Wednesday, April 29, 2020

மதுரை குஞ்சரத்தம்மாள்.

ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, 5 வருடங்களாக மக்களை பட்டினியால் வாட்டிிபல ஆயிரம் உயிர்களை பழிகொண்ட தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது  கேள்விப்பட்டதுண்டா? நாம்.

சு.வெங்கடேசன் இயற்றிய சாகித்ய அகாதமி விருது பெற்ற காவல் கோட்டம் எனும் நூலின் பதிவிலிருந்து...

1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப்  பெரும் பஞ்சம் புரட்டிப் போட்டது.


வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது.

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . 

பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது. 

குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி.
மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான  தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். 

மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவைதான்.

தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள்.
கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து,  வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.

பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது.
வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்-

இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா என்று பெருந்தனக்காரர்கள் பேசிக் கொண்டனர்.

அவளின் செய்கை அவர்களை கூசச் செய்தது. ஆனால், கஞ்சி ஊத்தும் செய்தி கேட்டு மக்கள் வந்து கொண்டேயிருந்தனர். அந்தக் கூட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. 


பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்க குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர். 

ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை. தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது. அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர்.

தேவையின் பயங்கரம் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி இருந்தது. ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள். 

தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில் தான் கலெக்டர் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார்,
ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம். 

நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தது. நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது. 

ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது.

பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு
எல்லாவற்றையும் எரித்தது. அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள்.

கல் பதித்த தங்க நகைகள், வெள்ளி நகைகள், முத்துக்கள், காசு மாலை, மோதிரம், ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு பசிப்பிணி தீர்த்தது.

தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது. தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது.

அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானாள்,யாரைப் பற்றிப் பேச
யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில் கூட குஞ்சத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள். 

அவள் முகம் மலர்ந்திருந்தது. தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள்.

ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு 
விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய்.

தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை. 

சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது. 

கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார்.

நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் ரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப்புரண்டு கதறியழுதனர். 

அவள் நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள். எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும் வணங்கிச் செல்ல வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது.

அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது, சலங்கையைப் படையிலிட்டு வணங்கி தெய்வமாக்கிக் கொண்டனர்.
மாமதுரை மக்கள்.

Saturday, April 25, 2020

All Russia Science Festival, April 12-27, 2020

Never Give Up....


An amazing story on Marvan Attapattu Srilankan Cricketer
    
It’s a story that Harsha Bhogle, India’s most loved cricket commentator, loves to tell, over and over again. Making his debut in Test cricket for Sri Lanka, Marvan scored a duck in his first innings. And again, in his second innings.

They dropped him. So he went back to the nets for more practice. More first-class cricket. More runs. Waiting for that elusive call. And after twenty-one months, he got a second chance.

This time, he tried harder. His scores: 0 in the first innings, 1 in the second Dropped again, he went back to the grind. And scored tonnes of runs in first-class cricket. Runs that seemed inadequate to erase the painful memories of the Test failures. Well, seventeen months later, opportunity knocked yet again. Marvan got to bat in both innings of the Test. His scores: 0 and 0. Phew!

Back to the grind. Would the selectors ever give him another chance? They said he lacked big-match temperament. His technique wasn’t good enough at the highest level. Undaunted, Marvan kept trying.

Three years later, he got another chance. This time, he made runs. He came good. And in an illustrious career thereafter, Marvan went on to score over 5000 runs for Sri Lanka. That included sixteen centuries and six double hundreds. And he went on to captain his country. All this despite taking over six years to score his second run in Test cricket. Wow! What a guy!

How many of us can handle failure as well as he did? Six years of trying, and failing. He must have been tempted to pursue another career. Change his sport perhaps. Play county cricket. Or, oh well, just give up. But he didn’t. And that made the difference.

We all hear stories of talented people who gave up before their potential was realized. People who changed jobs and careers when success seemed elusive.

The next time you are staring at possible failure or rejection, think of Marvan. And remember this: If you don’t give up, if you believe in yourself, if you stay the course, the run will eventually come. What more you could even become captain some day.

