Friday, October 29, 2021

எதெல்லாம் கெடும் - ஒளவையார்.


01) பார்க்காத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்,.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும் கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

இந்த 60 ஐயும் அறிந்து கொண்டால், நமது வாழ்க்கை கெடவே கெடாது..

Friday, October 22, 2021

அந்த ஒரு பத்து ரூபாய் நோட்டு

ஸ்வாமி சின்மயானந்தா அவர்கள் சொன்ன அருமையான கதை.....
ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக் கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்து ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்து விடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்று விடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)

கீழே விழுந்த வேகத்தில் 100 பத்து ரூபாய் நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்து ரூபாய் நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது. 

அந்த ஒற்றை பத்து ரூபாய் நோட்டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான். இந்த நோட்டைக் கண்டு, இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான். அந்த நோட்டை எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். சந்தோஷமாக வீடு திரும்பினான்.

மீதி 99 பத்து ரூபாய் நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. அந்த வழியாக ஒருவன் வந்தான். இந்த நோட்டுக் கட்டைப் பார்த்தான். எடுத்தான். 

பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள்.  மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான். 99 நோட்டுகள் தான். வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்க மாட்டார்களே.... அந்த ஒற்றை பத்து ரூபாய் நோட்டு இங்கே பக்கத்தில் எங்கேனும் தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்............... 

அந்த ஒற்றை பத்து ரூபாயைத் 
தேடினான்.... தேடினான்.... தேடினான்....  இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான் --------

--என்று சொல்லி கலகலவென்று சிரித்தார் பூஜ்ய குருதேவ் அவர்கள்.

பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டு விட்டு சந்தோஷமாக சென்றான்.

990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னும் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக் கொண்டிருக்கிறான்.

கருத்து : நம்மில் பலர் இப்படித்தான்
கிடைத்தவைகளை அனுபவிக்கத்
தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி அலைந்து உடலும் மனமும் சோர்ந்து அல்லலுறுகிறோம் ....

Sunday, October 3, 2021

கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு


என்னோட பதினைந்தாவது வயதில்.. நான் அமெரிக்காவில் குடியேற போகிறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க …

ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்..!

என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதாக சொன்னேன்... எல்லோரும் சிரிச்சாங்க …

நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்..!

அதன்பிறகு நான் சினிமாவில் பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன்.. எல்லாரும் சிரிச்சாங்க …

நான் ஹாலிவுட்ல ஹீரோவாக ஆனேன்..!!

சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது இவன் இனி அவ்வளவுதான் அப்படினு சொல்லி சிரிச்சாங்க …
நான் மீண்டும் மீண்டு வந்தேன்..!!

என்னோட 50 வயசுல நான் கலிபோர்னியா கவர்னர் ஆகப்போறதா சொன்னேன்..

 எல்லோரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க …

நான் கவர்னர் ஆனேன்.!!
இப்ப என்னைப் பார்த்து சிரிச்சவங்களை நான் திரும்பி பார்த்து சிரிக்கிறேன் …

 அவர்கள் எல்லாம் அதே இடத்துல தான் இருக்காங்க…

தன்னம்பிக்கையாலும்.. என்னோட கடின உழைப்பாலும், நான் நினைச்சதெல்லாம் சாதிக்க முடிந்தது...!!
எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த கூடாது...!

அது அவர்களின் வியாதி..!
நம்மை பற்றியும், தன்னபிக்கையின் ஆற்றலை பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது...!!

- கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு...!!!

Saturday, October 2, 2021

Space on Wheels 2021, Chennai


Space on Wheels Exhibition at Govt. Girls Hr.Sec School, Villivakkam on 27.09.21


Presenting a Memento to Head Mistress, GGHSS, Villivakkam, Chennai.



Felicitated by Sri. Subba Rao, CEO, Tiruvallur Education Dt in the presence of K.Venu, Ex State minister at Govt. Hr. Sec School, Kavarapettai, Chennai.


A warm welcome given by Staffs and students of Govt. Hr. Sec School, Pammathukulam, Red hills, Chennai for organising Space on Wheels in their campus on 28.09.21 





Thursday, July 29, 2021

இந்து கடவுள்களின் அற்புதங்கள் !..

பல இந்துக்கள் கூட அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !..

கீழ்க்கண்ட விடயங்கள் அனைத்தையும் நான் நேரில் சென்று பார்க்க ஆசைப்படுகிறேன்

1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.

