* 1 *
மலையேறும் சுமை தாங்கிகளுக்கு,
முட்டுக்கட்டைகள் தான் முன்னேற்றப் பாதையைத் தருகின்றன.
சிலையாகும் கல்லும்,
உளியின் காயங்களால் தான் உருவாகின்றன...
விலை மதிப்பில்லாத
மானிடப் பிறப்பிலே,
தடைக்கற்களைக் கண்டு தயங்காதே...
தடைக்கல்லை உடைத்து,
உன் பயணத்திற்குப் பாதையாக்கினால்....வெற்றி உறுதி
* 2 *
விடியாத இரவென்று எதுவுமில்லை. அதைப் போல முடியாத செயலென்று எதுவும் கிடையாது..."
"... விடாமுயற்சிக்கு ஈடு, இந்த உலகில் எதுவுமில்லை. விடாமுயற்சியை தாரக மந்திரமாகக் கொண்டவர்களை தோல்வி நெருங்காது..."
உங்களை தள்ளி விடுவதில் மற்றவர்கள் வலிமையானவர்கள் என நிரூபித்தால்….
கீழே விழுந்தாலும் எழுந்து நிற்பதில் நீங்கள் அவர்களை விட வலிமையானவர்கள் என நிரூபியுங்கள்.
* 3 *
நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ள பலரை நாம் கடந்து செல்ல வேண்டும்..
* 4 *
எந்தப் பறவை தனியாகப் பறக்கிறதோ அதற்குத்தான் வலிமை அதிகம்.
* 4 *
தூரம் என்பது முக்கியமல்ல. எடுத்து வைக்கின்ற முதல் அடி தான் முக்கியம்.
* 5 *
வரலாற்றில் எல்லோருக்கும் பக்கங்கள் உண்டு. அதை நிரப்புவதும் காலியாக வைத்திருப்பதும் அவரவர் கையில் உள்ளது.
* 6 *
விடியாத பொழுதும் இல்லை…
முடியாத செயலும் இல்லை…
நம்பிக்கை உடையவனுக்கு
தோல்வி ஒரு தொடக்கம்…
நம்பிக்கை இல்லாதவனுக்கு
தோல்வி ஒரு முடக்கம்…
துணிந்து செயல்படுங்கள்..
வெற்றி கிடைக்கும் வரை…
* 7 *
நேற்றைய நாட்கள் நம்மிடம் இல்லை.... நாளைய நாட்களும் நம் கையில் இல்லை... நம்மிடம் உறுதியாக இருப்பது இன்றைய நாள் மட்டுமே. அதை வீணடிக்க கூடாது.
* 8 *
இந்த உலகில் எந்த மேதையும் தோல்வி காணாமல் வெற்றியை கண்டதில்லை...
எந்த சாதனையாளரும் சோதனை இன்றி சாதனை புரியவில்லை...
* 9 *
விரிக்காத வரை சிறகுகள் பாரம்தான் விரித்துப் பார்த்தால் வானம் கூட தொடுதூரம்தான்.
* 10 *
கற்றது ஒரு மடங்கு என்றால் அதை நடைமுறை வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக ஆக்க பொது அறிவு பத்துமடங்கு தேவை.
* 11 *
மனிதன் சிரிக்கக் கூடிய நிலையில் இருக்கும் வரை, அவன் ஏழையாக மாட்டான்.
* 12 *
மனிதன் எதை தொடர்ந்து நினைக்கிறானோ, அதை அவன் அடைந்தே தீருவான்.
* 13 *
சில நேரங்களில் அடுத்தவர்களை எதிர்பார்ப்பதை விட
நம் வழியில் நாம் தனியாக செல்வதே சிறந்தது..!
* 14 *
நீந்தினால் தான் நீச்சல் வரும்,
வரைந்தால் தான் ஓவியம் வரும்,
பேசினால் தான் மொழி வரும்,
எழுதினால் தான் எழுத்து வரும்,
முயற்சித்தால் தான் வெற்றி வரும்.