NEVER GIVE UP ! NEVER, NEVER GIVE UP !!

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ...


ஒரு பாடலின் இடையே வரும் ரெண்டு வரிகளில் .. இவ்வளவு பெரிய உண்மை கதை.. அல்ல நிஜமே..

ஒரு பாடலின் கதை
இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்...
என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..!

“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..”

எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது ..!
ஆனால் இன்று ஏனோ....
இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே , மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு... அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”

# பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!

இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....
அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..?

நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன்...

“ அது வந்து.... 
அதாவது.... சிவனின் திருவிளையாடல்களில் 
அதுவும் ஒன்று....
அதற்கு மேல்.... .... முழுசா தெரியலியே..!”.

சரி...பாடலை எழுதியவர் யார் என்று பார்த்தேன்.. கண்ணதாசன்...!.

சும்மா எழுத மாட்டார் கண்ணதாசன்..! 
அவர் ஒரு வரி எழுதினால் ..
அதற்குள்ளே ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்..!

கூகிளில் , அங்கும் இங்கும் தேடி ஓடி... 
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையைப் பிடித்தேன்....
அது இதுதான்...!.

அந்தக் காலத்தில்....காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ....அவன் பெயர் அரதன குப்தன் ....மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்... 

காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும் 
தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை...

எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ....
உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் .... 

வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..
அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..
சற்றுத் தள்ளி ஒரு கிணறு...
கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு ....
அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!.

காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...
காரணம்...?
அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்... 

நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....!.

தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் ....

நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட...
உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்...

சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி , 
இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”.

மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்..
இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ...
அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...!

இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.....

கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!.

வழக்கு சபைக்கு வந்தது...
திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்...
“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி...
முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?” .

கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்....
கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....!.

கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”
ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் : "நாங்கள் சாட்சி..".

குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....
ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!.

“ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்... 
ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக, கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...! .

பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!

இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்... 
வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்....!.

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?.

ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!
இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..!.

# கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!.

கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..!
[ “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..].

#.. கதையைப் படித்து முடித்த நான் , 
கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்து போனேன் ...!

“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?”

....கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் ,  இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே..!  இந்தக் கதையை முழுவதும் படிக்காமல்,  கண்டிப்பாக கண்ணதாசனால் அந்த ஒரு வரியை எழுதி இருக்க முடியாது..!.

சரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் ....
அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..?.

அவற்றை தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை.... நூல்களை.. புராணங்களை.. இதிகாசங்களை அவர் படித்திருக்க வேண்டும் ..?.

# அத்தனையும் இந்த ஒரு ஜென்மத்தில் , 
எப்படி அந்த காவியத் தாயின் இளைய மகன் கண்ணதாசனுக்கு சாத்தியமாயிற்று ..?.

“ஆம்...அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை”.

# கண்ணதாசன் வாசிக்க வேண்டிய கவிஞன் மட்டும் அல்ல... பூஜிக்க வேண்டிய கவிஞன்..!

Wednesday, April 22, 2020

சோழவந்தான் - பெயர்க்காரணம். முதலியார் கோட்டை - வரலாறு.

சோழவந்தான் - பெயர் காரணம்


முதலியார் கோட்டை - வரலாறு

Friday, April 17, 2020

Illayaraja...

இளையராஜா.... ஒரு சிறிய புள்ளி விபரம்! 

1983 முதல், 1992 வரையான பத்தாண்டுகளில் இளையராஜா இசையமைத்தது 455 படங்கள். 

அதிலும், 1984 மற்றும் 1992ல் தலா 54 படங்கள்.

சராசரி 270 பாடல்கள் ஒரு வருடத்தில். 

அதில் குறைந்தபட்சம் 250 பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்.

சராசரி 162 மணிநேர திரை இசைக்கோர்வை ஒரு வருடத்தில்..

நாடி நரம்பெல்லாம் இசை வழிந்து ஓடினால் மட்டுமே இந்த அசுர சாதனை சாத்தியம்....