2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.

3 தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.

4 தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.

5 கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.

6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.

7 சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை)

8 சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.

9 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.

10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.

11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.

12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

13 ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.

14 மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.

16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.

18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.

19 தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.

20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

21 தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.

22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.

23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.

24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை.

25 சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.

26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.

27 திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

28 ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

33. திருக்கழுக்குன்றத்தில் தெப்பக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெறுகிறது.

34 திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

35 சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.

36 நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.

வாழ்க வளமுடன்...
பல இந்துக்கள் கூட அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !.

Thursday, July 8, 2021

THE CROW AND THE GARUDA

Once a Crow, holding on to a piece of meat Was flying to find a place to sit & eat.

However, an Eagle started chasing it. The crow was anxious and was flying higher and, higher, yet the eagle was after the poor crow.

Just then "Garuda" saw the plight and pain in the eyes of the crow. Coming closer to the crow, he asked:

"What's wrong? You seem to be very "disturbed" and in "stress"?"

The crow cried "Look at this eagle!! It is after me to kill me".

Garuda being the bird of wisdom spoke "Oh my friend!! That eagle is not after you to kill you!! It is after that piece of meat that you are holding in your beak. Just drop it and see what will happen".

Drop Your Ego, Drop Your Ego.

The crow followed the advice of Garuda and dropped the piece of meat, and there you go, the eagle flew towards the falling meat.

Garuda smiled and said "The Pain is only till you hold on to it. Just Drop it".

The crow bowed and said "I dropped this piece of meat, now, I can fly even higher".

Do we carry the huge burden called "Ego," which creates a false identity about us, saying "I need love, I need to be invited, I am so and so.. etc..." Just Drop.

 Do you get irritated fast by "others' actions" it may be a friend, parents, children, a colleague, life partner... and get the fumes of "anger" Just Drop.

Do you compare yourself with others.. in beauty, wealth, life style, marks, talent and appraisals and feel disturbed with such comparisons and negative emotions Just Drop.

Just drop the burden.

THE JOURNEY IS SHORT

An elderly woman got on a bus and sat down. At the next stop, a strong, grumpy young lady climbed up and sat down beside the old woman hitting her with her numerous bags.

When she saw that the elderly woman remained silent, the young woman asked her why she had not complained when she hit her with her bags?

The elderly woman replied with a Smile: "There is no need to be rude or discuss something so insignificant, as my trip next to you is so short because I am going to get off at the next stop."

This answer deserves to be written in gold letters: "There is no need to discuss something so insignificant, because our journey together is too short."

Each of us must understand that our time in this world is so short. That darkening it with useless arguments, jealousy, not forgiving others, discontentment and bad attitudes are a ridiculous waste of time and energy.

Did someone break your heart? Stay calm.

The trip is too short.

Did someone betray, intimidate, cheat or humiliate I you? Relax. Don't stress. The trip is too short.

Did someone insult you without reason? Shake it off. Ignore it. The trip is too short.

Did a neighbour make a comment that you didn’t like? Take a deep breath. Ignore him/her. Forgive and forget it. The trip is too short.

Whatever problem someone has brought us, remember that our journey together is too short.

No one knows the length of our trip. Nobody knows when it will arrive at its stop. Our trip together is short.

Let us appreciate friends and family.

Let us be respectful, kind and forgiving.

In return, we will be filled with gratitude and joy. After all, our trip together is very short.

Share your smile with everyone.

Our trip is very short..

Tuesday, July 6, 2021

லாக் டவுன் உணர்த்திய உண்மைகள்

லாக் டவுனின் போது நாம் கற்றுக்கொண்ட உண்மை.

 1. அமெரிக்கா  முன்னணி நாடு அல்ல.
 
2. உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது.
 
3. ஐரோப்பியர்கள் படித்தவர்கள். ஆனால் அவர்கள் நாம் நினைக்கும் அளவுக்கு  அல்ல.
 
4. ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்லாமல் நம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும்.
 
5. இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களை விட மிக அதிகம்.
 
6. பாதிரியார், அர்ச்சகர்கள், குருக்கள், பூசாரி, மௌலவி, மதகுருமார்கள், சாமியார்களால் ஒரு நோயாளியையும் காப்பாற்ற முடியாது.

 7. அரசு சார்ந்த சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், நிர்வாகப் பணியாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் அல்ல.