தயங்கித் தயங்கி நின்றால் எல்லாம் தூரமே.
* 15 *
உங்கள் குறைகளை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்...
ஒருநாளும் நியாயப்படுத்திக் கொள்ளப் பழகாதீர்கள்.
* 16 *
தோற்று விடுவோம், இழந்து விடுவோம் என்று இருந்து விடாதீர்கள்.
தோற்றாலும் இழந்தாலும்
அது பாடம்.
முயற்சியே செய்யாமல் இருந்தால், அது பாவம்.
* 17 *
மனதில் உறுதியில்லாவிட்டால், நீங்கள் நல்லவராக இருப்பதும் கூட கடினம் தான்.
* 18 *
உழைப்பு உடலை பலப்படுத்தும். கஷ்டங்கள் உள்ளத்தை பலப்படுத்தும்.
* 19 *
ஆசைகளை அடக்க வேண்டியதில்லை, அதை சீரமைப்பது தான் முக்கியம்.
* 20 *
கற்றுக் கொள்ளும் மனம் இருந்தால், நீங்கள் முட்டாளிடம் இருந்தும் கூட பாடம் கற்றுக் கோள்ள முடியும்.
அந்த மனம் இல்லையென்றால்,
உங்களால் புத்தனிடமிருந்து கூட எதையும் கற்றுக் கொள்ள முடியாது.
* 21 *
சோதனையை கொடுத்த கடவுளுக்கு வெற்றியை கொடுக்க ஒரே ஒரு நொடி போதுமானது.
தெளிவாக இருங்கள்…
முயற்சியை கை விடாதீர்கள்..
உங்களுடைய இலக்கில் கவனமாக இருங்கள்.
வெற்றி நிச்சயம்.
* 22 *
உண்மையான உள்ளத்தைக் காயப் படுத்தியவர் எவராயினும், பொய்யான உறவிடம் தம் அழிவினைச் சந்திப்பார்கள்.
* 23 *
தங்களுடைய தவறுகளை உணராதவர்களை திருத்தி விடலாம்.
ஆனால் அதை நியாயப் படுத்துபவர்களை ஒருபோதும் திருத்த முடியாது.
* 24 *
உங்கள் அடையாளத்தை, அச்சுறுத்தும் கோபத்திலோ, அளவில்லா அடக்கு முறையிலோ, கருணை இல்லா அதிரடியிலோ வைக்காதீர். அன்பினால் பூத்திடும் புன்னகையில் வைத்திடுங்கள்.
* 25 *
ஆசையை சுமக்காமல் அன்பை சுமந்து செல்லுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் அன்பு
மழை பொழிந்து கொண்டு இருக்கும்.
* 26 *
மனிதன் சிறந்து வாழ உழைப்பு வேண்டும்.
மனிதம் நிலைத்து நிற்க அர்ப்பணிப்பு வேண்டும்.
தீய மனிதர்கள், அச்சத்தால் அடங்கி நடக்கின்றனர்.
நல்ல மனிதர்கள், அன்பால் அடங்கி இருக்கின்றனர்.
* 27 *
யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
இறுதியில் நம்மை குற்றவாளி ஆக்கி விட்டு அவர்கள் அனைவரும் ஒன்றாகி விடுவார்கள்.
* 28 *
நாம் செய்யும் தொழில் - சம்பாத்தியத்திற்க்காக மட்டுமே அல்ல, உண்மையில் அதை தலை சிறந்த சேவையாகவும் மாற்றுவதுதான் மனிதனின் தலையாய் கடமையாகும்.!
-கௌதம புத்தர்.
* 29 *
வேதனையை சகித்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வமுடையவன் அறிவாளியாகிறான்.
வணங்க ஆரம்பிக்கும் போதே,மனிதன் வளர ஆரம்பிக்கிறான்.