ஆயிரம் திரைப்படங்கள்,  அதில் குறைந்தது ஐயாயிரம் பாடல்கள், அதில் மிகக் குறைந்தபட்சம்  நாலாயிரம் ஹிட் பாடல்கள்.

எந்த படமாக இருந்தாலும் அவர் பின்னணி  இசையமைக்க எடுத்து  கொண்ட நாட்கள் மூன்று  மட்டுமே..மூன்று நாட்களுக்கு மேல் அவரது ரிக்கார்டிங் தியேட்டரில் எந்த படமும் இருந்ததில்லை..

நூறாவது நாள் படத்தின் பிண்ணனி இசை அமைக்க அவர் எடுத்து கொண்ட நாள் வெறும் அரை நாள் மட்டுமே.

இளையராஜா பின்னணி இசையமைக்க அதிக நாட்கள் எடுத்துக்கொண்டது சிறைச்சாலை படத்திற்குத்தான். எத்தனை நாட்கள் தெரியுமா? வெறும் 24 நாட்கள்.

இசையமைப்பாளர்களில் அதிக பாடல்கள் பாடியவர் இசைஞானி..

இசையமைப்பாளர்களில் அதிக பாடல்கள் எழுதியவர் இசைஞானி..

இவை இளையராஜாவின் "சாதனைகள் அல்ல".

நாடோடித்தென்றல் உட்பட பல படங்களின் பாடல்களை எழுதியதும், வெட்டவெளியில் கொட்டிக்கிடக்கும் எழுத்துக்களும்,  தனி ஆல்பங்களும்,  பிட்சைப் பாத்திரம் ஏந்திவந்த பக்திப் பாடல்களும் சிம்பொனியும் -  எதுவுமே இவரது "சாதனை அல்ல".

ஆயிரம் பாடல்கள் கேட்டாலும், அதில் இளையராஜா பாடல்களை இனம் காணக் கற்ற நம் காதுகளும்,

துக்கம், மகிழ்ச்சி, ஏமாற்றம் வெற்றி, தோல்வி என எல்லா நிலைகளிலும் இவர் இசைதேடும் நம் மனங்களும்,

எந்த நல்ல இசை கேட்டாலும் அது இளையராஜாவே என்று தீர்மானிக்கும்  நம் புத்தியும் தான் 

இந்த இசை ராஜனின் சாதனைகள்!

மூன்று தலைமுறைகள் போற்றுமளவு யாரவது இசையில் இவர்போல் நின்று விட்டு வரட்டும்,  அப்போது அவர்களை இவரோடு ஒப்பிட்டுக்கொள்ளுவோம்...

தீபாவளி வாணவேடிக்கைகள் அழகுதான்,  ஆனால் அவை சூரியனுக்கு ஒப்பாகாது!

வாண வேடிக்கைகளை ரசிப்போம், இந்த இசைச் சூரியனை, தொழுவோம்!!

Thursday, April 2, 2020

Words and Windows by "S"

Words and Windows by "S"

The Education is attention, retention, reflection, application and manifestation.

Of what use is the thought, If you can't feel,
Of what use is the feeling, If you can't will,
Of what use is a will, If you can't act,
Of what use is the act, If it is not right.

The one prudence in life is discipline of energies(Body, mind and intellect) and 
the one evil is dissipation of the same.

Life could be and amalgamation of Discipline, Determination, Dedication and Detachment.

Life
Primarily  -  Strugles for survival
Secondarily - Strugles for strength
Penultimately - Strugles for supremacy
Finally - Strugles for liberation in Body, Mind and Intellect.

Evolve yourself not for anyone's impression but for your own liberation.

Let your life be a course of study of Consideration, Concentration and Consistency.

Children live consciously, Adult live artificially.

Pleasure at the physical level
          is sensation (of Things, beings and Objects)
Pleasure at the mental level
          is appreciation (of Men and Matters)
Pleasure at the Intellectual level
           is reflection (of Knowledge)
Pleasure at the Spritual level
           is manifestation (of Godliness)

Every disadvantage in fact is an advantage for growth.

Manliness is made up of Courage, Character and Culture.