 8. தங்கம் மற்றும் எரிபொருளுக்கு நுகர்வோர் இல்லாமல் உலகில் எந்த முக்கியத்துவமும் இல்லை.
 
9. இந்த உலகமும் தங்களுக்கு சொந்தமானது என்று விலங்குகளும் பறவைகளும் முதல்முறையாக உணர்ந்தன.

 10. நட்சத்திரங்கள் உண்மையில் மின்னும், இந்த நம்பிக்கை முதலில் பெருநகரங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டது.

11. உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் வேலையை வீட்டிலிருந்தும் செய்யலாம்.

12. நாமும் நம் குழந்தைகளும் 'பாஸ்ட் பூட் ' இல்லாமல் கூட வாழலாம்.
 
13. தூய்மையான வாழ்க்கை வாழ்வது கடினமான காரியம் அல்ல.
 
14. பெண்கள் மட்டுமே உணவு சமைக்க வேண்டும் என்று கிடையாது.

 15. சமூக ஊடகம் பொய்கள் மற்றும் முட்டாள்களின் ஒரு கூடாரம் மட்டுமே.

 16. நடிகர்கள் பொழுதுபோக்குக் கலைஞர்கள் மட்டுமே, வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள் அல்ல. 
 
 17 இந்தியப் பெண்கள் காரணமாக வீடு கோயிலாக மாறும்.
 
18. பணத்திற்கு மதிப்புக் குறைவே.
 
19. இந்தியப் பணக்காரர்கள் பலர் நற்குணம் நிறைந்தவர்கள்.

 20. இக்கட்டான நேரத்தை இந்தியரால் மட்டுமே கையாள முடியும்.
 
21. ஒற்றைக் குடும்பத்தை விடக் கூட்டுக் குடும்பம் சிறந்தது.

  இன்னும் பல...

Saturday, June 26, 2021

Accupressure Points

Accupressure Points in Hand

Left Hand


Right Hand


Tuesday, June 22, 2021

Surya Namaskar

Surya Namaskar - Sitting Position



Surya Namaskar - Sitting Position


Surya Namaskar Sloga

Tuesday, June 15, 2021

மதராஸ் பாஷையின் சுவை

தலபுராணம் - மெட்ராஸ் பாஷை.

மெட்ராஸ் பாஷை அல்லது மெட்ராஸ் மொழியை தமிழகமெங்கும் எடுத்துச் சென்றது தமிழ்த் திரைப்படங்கள்தான்.

குறிப்பாக, என்.எஸ்.கே, சந்திரபாபு, சோ, நாகேஷ், மனோரமா, சுருளிராஜன், லூஸ் மோகன், ஜனகராஜ் எனக் காமெடி நடிகர்களே இதைக் கச்சிதமாகச் செய்தனர்.

1968 ம் வருடம் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த பொம்மலாட்டம்’ படத்தில் மனோரமாவின் வா வாத்யாரே வூட்டாண்ட… நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்...’ பாடல் மெட்ராஸ் பாஷையை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

தவிர, பல படங்களில் நடிகர்கள் சந்திரபாபுவும், சோவும் இன்னாமே, எப்டிகீற… குந்துமே… என்பது போன்ற வசனங்களைப் பேசுவதைப் பார்த்திருப்போம்.

எப்படி நெல்லைக்கும், மதுரைக்கும், தஞ்சாவூருக்கும், கோவைக்கும் தனித்துவமான பேச்சு மொழி இருக்கிறதோ, அதுபோலவே மெட்ராஸுக்கும் தனித்த பேச்சு மொழி இருக்கிறது. 

போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ் காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், முஸ்லிம்கள், பணி நிமித்தமாக வந்த மற்ற மொழியினர் எனப் பலதரப்பட்டவர்கள் இங்கே வந்ததும், வாழ்ந்ததுமே இதற்குக் காரணம்.

குறிப்பாக, தெலுங்கர்களும், முஸ்லிம்களும் நிறைந்திருந்ததால் தெலுங்கு மற்றும் உருதுச் சொற்கள் அதிகளவில் மெட்ராஸ் பாஷையில் இருப்பதை அறிய முடியும். 

