஓரளவு அனுபவம் வந்தவுடன், ஒரு ஜவுளிக் கடை தொடங்கி வெற்றியாக நடத்தி அந்த நகரத்திலேயே தங்கி விட்டவன். சுமார் இரண்டு வருடங்கள் முன்பு, தான் வீடு கட்டப் போவதாகவும், பண உதவி தேவைப்படுவதாகவும்  கேட்க, சொக்கலிங்கமும் தர ஒத்துக் கொண்டான். 

அவன் மனைவி கற்பகம், “ஏங்க, நாம கூட வீடு கட்டணும்னு ப்ளான் பண்ணியிருக்கோம்ல. இப்போ உங்க தம்பிக்கு எப்படிக் குடுக்கிறதாம்..?”

“நீயே யோசிச்சுப் பார், நாம பணம் ஓரளவு ரெடி பண்ணி, கூடக் கொஞ்சம் லோன் வாங்கிக் கட்டணும்னா கூட இன்னும் ரெண்டு வருஷம் ஆகும். அதுவரைக்கும் சேமிக்கிற பணத்த அவனுக்குக் கொடுப்போம், அவனாவது வீடு கட்டட்டும். பின்னாடி நமக்கு வேண்டிய போது, திருப்பித் தரப் போறான்.”

“பாங்க்ல போட்டா கொஞ்சம் வட்டியாவது வரும்ல...”

“பரவாயில்ல.., அவனுக்கு நான் உதவலைன்னா... வேற யாரு செய்யப் போறா...?”

சொக்கலிங்கத்திற்கும், ராமலிங்கத்திற்கும் ஒன்றரை வருடங்கள் தான் வித்தியாசம். 

முதலிலிருந்தே தன் தேவைகளைக் குறைத்து, தம்பிக்காக விட்டுக் கொடுத்து வேண்டிய உதவிகளைச் செய்வதில் முனைப்பாக இருந்தவன் சொக்கலிங்கம். தந்தை இல்லாததால், அது தன்னுடைய கடமை என்றிருந்தான். ஆகையால், இப்பொழுது இந்த மாதிரி ஒரு வேண்டுகோள் வரவும் நிராகரிக்க மனம் வரவில்லை.

அதுவரை சேர்த்து வைத்திருந்த பத்து லட்சத்தை அன்றே கொடுத்து விட்டான். பின்னர், தனக்கு வரும் லாபத்தை எல்லாம் அவ்வப்பொழுது அனுப்ப ஆரம்பித்தான். தம்பியின் வீடும் வளர்ந்து கொண்டிருந்தது. சென்ற வாரம் தன்னுடைய வரவு செலவுகளை எழுதி வைக்கும் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கடைசியாக ஆறு மாதங்கள் முன்பு எட்டு லட்சம் தம்பிக்குக் கொடுக்கப்பட்டதாக எழுதியிருந்தான். மொத்தம் இருபத்தியெட்டு லட்சம் ஆகியிருந்தது.

'தம்பி தானாகத் திருப்பித் தரும்வரை, தாம் பொறுமையாக இருக்க வேண்டும்'- என்று சொல்லிக் கொண்டான்.  

இன்று மாலை தம்பியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.

“அண்ணே, சௌக்கியம்தானே..?” 

"ராமா.., வீட்டு வேலைல்லாம் எப்படி போயிட்டு இருக்கு...?” 

"இப்போ கொஞ்சம் இன்டீரியர் ஒர்க் நடந்துக்கிட்டு இருக்கு. 'இன்னும் எப்படியும், நாலு மாசத்துல, குடி போயிறலாம்'-ன்னு இன்ஜினியர் சொல்லியிருக்காருண்ணே..”

“ரொம்ப சந்தோசம். ஒரு வீடுதான் கட்டி வாழப் போறோம், நல்லா செஞ்சுக்கோ. எதிலும் குறை வைக்காதே, பின்னாடி, இப்படி பண்ணி இருக்கலாம். அப்படி பண்ணி இருக்கலாம்'- ன்னு தோணக் கூடாது, சரியா...?” 