*30*
உள்ளம் மாசின்றி இருக்கும்போது, காணும் அனைத்தும் களங்கமின்றி காட்சி அளிக்கும்.
அதுபோல இறைவனை நம்பி பயணிப்பவர்களுக்கு பயமும் பாரமும் பனிபோல் விலகும்.
இழந்ததை நினைத்து வருந்தாதீர்கள். எதை நீங்கள் இழந்தாலும் அது, இன்னொரு வடிவில் உங்களை வந்துசேரும்.
உங்கள் கவலையை பெற்றுக்கொள்ளும் இடத்தில் இறைவன் இருக்கிறார் அவரிடம் கொடுத்து விடுங்கள்.
இறைவன் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. அவர் மீது நம்பிக்கை வைத்தவர்களை அக்கறையோடு காத்து வருகிறார். என்றும் அவர் பாதம் பணிந்திருங்கள்.
*31*
உங்களை விடச் சிறந்த மனிதர்கள்......!!
உங்களை ஒரு போதும் குறைத்துப் பேசுவதில்லை......!
*32*
அழகுக்கும் நிறத்திற்கும் சம்பந்தமில்லை.
எண்ணங்கள் தூய்மையானால் நீங்கள் ஒவ்வொருவரும் பேரழகே.!
*33*
சிரித்துக் கொண்டே கத்தியால் குத்தும் மனிதர்களைத் நான் இன்றைய உலகம் விரும்புகிறது, நம்புகிறது.
கடுகடுவென உண்மையை பேசும் நேர்மையான மனிதர்களை அடியோடு வெறுக்கிறது.
*34*
சர்க்கரை போல இருக்காதீர்கள்;
உப்பைப் போல இருங்கள்.
அனைவருமே உங்களை அளவோடு பயன் படுத்திக் கொள்வார்கள்.
*35*
யாரையும் உங்களின் தேவைக்காக பயன் படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடாதீர்கள்.
ஏனெனில் உங்களின் வாழ்க்கை இன்னும் முடிந்து போகவில்லை.
சிந்தித்து செயல் படுங்கள்.
இதுவும் கடந்து போகும்.
*36*
ஆள் பார்த்து கூலி கொடுப்பவன் மனிதன்..
ஆடிய ஆட்டத்திற்கு எல்லாம் கூலி கொடுப்பவன் இறைவன்...
*37*
எதிரில் இருப்பவர்களைப் பார்த்து புன்னகை செய்வதற்காக மட்டுமே உங்கள் உதடுகளை பயன் படுத்துங்கள்.
அவர்களை காயப் படுத்துவதற்காக உதடுகளை பயன் படுத்தாதீர்கள்.
*38*
சோதனையில் உள்ள கொம்பினை நீக்கினால் சாதனை, என்ற வார்த்தை கிடைக்கும். அதைப்போல, வாழ்வில் நான், என்னும் கொம்புடைய எண்ணத்தை மனதில் இருந்து நீக்கினால் சாதனை படைக்கலாம்..."
"... ஒருவன், சந்தோஷம் வரும் போது சிந்தனை செய்வதில்லை. அது போகும் போது தான் சிந்தனை செய்கிறான்..."
"... பதற்றமில்லாமல் இருப்பது தான் வெற்றிக்கு வழி..."
*39*
சிறப்புக்குரிய கொள்கைகளை போற்றிட தவறாதீர்கள்..."
"... சிந்தனைக்குரிய எண்ணங்களை கொடுத்திட தவறாதீர்கள்..."
"... வெற்றிக்குரிய வழிமுறைகளை கற்றிட தவறாதீர்கள்..."
"... புகழுக்குரிய காரணங்களை தக்க வைத்திட தவறாதீர்கள்..."
*40*
வாய்ப்புகள் விலகிப் போவதை எண்ணி கலங்கி நிற்காதீர்கள்.
எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து விடாமுயற்சி செய்யுங்கள்.