அடுத்ததாக, ஆங்கிலம் அதிகமாகக் கலந்திருக்கும். ‘‘பிரிட்டிஷ்காரர்களின் முக்கிய வியாபார மையமாகத் திகழ்ந்த சென்னையில் ஆங்கிலம்,தெலுங்கு, கன்னடம், உருது, சிந்தி, குஜராத்தி, ராஜஸ்தானி எனப் பல்வேறு மொழி பேசுபவர்களின் குடியேற்றங்களும், அவற்றின் விளைவாக ஏற்பட்ட பண்பாட்டு கலப்புகளும் இம்மக்கள் பேசிய தமிழ் மொழியின் மீது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தின...’’

 என ‘சென்னையும், அதன் தமிழும்’ என்ற நூலின் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் இந்திரன்

மெட்ராஸ் பாஷையை ஒரு தரம்தாழ்ந்த மொழியாகக் கருதும் போக்கு தமிழர்கள் அனைவரிடமும் உள்ளது. நாவல்களிலும், சிறுகதைகளிலும்* உயர்தட்டு மக்கள் சென்னைத் தமிழில் உரையாடுபவர்களாகச் சித்தரிக்கப்படுவதில்லை. தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டாலும்கூட நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் பேசும் மொழியாகவே சென்னைத் தமிழ் பயன்படுவதைப் பார்க்கலாம்.

மெட்ராஸ் பாஷை என்றாலே பொதுவாக அனைவரின் நினைவிற்கும் சேரித் தமிழ்தான் வருகிறது. 

மெட்ராஸ் பாஷை கொச்சையானது என்றே பலரும் நினைக்கிறோம். 

ஆனால், அதனுள் செந்தமிழும் நிறையவே நிறைந்திருக்கிறது.

பக்கமாக, அருகில் எனப் பொருள்படும் அண்டை என்ற வார்த்தையை, ‘அந்தாண்ட, இந்தாண்ட, வூட்டாண்ட…’ என எளிதாகச் சொல்வார்கள் சென்னைவாசிகள்.  - அதாவது, அதன் அருகில் இருக்கிறது என்பதே இதன் அர்த்தம். 

சிலர், ‘மெய்யாலுமா?’ எனக் கேட்பார்கள்.  - உண்மையாகவா? எனப் பொருள்படும் மெய் எனும் தூய செந்தமிழைப் பயன்படுத்துகின்றனர். 

இதேபோல, சிறப்பு எனும் பொருள் தரும் செம்மை’ என்கிற வார்த்தையை, செம மச்சி… செம டா’ என சுருக்கிச் சொல்கின்றனர்.  

சோறு துன்னலயா?’ எனச் சிலர் கேட்பதைப் பார்த்திருப்போம். 

சோறு என்னும் தமிழ் வார்த்தையை இன்று பலரும் அநாகரிகமான வார்த்தை எனத் தவிர்த்து வருகிறோம். 

ரைஸ் என்கிற ஆங்கில வார்த்தையோ அல்லது சாதம் எனும் வடமொழிச் சொல்லோதான் நாக்கில் சட்டென வருகிறது.

ஆனால், சென்னைவாசிகள் இன்றும் சோறு எனும் பதத்தைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.

 துன்னு என்கிற வார்த்தை தின்னுதல் என்பதன் கொச்சை வடிவமாகும். 

தேடிச் சோறுநிதந் தின்று… என்ற பாரதி யின் வரிகளில் இருந்து இதை அறியலாம்.

இதேபோல, வலி, அப்பால் போன்ற வார்த்தைகள் பற்றி ‘சென்னைத் தமிழின் பன்முகத் தன்மைகள்’ என்ற கட்டுரையில் எழுத்தாளர் அரவிந்தன் தரும் பதில்கள் சுவையானவை. 

‘‘வலி என்ற வார்த்தையை வேதனை என்றே நாம் பொருள் கொள்கிறோம். இலக்கியங்களில் வலி என்ற வார்த்தை, ‘அதிக விசை கொடு’, ‘இழு’, ‘தள்ளு’ போன்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதை வைத்தே வலிமை, வலிது போன்ற வார்த்தைகள் வழக்கில் வந்தன. 
சென்னைத் தமிழில் மட்டுமே அந்த வார்த்தை இன்றும் அதே பொருளில் பேசப்பட்டு வருகிறது. 
உதாரணத்துக்கு, ‘வலிச்சிக்கினு வா’, ‘நல்லா வலி’ போன்றவை. 
ஆனால், வேதனை என்ற சொல் செந்தமிழுக்கு நெருக்கமாக ‘நோவு’ என்றே புழங்கி வருகிறது. 
வலிக்குது என்று பிற ஊர்களில் சொல்வதை சென்னையில் நோவுது என்றே சொல்வார்கள். 