"அண்ணே... உங்க மேற்பார்வையில வளர்ந்தவன், நான். 'விரலுக்கேத்த வீக்கம் வேணும்' - ன்னு நீங்க அடிக்கடி சொல்வீங்க. என் விரல் எனக்குத் தெரியும். சரிண்ணே, நீங்க எப்போ தொடங்கப் போறீங்க...?”

"நீ முதல்ல முடி. அப்புறம் பார்த்துக்கலாம்” 

“இப்பவே, ப்ளான் பண்ண ஆரம்பிச்சிருங்கண்ணே... நான் எப்படியும் அடுத்த ஒரு வருஷத்துல, கொஞ்சம் கொஞ்சமா உங்ககிட்ட வாங்கின இருபத்திமூணு லட்சத்தை கொடுத்துடறேன்.”

இப்படித் தம்பி சொல்லவும், சில வினாடிகள் மௌனமாக இருந்தான், சொக்கலிங்கம். ‘என்னடா இது, இருபத்தியெட்டு லட்சம் ஆயிற்றே, இவன், இருபத்திமூன்று என்கிறானே...’ 

தொலைபேசியில்..., “தம்பி, அது இருபத்தி மூணா..? இருபத்தியெட்டுன்னு..., நான் நினைக்கிறேன்.” 

"அப்படியா, நான் செக் பண்ணிட்டு ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சுக் கூப்பிடுறேன்.”

இதுவரை நடந்த உரையாடல் ஒன்றும் பெரிதாகப்படவில்லை, சொக்கலிங்கத்திற்கு. இரண்டு நிமிடங்கள் கழித்து,  மறுபடியும் அழைப்பு வந்தது.

“அண்ணே, ஃபுல்லா செக் பண்ணிட்டேன், இருபத்திமூணு லட்சம்தான் வாங்கி இருக்கிறேன்.”

'இதற்கு, எப்படி பதில் அளிப்பது..?'- என்று சற்று யோசித்தான் சொக்கலிங்கம். 

ஹவுஸ் ஸஜ்ஜஜ்"ஒரு வாரம் முன்னாடிதான், இந்த வீடு கட்டின வரவு செலவுகளெல்லாம் எங்க ஆடிட்டர் கிட்ட கொடுத்தேன். அப்போ உங்க சைடுல இருந்து இருபத்திமூணு லட்சம் வந்திருக்குன்னு அவரும் சொன்னது ஞாபகம் இருக்கு.”

"அப்படியா, நானும் ஒண்ணுக்கு ரெண்டு தடவ செக் பண்றேன். நீயும், ஒரு தடவை மறுபடியும் பாரேன்..”

"சரி, பாக்குறேன்..”. அலைபேசி துண்டிக்கப்பட்டது 

அப்பொழுது ஆரம்பித்தத் தவிப்பு இப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருந்தது. 

'இதைத் தம்பி வேண்டுமென்றே செய்திருக்க வாய்ப்பு இல்லை. எங்கேயோ... தவறு நடந்திருக்கிறது. இப்பொழுது இதை மேற்கொண்டு எப்படி எடுத்துச் செல்வது..?'- மனைவியிடம், 'இந்த உரையாடலைச் சொல்லி, கலந்தாலோசிக்கலாமா...?' 

'வேண்டாம்,.. வேண்டாம்..., யாருக்கும், எந்த ஒரு மனக்கசப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது. ஐந்து லட்சம் என்பது, ஒரு சிறிய தொகை அல்ல. நாளை அழைக்கிறேன்'- என்று கூறியிருக்கிறான். ஒருவேளை இருபத்திமூன்று தான்'- என்று சொல்லிவிட்டால்...?’ 

யோசிக்க... யோசிக்க..., இந்த விவகாரத்தால், இத்தனை வருட உறவு முறிய வாய்ப்பு உள்ளதை உணர்ந்தான். மனது கனக்க ஆரம்பித்தது. 

'இல்லை... இல்லை... அப்படி ஒன்றும் நடக்காது...’

'ஒருவேளை தம்பி, தன்னை ஏமாற்ற நினைக்கிறானோ...'- என்று ஒரு கணம் சிந்தித்தான்.  

