இளையராஜா.... ஒரு சிறிய புள்ளி விபரம்!
1983 முதல், 1992 வரையான பத்தாண்டுகளில் இளையராஜா இசையமைத்தது 455 படங்கள்.
அதிலும், 1984 மற்றும் 1992ல் தலா 54 படங்கள்.
சராசரி 270 பாடல்கள் ஒரு வருடத்தில்.
அதில் குறைந்தபட்சம் 250 பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்.
சராசரி 162 மணிநேர திரை இசைக்கோர்வை ஒரு வருடத்தில்..
நாடி நரம்பெல்லாம் இசை வழிந்து ஓடினால் மட்டுமே இந்த அசுர சாதனை சாத்தியம்....
ஆயிரம் திரைப்படங்கள், அதில் குறைந்தது ஐயாயிரம் பாடல்கள், அதில் மிகக் குறைந்தபட்சம் நாலாயிரம் ஹிட் பாடல்கள்.
எந்த படமாக இருந்தாலும் அவர் பின்னணி இசையமைக்க எடுத்து கொண்ட நாட்கள் மூன்று மட்டுமே..மூன்று நாட்களுக்கு மேல் அவரது ரிக்கார்டிங் தியேட்டரில் எந்த படமும் இருந்ததில்லை..
நூறாவது நாள் படத்தின் பிண்ணனி இசை அமைக்க அவர் எடுத்து கொண்ட நாள் வெறும் அரை நாள் மட்டுமே.
இளையராஜா பின்னணி இசையமைக்க அதிக நாட்கள் எடுத்துக்கொண்டது சிறைச்சாலை படத்திற்குத்தான். எத்தனை நாட்கள் தெரியுமா? வெறும் 24 நாட்கள்.
இசையமைப்பாளர்களில் அதிக பாடல்கள் பாடியவர் இசைஞானி..
இசையமைப்பாளர்களில் அதிக பாடல்கள் எழுதியவர் இசைஞானி..
இவை இளையராஜாவின் "சாதனைகள் அல்ல".
நாடோடித்தென்றல் உட்பட பல படங்களின் பாடல்களை எழுதியதும், வெட்டவெளியில் கொட்டிக்கிடக்கும் எழுத்துக்களும், தனி ஆல்பங்களும், பிட்சைப் பாத்திரம் ஏந்திவந்த பக்திப் பாடல்களும் சிம்பொனியும் - எதுவுமே இவரது "சாதனை அல்ல".
ஆயிரம் பாடல்கள் கேட்டாலும், அதில் இளையராஜா பாடல்களை இனம் காணக் கற்ற நம் காதுகளும்,
துக்கம், மகிழ்ச்சி, ஏமாற்றம் வெற்றி, தோல்வி என எல்லா நிலைகளிலும் இவர் இசைதேடும் நம் மனங்களும்,
எந்த நல்ல இசை கேட்டாலும் அது இளையராஜாவே என்று தீர்மானிக்கும் நம் புத்தியும் தான்
இந்த இசை ராஜனின் சாதனைகள்!
மூன்று தலைமுறைகள் போற்றுமளவு யாரவது இசையில் இவர்போல் நின்று விட்டு வரட்டும், அப்போது அவர்களை இவரோடு ஒப்பிட்டுக்கொள்ளுவோம்...
தீபாவளி வாணவேடிக்கைகள் அழகுதான், ஆனால் அவை சூரியனுக்கு ஒப்பாகாது!
வாண வேடிக்கைகளை ரசிப்போம், இந்த இசைச் சூரியனை, தொழுவோம்!!
No comments:
Post a Comment