Worldly existance is Superfluous, Selfish and Suffering. 
Let not the world fool you, you fool it - by Silence.

Practicality is nothing but management, manipluation and mastery of men and matters.

This world is made up of people
Some who love
Some who learn
Some who lead
Many who loot
Many who languish
Many who lust.

Life is a mixed packet of pleasure, pains, problems and partings.

This world an institution of individuals who are ingrates
Ungrateful to parents who give birth
Ungrateful to perceptors who give knowledge
Ungrateful to spouse who give love
Ungrateful to children who give joy
Ungrateful to friends who give solace
Ungrateful to the state which gives security
Ungrateful to God who gives life.

You can neither reform nor repair the world but you can do so for yourself.
Evolve yourself not for anyon's impression but for your own liberation.

Fear of emotional insecurity
Fear of financial insecurity
Fear of spiritual insecurity
Arise out of attachment 
to women
to work
to workship
So enjoy without attachment.

Birth is Providential
Growth is individual
Separation is unavoidable
Death is inevitable.

Be pure to your self - You will be pure to others.
Be pleasant to yourself - You will be pleasant to others.
Be at peace with yourself - You will be at peace with others.

Experience heights of emotions but
Simultaneously feel power to control joy or sorrow
let it be intense but serene.

In life think large talk little.
Talk little but tender love and laughter.

Be fair but firm, Be plain but pure. Bear but nit burden.
Burden not any human being with your anger, anguish, sorrow, suffering or even pleasure.
Listen rather than create a listener.

Respect the other man's conviction
differ but do not dispute.
Convince but do not condemn
agree rather than argue.
Purchase peace instead of prejudice.

Spirit says no - flesh says go,
Spirit says love - flesh says lust,
Spirit says pray - flesh says pleasure,
Spirit says detach - flesh says attach.

Leave what you left, Learn to accept
Live true to yourself, Love one and all.

One feeling above feeling is love,
One religion above religion is love.

No person is bad, no person is false, no person is beyond repair, no person is week, no person is sick
If you can love.

Let your life be a living legend of love - for love's sake.

Fail no man who depends on you and
God shall never fail you.

Let me grow like a big banyan tree, to give shelter, shade, solace to all suffering souls.

O lord let there be no neglect in my duties to my body, mind spirit and fellow beings.

O lord
let me preserve my body
let me serve somebody
let me not hate anybody
let me love everybody.

The role of women is neither superior nor secondary, but supplementary to that of man.

தமிழ் மொழியின் பெருமைகள் - முனைவர் திரு.ஞானசம்பந்தம்


தமிழ் மொழியின் பெருமைகள்..

   முனைவர் திரு.ஞானசம்பந்தம் ஐயா அவர்கள் நியூ ஜெர்சியில் ஆற்றிய உரை. தமிழ் மொழியின் பெருமைகள், தமிழர் பண்பாடு, மறக்கடிக்கப்பட்ட தமிழர்களின் கண்டுபிடிப்புகள் பற்றி கேட்கும் பொழுது மிகவும் வியப்பாக இருக்கிறது. நானும் தமிழன் என்று நினைக்கும் பொழுது கர்வம் பிறக்கிறது ஆனால் அதே சமயம் அந்த தமிழ் மொழியை நாம் எவ்வளவு உதாசினப்படுத்துகிறோம் என்று நினைக்கும்பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது.


இராம நவமி நல்வாழ்த்துக்கள்.



அனைவருக்கும் இராம நவமி (02.04.2020) நல்வாழ்த்துக்கள். 



Song of Divine

The man dwelling is sense - objects develop attachment for them; from attachment springs  up desire, and from desire (unfulfilled) ensues anger. (2:62)

From anger arises infatuation; from infatuation confusion of memory; from confusion of memory, loss of reason; and from loss of reason one goes to complete ruin. (2:63)

He who has not controlled his mind and sense has no reasons; nor can such an undisciplined man think of god. The unthinking man can have no peace; and how can there be happiness for one lacking peace of mind? (2:66)

He who gives up all desires, and moves free from attachment, egoism and thirst from enjoyment attains peace. (2:71)