பின்னர், உடனே தன்னைத்தானே கடிந்து கொண்டான், அவ்வாறு நினைத்ததற்காக வருத்தப்பட்டான். மீண்டும் அந்தக் கணக்குப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தான். 

‘அவனுக்கு தரவில்லையென்றால்.., வேறு எதற்கு செலவு செய்தேனோ... அதை எழுதியிருப்பேன், அப்படி ஒன்றும் இல்லையே...’

இதோ படுக்கைக்கு வந்து நான்கு மணி நேரங்கள் ஆகிவிட்டன, தூக்கம் வரவில்லை. எப்படி வரும்...? 

'நாற்பது வருட பந்தம், இந்தப் பணம் என்னும் பேயால், அழிந்து விடுமோ...? என்ன செய்யலாம்…!!! என்ன செய்யலாம்..?’ 

திடீரென்று, ஒரு ஞானோதயம் உதித்தது. 

'நான், இனி அவனிடம் இதைப்பற்றி கேட்கப்போவதில்லை. ஐந்து லட்சம் தானே, அடுத்த ஆறு மாதங்களில், நான் அதை மீட்டெடுக்க முடியும். ஒரு சில மாதங்கள் என் தொழிலில் நஷ்டம் இருந்ததாக எண்ணிக் கொள்கிறேன், அவ்வளவுதானே. நல்ல வேளை, வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. இதை இப்படியே விட்டு விடுவோம். இதன் மூலம் குடும்பத்தில் எந்தக் குழப்பமும் இல்லாமல், எந்த விரிசலும் ஏற்படாமல் இப்பொழுது உள்ளபடியே தொடரட்டும். ஐந்து லட்சம் பெரிதா..?, தம்பி பெரிதா...?  போகட்டும் அந்தப் பணப்பேய்….”  

இந்த எண்ணம் தோன்றியவுடன், அவன் மனம் மிகவும் அமைதி அடைந்தது. அடுத்த பதினைந்து நிமிடங்களில் உறங்கிப் போனான். 

அடுத்த நாள் காலை, வெளியே சற்று உலாத்திவிட்டுத் திரும்பியபோது, அவர் மனைவி,

"என்னங்க நேத்து சரியா தூக்கம் இல்ல போல...? என்ன விஷயம்?” 

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல” 

"இப்போகூட காலையில இருந்து என்கிட்ட ரெண்டு வார்த்தை கூட பேசல..”

அதைக் காதில் வாங்காதது போல், அன்றைய தினசரியைப் படிக்க ஆரம்பித்தான் சொக்கலிங்கம்.

“அபிராமி, ஃபோன் பண்ணினா”

சட்டென்று நிமிர்ந்தான். 

அபிராமி ராமலிங்கத்தின் மனைவி. ‘தான் மறைக்க நினைத்தது, வெளிப்பட்டு விட்டதோ...?’

"என்னவாம்?”

“இந்த லீவுல, கொழந்தைங்கள இங்க கொண்டு வந்துவிடப் போறாளாம். பெரீம்மா வீட்டுக்குப் போணும்ன்னு சொல்றாங்களாம். நம்ம சித்திரைத் திருவிழா வருதில்ல... போன வருஷம் மிஸ் பண்ணிட்டாங்களாம், இந்த வருஷம் கண்டிப்பா பாக்கணுமாம். நம்ம பையனுக்கும் அவங்ககூட நல்லா பொழுது போகும்.”

"அவ்வளவு தானே...”

“என்ன கொஞ்சம் கூட சுவாரசியம் இல்லாமக் கேக்குறீங்க..?”

"வரட்டும்மா, நல்லா வரட்டும்..”

“ஒண்ணு கவனிச்சீங்களா...? பெரீம்மா வீடுன்னு சொன்னாங்களாம், பெரீப்பா வீடுன்னு சொல்லல…” - என்று சொல்லிச் சிரித்தாள் கற்பகம்.

அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான், சொக்கலிங்கம்.

"அப்புறம் இன்னொண்ணும் சொன்னா...”

“………………”

"நாம பணம் கொடுத்ததாலதான், இவ்வளவு சீக்கிரம் வீடு கட்ட முடிஞ்சதாம். ஒரு தாங்க்ஸ் சொல்லச் சொன்னா...”