Distance என்பதற்கான தமிழ்ச் சொல்லாக இன்றும் பல்வேறு ஊர்களில் தூரம் என்றே குறிப்பிடுகின்றனர். ஆனால் சென்னையில் அப்பால், தொலைவு என்கிற தமிழ்ச் சொல்லே பயன்படுத்துகின்றனர். 

அப்பால போய் நில்லுஎம்மாந் தொலைவு கீது’ போன்ற வார்த்தைகளே இதற்கு உதாரணங்கள்...’’ 

  அடுத்ததாக அதிகம் உச்சரிக்கப்படுவது அப்பீட்டு எனும் சொல். 

ஆளைவிடு, கிளம்பறேன் எனும் பொருளில் சென்னை வாசிகள் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
 
இது ஆங்கிலச் சொல்லான abate இல் இருந்து வந்த வார்த்தை. 
அதாவது, விரைவாக வெளியேறு எனப் பொருள் படுகிறது. அதனாேலயே நான் அப்பீட்டு என்கின்றனர்.   

எழுத்தாளர் அரவிந்தன் தனது கட்டுரையில், ‘‘அப்பீட் என்ற சொல் பம்பர விளையாட்டில் பயன்படுத்தப் படுவது. 

தரையில் சுற்றும் பம்பரத்தின் ஆணியைச் சாட்டையால் அணைத்து, சாட்டையைச் சுண்டி பம்பரத்தைத் தலைக்கு மேலே எழுப்பிப் பிடிக்கும் செயலுக்கு அப்பீட் என்று பெயர். 

அது அப் ெஹட’ என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது என்ற தகவல் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ நாவலில் காணக் கிடைக்கிறது.

அப்பீட்டுக்கு எதுகை நயத்துடன் ரிப்பீட்டு என்னும் சொல்லும் அண்மைக் காலத்தில் புழங்கி வருகிறது.

இப்போ அப்பீட் ஆயிக்கறேன், அப்புறம் ரிப்பீட் ஆயிக்கறேன் என்று சொல்வதை யோசித்துப் பாருங்கள்.

அசால்ட் எனும் சொல் Assault என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம். அதாவது, தாக்குதல் எனப் பொருள்படும்.

அசால்ட் பண்ட்டாம்பா என்பது மோசமான தாக்குதலைக் குறிக்கச் சொல்கின்றனர். 
ஆனால், பல இடங்களில் இந்த அசால்ட் ‘எளிதாக’ எனும் பொருளில் பேசப்படுகிறது. உதாரணத்துக்கு, அசால்ட்டா முடிஞ்சிச்சு என்பார்கள்.  

மெட்ராஸில் சர்க்கரையை அஸ்கா என்றே குறிப்பிடுவர். இப்போதும் கூட சில இடங்களில் அஸ்கா இருக்கா என்று கேட்பதைப் பார்க்கலாம்.

இந்தப் பெயர் பின்னி அண்ட் கோ நிறுவனத்தால் வந்துள்ளது.இதுபற்றி, ‘அன்றைய சென்னைப் பிரமுகர்கள்-II’ நூலில் எழுத்தாளர் ராண்டார் கை குறிப்பிடுகிறார்.

‘‘1840ம் ஆண்டு வாக்கில், பின்னி அண்ட் கம்பெனி விவசாயம் சம்பந்தமான வியாபாரத்தில் இறங்கியது. 

ஒரிசா மாநிலத்தில் கூம்சூர் என்ற ஜமீன் சமஸ்தானத்திற்கு சொந்தமான எஸ்டேட் இருந்தது. 
அதன் பெயர் அஸ்கா.

 அங்கே ஒரு சர்க்கரை ஆலையை பின்னி நிறுவனம் நிறுவியது. 
அங்கிருந்து வந்த வெள்ளை வெளேர் எனச் சுத்தம் செய்யப்பட்ட சர்க்கரைக்கு ‘அஸ்கா’ என்று பெயர்...’’ என்கிறார் அவர்.

இதுபோல, பேஜார் என்ற வார்த்தையை கேட்டிருப்போம். 
அதாவது தொடர்ந்து எரிச்சலூட்டுபவனை, உன்னோட பேஜரா போச்சு என்பார்கள். 

இது ஆங்கிலச் சொல்லான badger என்பதிலிருந்து வந்துள்ளது. 