நீங்கள் இழந்ததை விட பெரிய வெற்றி உங்களுக்காக காத்திருக்கும்.
*41*
திறமையற்றவர் என்று யாரும் இல்லை. ஆனாலும், சிலர் தோல்வி அடைவதற்கு காரணம், அந்த திறமையை சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதே..."
"... தோல்வி என்பது வீழ்ச்சியல்ல, படிப்பினை..."
"... நம் செயல்களில் நேர்த்தி இருக்குமானால், வெற்றி நம்மை மட்டும் தான் தேர்ந்தெடுக்கும்..."
*43*
இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று வருந்துவதை விட,
இவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று விலகி விடுவதே நிம்மதி.
*44*
நம்மை புரியாத இடத்தில் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் சொல்லி புரிய வைப்பதை விட
அவர்களின் புரிதல் என்னவோ அவர்கள் விருப்பப் படியே நடக்கட்டும் என மௌனமாய் நகர்ந்து செல்வதே சரி.
தவறான புரிதல் இருக்கும் இடத்தில் சொல்லப்படும் எந்த ஒரு விளக்கமும் அர்த்தமற்றதே.
*45*
திறந்த மனதோடு மட்டுமே நம் வாழ்க்கை முழுவதும் நாம் பயணப்பட வேண்டும்.
அவ்வாறு பயணப்படத் தயங்கினால், திரும்பிய திசைகளில் எல்லாம் மூடிய கதவுகளை மட்டுமே நாம் பார்த்து திகைக்க வேண்டிய பரிதாப நிலைமை ஏற்பட்டுவிடும்..."
*46*
தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும் தான் சரி என்று வாதாடுபவர்கள் மத்தியில்,
அமைதியை மட்டும் உங்கள் ஆயுதமாக வைத்துக் கொள்ளுங்கள்.
அவர்களுக்கு புரியவைக்க காலம் ஒன்று உள்ளது.
சிந்தித்து செயல்படுங்கள்.
இதுவும் கடந்து போகும் அல்லது இதுவும் பழகி போகும்.
*47*
மனிதர்கள் நல்லவர்களை நம்புவதில்லை.
நல்லவர்கள் போல் நடிப்பவர்களைத் தான் நம்புகிறார்கள்.
கர்ணன் துரியோதனனை நம்பியதைப் போல.
பொய்களை மட்டும் காரணம் கேட்காமல் நம்பிவிடுகிறார்கள், உண்மைகளை நிரூபிப்பதற்குத்தான் ஆதாரம் கேட்கிறார்கள்.
வெட்டியானுக்கு வேண்டியது எல்லாம் சடலம் மட்டும் தான் மனிதன் அல்ல.
நீதிபதிக்கு வேண்டியது எல்லாம் சாட்சி மட்டும்தான் உண்மை அல்ல.
ஏமாளி என்னும் பட்டம் இப்போதெல்லாம் விட்டுக் கொடுப்பவர்களுக்கே பரிசளிக்கப்படுகிறது.
*48*
கடவுள்தன்மை என்பது எது?
நாம் சரியானவற்றை செய்யும்போது ஏற்படும் மன நிறைவு, தவறானவற்றைச் செய்யும் போது ஏற்படும் குற்ற உணர்வு..
இவைதான்
கடவுள்தன்மை..."
"...எதை செய்தாலும் முழு மனதுடன் செய்வோம்.
பலன் கிடைக்காவிட்டாலும் மன நிறைவு கிடைக்கும்..."
"...நமக்கென்ன குறை. என்ற பெருமிதம் தான் நமக்கான மனநிறைவு..."
*49*
மனித வாழ்வே ஒரு விசித்திரமானது.
இங்கு வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்களை விட பொறுத்துக் கொண்டு வாழ்பவர்கள் தான் அதிகம்....
நமக்கு நாம் தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுவது தான் வாழ்க்கை.
*அன்புடன் இனிய காலை வணக்கம்.*
No comments:
Post a Comment