இதுவரை இறுக்கமாக இருந்த சொக்கலிங்கத்தின் முகம் மலர்ந்தது. 'தான் எடுத்த முடிவு எவ்வளவு சரியானது'- என்று தன் மேல் ஒரு சிறிய கர்வம் கூட எட்டிப் பார்த்தது, அவனுக்கு. 

அன்றும், அடுத்த இரண்டு நாட்களும், தம்பியிடமிருந்து அழைப்பு வரவில்லை. 

மூன்று நாட்கள் கழித்து, காலையில் அலைபேசி சிணுங்கியது, ராமலிங்கம் என்று பெயரையும் காண்பித்தது. சொக்கலிங்கத்தின் மனம் படபடக்க ஆரம்பித்தது. தான் எடுத்த முடிவைக் காக்க உதவுமாறு ஒருகணம் ஆண்டவனை வேண்டிவிட்டு கைபேசியை எடுத்தான்.

“ஹலோ, சொல்லு ராமா...”

“அண்ணே... மன்னிக்கணும். ஆடிட்டர், இப்போ தான் கூப்பிட்டார். நீங்க சொன்னது தான் சரி, இருபத்தி எட்டு லட்சம் வாங்கியிருக்கேன் உங்ககிட்ட இருந்து”

சொக்கலிங்கத்திற்கு சட்டென்று பேச்சு வரவில்லை. இவ்வாறு நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று யூகித்து இருந்தாலும்,  'நடக்காமல் போய்விட்டால், என்ன ஆகும்.?'- என்ற கவலை மேலோங்கி இருந்ததால், தம்பி இவ்வாறு கூறியவுடன் அமைதியாகிவிட்டான். 

“சரிடா, பரவாயில்ல...”

"ஒண்ணும் நினைச்சுக்காதீங்கண்ணே, சரியா...?” 

“உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா..? இதை இப்படியே விட்டுற்றா”

இப்பொழுது மனம் குதூகலம் ஆகி விட்டது. ஐந்து லட்சம் தவறாமல் இருந்ததற்காக அல்ல, உறவைத் தவற விடாமல் இருந்ததற்காக... சட்டென்று எழுந்து சட்டையை மாற்றிக் கொண்டு புறப்பட்டான்.

"எங்கே கிளம்பிட்டீங்க...?” 

"கோவிலுக்கு...”

"என்ன இப்போ திடீர்னு..?” 

"ராமன் கால்ல போய் கொஞ்சம் விழுந்துட்டு வர்றேன்..”
 
 "---------------"

ஐந்து மாதங்கள் கழித்து, எல்லோரும் கிரகப்பிரவேசத்திற்கு சென்னை சென்று வந்தார்கள். வீடு கட்டிய அனுபவத்தை நன்கு விவரித்தான், தம்பி. 

சொக்கலிங்கம், மதுரையில் தான் வாங்கியிருந்த இடத்தைச் சொன்னவுடன், அதற்கேற்றவாறு எப்படி வீட்டைத் திட்டமிட வேண்டும் என்பதையும் விவாதித்தார்கள். 

பின்னர் வீடு கட்ட ஆரம்பித்து, ஒரு ஆண்டு ஓடிவிட்டது. சொன்னபடி, இருபத்தியெட்டு  லட்சத்தையும், இந்த ஒன்றரை ஆண்டுகளில் திருப்பித் தந்துவிட்டான் தம்பி. 

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. கடை இல்லாததால், வெளியே சென்றுவிட்டு சொக்கலிங்கம் திரும்பி வந்தபோது, வீட்டில் கற்பகம் யாருடனேயோ பேசிக்கொண்டிருந்தாள். 

“வாங்க, உங்களுக்காகத் தான், இவர் வெயிட் பண்ணிட்டு இருக்காரு.” 

சற்றுப் பொறுத்துதான் ஞாபகம் வந்தது. “ஓ, உன் தூரத்துச் சொந்தம் இல்ல...?  திருச்சியில இருக்கிறதாச் சொல்லுவியே..?"  