அதாவது, அடிக்கடி எரிச்சலூட்டுபவன் எனப் பொருள்படும். 

சரியான பஜாரி எனச் சில பெண்களைச் சொல்வார்கள். 

இது உருது மொழியில் பஜார் என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகச் சொல்கின்றனர். 

பஜார் என்றால் தமிழில் சந்தை. அங்குள்ள கடையில் நின்று சத்தம் போடுபவள் பஜாரி ஆகிவிட்டாள் என்கின்றனர்.

இதேபோல பேக்கு என்ற வார்த்தையும் உருதிலிருந்தே மெட்ராஸ் பாஷையில் கலந்துள்ளது.

பேவ்கூஃப்  (bevkoof) என்ற வார்த்தையின் திரிபே பேக்கு! அதாவது, முட்டாள் என்பது இதன் பொருள்.

 போடா பேமானி என்பது மெட்ராஸுக்கே உரிய பழைய வழக்கு.
 இதுவும் உருதிலிருந்தே வந்துள்ளது. 

அதாவது, நேர்மையற்றவன், மானம் இல்லாதவன் என்ற பொருளில் வருகின்றது.

விசில் அடி என்பதை சென்னைவாசிகள் பிகிலு அடி என்பார்கள். விசிலும் ஆங்கிலம்தான். 

இருந்தும், இங்கே பிகிலு என்ற சொல் bugle என்பதிலிருந்து வந்ததாகச் சொல்கிறார்கள். 

இராணுவத்தில் பயன்படுத்தும் ஒரு ஊதுகுழல் bugle. இதுவே பிகிலு என்று மருவி உள்ளது.  

டப்பு, துட்டு, கப்பு, கலீஜு, கஸ்மாலம், காண்டு, டோமர், கேப்மாரி, பாடு, உனக்கொஸரம், டார் ஆயிட்டான், மஜா, நாஸ்தா, ஜல்பு… என இன்னும் எத்தனையோ வார்த்தைகள் ஒலிக்கின்றன.

Thursday, June 10, 2021

10 short stories with deep meanings.

1) She was very excited 
     today, as the 
     school was re-opening
     after a long summer 
     break. Now, once 
     again, she could start 
     selling stationery at 
     the traffic signal to 
     feed her family.

2) She, a renowned artist 
     and a strict mother, 
     often scolded her 6-
     year-old son for he 
     could never draw a 
     line straight. As he 
     breathed slowly into    
     the ventilator, she 
     begged him to make 
     one more crooked line 
     on the ECG.

3) "Everyone goes with 
      the flow… but the one  
     who goes against it 
     becomes someone 
     remarkable.” Before I 
     could explain this to 
     the traffic police, the 
     man issued me a fine.

4) Their love was 
     different. She was 
     happy every time he 
     kicked her in the 
     stomach. Every time 
     he kicked she loved 
     him more. She waited 
     for the time she would 
     hold her baby for the 
     first time.

5) All my toys are yours..!
     Read her brother’s    
     death note.

6) They took his father,
     and only returned a 
     flag.

7) At 25, I became a 
     mother of one; at 27 I 
     became a mother of 
     two; and today, at 55, I 
     have become a 
     mother of three!  My 
     son got married today,
     and brought home his 
     wife!

8) “Born to rich parents, 
      this boy is so lucky,” 
      exclaimed the 
      neighbors! 
      Somewhere in 
      heaven, three unborn 
      sisters cried.

9) “You ruined my career,
      I was supposed to be 
      an Executive Director,”
      she thought to 
      herself.  The little 
      angel held her finger 
      tightly and she forgot 
      everything; A mother 
      was born.

10) Once a 5-year-old boy
       was standing 
       barefoot in the 
       shallow water of the 
       ocean. He was 
       repeating the same 
       sentence to the 
       waves – “Even if you 
       touch my feet a 
       thousand times, I 
       won’t forgive you for 
       taking my parents    
       away.

Saturday, June 5, 2021

தமிழக மீடியாக்கள் - தொடர்பு எண்கள்.

மீடியாக்கள் போன் நம்பர் உங்கள் தொலைபேசியில் வைத்துக் கொள்ளுங்கள். எதற்காவுது தேவைப்படும்.