“ஆமாங்க,  பேரு ஸ்ரீதர். ”

ஸ்ரீதர் பேச ஆரம்பித்தான். “உங்களாலதான், நான் இன்னிக்கு ஒரு மனுசனா தலை நிமிர்ந்து நிக்கிறேன், மாமா.. ” 

"என்ன சொல்ல வர்ற, புரியலையே..”

"ரெண்டு வருஷம் கழிச்சு, இப்படி லேட்டா வந்ததுக்கு என்ன மன்னிக்கணும்.”

ஒன்றும் புரியாமல் தன் மனைவியை நோக்கினான் சொக்கலிங்கம்.

ஸ்ரீதர் தொடர்ந்தான். 

“நான் ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு, ஒருத்தர் கிட்ட பணம் கடனா வாங்கியிருந்தேன். சொன்ன நேரத்துக்கு  திருப்பிக் கொடுக்க முடியல. ஒரு நாள் அவர் வீட்டுக்கே வந்து சத்தம்போட்டுப் போயிட்டார், ரொம்ப அவமானமா இருந்தது. அப்போதுதான், என் மனைவி கற்பகம்,  'அக்காகிட்ட போய்க் கேட்டுப் பாருங்க'- ன்னு ஞாபகப்படுத்தினாள். நானும் இங்கே வந்து கேட்டேன். அப்போ, நீங்க எங்கேயோ அவசரமா வெளியூருக்குக் கிளம்பிக்கிட்டு இருந்தீங்க. நான் சொன்னதைக்கூட அரைகுறையாதான் கேட்ட மாதிரி பட்டுச்சு...” 

கற்பகம், “ஆமாங்க, இவன் கேட்கிற அந்த அஞ்சு லட்சத்தை நம்ம பீரோவில் இருந்து எடுத்துக் கொடும்மான்னு சொல்லிட்டு, நீங்க போயிட்டீங்க, நானும் கொடுத்துட்டேன்.”

ஸ்ரீதர், “அந்தப் பணம் என் சொந்தக்காரங்க மத்தியிலும், என்கூட தொழில் பண்ற மத்தவங்க மத்தியிலும், என் மானம் பறிபோகாம காப்பாத்துச்சி. அதுக்கப்புறம், இந்தப் பக்கம் வரத் தோதுபடல. 'அக்காவைப் பார்க்கப் போனா பணம் ரெடி பண்ணிட்டுதான் போகணும்'- னு உறுதியா இருந்தேன். இந்த ரெண்டு வருஷத்துல கொஞ்சம் கொஞ்சமா தேத்திக் கொண்டு வந்துட்டேன்..”

அவன் சொல்ல சொல்ல சொக்கலிங்கத்துக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. அந்தப் பழைய நிகழ்வை ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சித்தான்.

“ரொம்ப நன்றி... மாமா, நேரம் கிடைக்கிறப்போ திருச்சிக்கு வாங்க..”- என்று கூறிவிட்டு, கிளம்பிவிட்டான அவன். 

தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான், சொக்கலிங்கம். ‘நடந்தது என்ன..? சற்று நிதானமாக யோசிப்போம். ஆக, அன்று எட்டு லட்சத்தை தம்பிக்குக் கொடுப்பதாக கணக்கு எழுதி பீரோவில் வைத்திருந்தேன். இவன் வரவும் அதிலிருந்து, ஐந்து லட்சம் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தான் நேரடியாக பங்கு கொள்ளாததாலும்,  அன்று அவசரமாக வெளியூர் சென்று விட்டதாலும், திரும்பி வந்து இதை அந்த புத்தகத்தில் பதிவிட மறந்துவிட்டிருக்கிறேன். தம்பிக்கு அந்த சமயத்தில் மூன்று லட்சம்தான் கொடுத்திருக்கிறேன். அப்படியானால்... தம்பி 28 லட்சம் வாங்கியதாகச் சொன்னானே, எப்படி...? கணக்கு இடிக்கிறதே...’. 

யோசிக்க... யோசிக்க... ஒரு பலமான உண்மை புலப்பட்டது. உடனே, உள்அறைக்குச் சென்று, தன் தம்பி  ராமலிங்கத்தைக் கைபேசியில் அழைத்தான். 

“ஏன்டா பொய் சொன்னே...?” 

“என்னண்ணே புரியலையே...?”
 
“உன் நல்ல மனசுக்கு, அது புரியாதுடா...” 

"கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க...”

“அன்னைக்கு, மூணா எட்டான்னு குழப்பம் வந்துச்சு, இல்லையா...?  நீ, 23 - லட்சம் வாங்கிட்டு,  28 - ன்னு ஏன் சொன்னே...?”

“இல்லண்ணே, 28 - தான் வாங்கியிருந்தேன்” 

“இங்க பார், ஏற்கனவே தப்பு பண்ணிட்டேன்னு மனசு என்ன குத்திக்கிட்டு இருக்கு. நீ மேலும் என்னை வேதனைப் படுத்தாத. சொல்லு, உண்மையைச் சொல்லு.”

"ஆமாண்ணே.. அன்னைக்கு சாயந்திரம், நீங்க போன் பண்ணினப்போ உங்க நிலைப்பாட்டில உறுதியா இருந்ததைக் கவனிச்சேன். எங்கயோ தப்பு நடந்திருக்குன்னு புரிஞ்சது. அதுக்காக உங்ககூட சண்டை போட முடியுமா... என்ன.?  ரெண்டுக்கு நாலு முறை நான் எல்லாத்தையும் செக் பண்ணினேன். ரொம்ப உறுதியா 23 - தான்னு தெரிஞ்சது. அடுத்த நாள் நீங்களாவே என்னைக் கூப்பிட்டு, தப்பாச் சொல்லிட்டேன்னு சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா, உங்க கிட்டருந்து போன் வரல. அப்படீன்னா,  நீங்க சொன்னதுதான் சரின்னு நம்பிக்கிட்டு இருக்கீங்கன்னு புரிஞ்சது. அடுத்த ரெண்டு நாள் எனக்கு ஒண்ணுமே ஒடல. மனசுல என்னென்னமோ பயப்படும்படியான எண்ணங்கள் எல்லாம் வந்து போச்சு. இந்தப் பணப் பிரச்சினையினால, உங்கள இழந்துடுவேனோன்னு பயந்தேன்ணா..”

“………………….”

"அப்புறமா ஒரு முடிவுக்கு வந்தேன். உங்களைக் கூப்பிட்டு, 28 - ன்னு சொன்னேன். சொல்லி முடிச்ச உடனே, உங்க குரல்லயும் ஒரு சாந்தம் வந்ததை கவனிச்சேன். அதனால, நான் எடுத்த முடிவு சரிதான்னு உணர்ந்தேன்.”

சொக்கலிங்கத்தின் கண்களில் நீர் திரண்டு கொண்டிருந்தது. 

"இந்த அஞ்சு லட்சம் என்ன ஒரு பெரிய பணமா...? நீங்க என்னை இதுவரை கவனிச்சதுக்கு, ஐம்பது லட்சம்கூட கொடுக்கலாம். உங்ககிட்ட போன்ல பேசினதுக்கப்புறம் என் மனசு ரொம்ப அமைதி ஆயிடுச்சு..."

“நான்,  அன்னைக்கே அதை மறந்துட்டேன்ணே. இப்போ எப்படி அது வெளிய வந்துச்சு...?”

அவன் பேசிக்கொண்டே போக, தன் கைகுட்டையால் கண்களைத் துடைத்து கொண்டிருந்த சொக்கலிங்கம், தன்னை ஆசுவாசப்படுத்திகொள்ள சற்று நேரம் ஆனது. 

“அண்ணே, லைன்ல இருக்கீங்களா...?” 

“அப்புறம் பேசுறேன்டா..” - என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். மறுபடியும் வெளியே கிளம்பினான். 

கற்பகம், “எங்கே போறீங்க...?” 

"கோவிலுக்கு..."

'ராமலிங்கம் காலில் போய் விழ முடியாது, இங்கே ராமன் கால்லயாவது விழுந்துட்டு வரேன்.'-  என்று அவன் முனகியது கற்பகத்திற்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.

இந்த உன்னத உறவுகள் வாழ்க.. வாழ்கவே...