 தந்தி டிவி
📞 044 42907777
📞 044 42907789
📞 044 42907714
📞 044 42907720
📲 88704 76091

நியூஸ் 7
📞 044 40777777
📞 044 40777780
📞 044 40777799

புதிய தலைமுறை
📞 044 45969500
📲 90030 75000

சன் நியூஸ்
📞 044 44676767
📞 044 40676161

ஜெயா டிவி
📞 044 4396 0000

கலைஞர் டிவி
📞 044 24307777
📞 044 24307878
📞 044 24307800
📞 044 24335053

சத்யம் டிவி
📞 044 25909950
📞 044 25909951

கேப்டன் டிவி
📞 044 30134567

தினதந்தி
📞 044 253030000

தினமலர்
📞 044 28540001

தினகரன்
📞 044 42209191

தினமணி
📞 044 23457601

Wednesday, May 19, 2021

Open Access Engineering Journals

For researchers, academicians, students and knowledge seekers, here are 20 open access journals which may be of your interest. 

1.  Taylor & Francis 

2.  ELSEVIER 

3.  WILEY 

4.  SPRINGER 

5.  SCIENCE OPEN 

6.  SCIENCE DIRECT 

7.  JSTOR

8.  (OAL) OPEN ACCESS LIBRARY 

9.  OXFORD ACADEMIC 

10.  LUND UNIVERSITY LIBRARIES 

11.  KARGER

12.  THIEME OPEN 

13.  OMNICS OPEN ACCESS

14.  BMC

15.  MDPI 

16.  COGENT OA 

17.  OPEN ACCESS

18.  ERUDIT 

19.  HIGHWIRE  

20.  DIRECTORY OF OPEN SCIENCE ARTICLES

Hope these journals may be of your help to carry out your research work.

Monday, April 5, 2021

அரசியல்

IBM 1976 Advt


1976 : IBM Advertisement (@IBM) Highlighting How Ancient India's Invention of Numbers and Zero Is Helping In Modern Mathematical Computation!

Friday, January 29, 2021

Ambika N, DCP


அம்பிகா IPS Deputy Commissioner Of Police Maharashtra.
Native - திண்டுக்கல் , தமிழ்நாடு 

16 வயதில் திருமணம் 19 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் , கணவர் போலீஸ் கான்ஸ்டபிள் 

தனது கணவருடன் குடியரசு தின விழாவை காண ஏற்பட்டபோது அங்கு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கிடைக்கும் மரியாதை யை பார்தது பிரம்மித்து போன அம்பிகா தனது கணவரிடம் அதை பற்றி விசாரித்து தானும் அது போன்று உயர் அதிகாரி ஆக வேண்டும் என‌ கூற , கணவரோ நீ பள்ளி படிப்பே முடிக்கவில்லை IPS அதிகாரி ஆக வேண்டும் என்றால் உயர் படிப்புகள் படிக்க வேண்டும் என‌ கூறுகிறார்.. 

தனது 20 வது வயதில் தான் பத்தாம் வகுப்பையே படிக்க தொடங்குகிறார் அம்பிகா , படிப்படியாக 26 வயதில் முதுகலை பட்டத்தை நிறைவு செய்து 

IPS தேர்வில் கலந்து கொண்டு 3 முறை தொடர் தோல்வியை சந்தித்து 4 வது முறையாக வெற்றிபெற்று தற்போது மும்பையில் ராஜ மரியாதையுடன் கமிஷனிராக பணி புரிந்து வருகிறார் !! 

இந்த பெண்மணியும் The Great Indian Kitchen என்ற சமூக வட்டத்துக்குள் இருந்து தான் கணவரின் துணையுடன் முன்னேறி வாழ்க்கையில் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார் !!

https://www.iforher.com/motivation/women-achievers/victim-of-child-marriage-to-ips-officer-this-moms-inspiring-journey-shows-moms-can-dream-too/

Thursday, January 7, 2021

Winston Churchill and Taxi Driver.

Winston Churchill said: "I took the taxi one day and went to the BBC office for an interview ... and when I arrived I asked the driver to wait for me for forty minutes until I got back!  But the driver apologized and said 'I can't because I have to go home to listen to Winston Churchill's speech'.

Churchill says he was amazed and delighted with this man's desire to listen to his conversation!  So he took ten pounds and gave to the taxi driver without telling the driver who he was. 

When the driver collected the money he said: "I'll wait hours until you come back, sir! And let Churchill go to hell!

Principles have been modified against money ...  
Nations were sold for money......
Honor was sold for money......
Brothers were sold for money.....
Families were split for the money.....
Friends have been separated for the money...
People were killed for the money...!  

Who gave so much power to money and made people their slaves? Let's be careful about money..