Saturday, May 30, 2020

பிரபுவின் சிறுகதை - 1.

அதிகாலை மணி இரண்டு. தூக்கம் வராமல், புரண்டு புரண்டு படுத்தவாறு இருந்தான், சொக்கலிங்கம். 

முதல் நாள் மாலையில், தன் தம்பி ராமலிங்கத்துடன் தொலைபேசியில் பேசியதிலிருந்து தவிப்பாகவே இருந்தது அவனுக்கு. 

வீட்டு கட்ட உதவும் சாமான்கள் மற்றும் வண்ணங்கள் விற்கும் கடை நடத்துபவன் சொக்கலிங்கம். 'தொழில் பழகுகிறேன்'- என்று சென்னைக்குச் சென்ற தம்பி ராமலிங்கம் ஓரளவு அனுபவம் வந்தவுடன், ஒரு ஜவுளிக் கடை தொடங்கி வெற்றியாக நடத்தி அந்த நகரத்திலேயே தங்கி விட்டவன். சுமார் இரண்டு வருடங்கள் முன்பு, தான் வீடு கட்டப் போவதாகவும், பண உதவி தேவைப்படுவதாகவும்  கேட்க, சொக்கலிங்கமும் தர ஒத்துக் கொண்டான். 

அவன் மனைவி கற்பகம், “ஏங்க, நாம கூட வீடு கட்டணும்னு ப்ளான் பண்ணியிருக்கோம்ல. இப்போ உங்க தம்பிக்கு எப்படிக் குடுக்கிறதாம்..?”

“நீயே யோசிச்சுப் பார், நாம பணம் ஓரளவு ரெடி பண்ணி, கூடக் கொஞ்சம் லோன் வாங்கிக் கட்டணும்னா கூட இன்னும் ரெண்டு வருஷம் ஆகும். அதுவரைக்கும் சேமிக்கிற பணத்த அவனுக்குக் கொடுப்போம், அவனாவது வீடு கட்டட்டும். பின்னாடி நமக்கு வேண்டிய போது, திருப்பித் தரப் போறான்.”

“பாங்க்ல போட்டா கொஞ்சம் வட்டியாவது வரும்ல...”

“பரவாயில்ல.., அவனுக்கு நான் உதவலைன்னா... வேற யாரு செய்யப் போறா...?”

சொக்கலிங்கத்திற்கும், ராமலிங்கத்திற்கும் ஒன்றரை வருடங்கள் தான் வித்தியாசம். 

முதலிலிருந்தே தன் தேவைகளைக் குறைத்து, தம்பிக்காக விட்டுக் கொடுத்து வேண்டிய உதவிகளைச் செய்வதில் முனைப்பாக இருந்தவன் சொக்கலிங்கம். தந்தை இல்லாததால், அது தன்னுடைய கடமை என்றிருந்தான். ஆகையால், இப்பொழுது இந்த மாதிரி ஒரு வேண்டுகோள் வரவும் நிராகரிக்க மனம் வரவில்லை.

அதுவரை சேர்த்து வைத்திருந்த பத்து லட்சத்தை அன்றே கொடுத்து விட்டான். பின்னர், தனக்கு வரும் லாபத்தை எல்லாம் அவ்வப்பொழுது அனுப்ப ஆரம்பித்தான். தம்பியின் வீடும் வளர்ந்து கொண்டிருந்தது. சென்ற வாரம் தன்னுடைய வரவு செலவுகளை எழுதி வைக்கும் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கடைசியாக ஆறு மாதங்கள் முன்பு எட்டு லட்சம் தம்பிக்குக் கொடுக்கப்பட்டதாக எழுதியிருந்தான். மொத்தம் இருபத்தியெட்டு லட்சம் ஆகியிருந்தது.

'தம்பி தானாகத் திருப்பித் தரும்வரை, தாம் பொறுமையாக இருக்க வேண்டும்'- என்று சொல்லிக் கொண்டான்.  

இன்று மாலை தம்பியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.

“அண்ணே, சௌக்கியம்தானே..?” 

"ராமா.., வீட்டு வேலைல்லாம் எப்படி போயிட்டு இருக்கு...?” 

"இப்போ கொஞ்சம் இன்டீரியர் ஒர்க் நடந்துக்கிட்டு இருக்கு. 'இன்னும் எப்படியும், நாலு மாசத்துல, குடி போயிறலாம்'-ன்னு இன்ஜினியர் சொல்லியிருக்காருண்ணே..”

“ரொம்ப சந்தோசம். ஒரு வீடுதான் கட்டி வாழப் போறோம், நல்லா செஞ்சுக்கோ. எதிலும் குறை வைக்காதே, பின்னாடி, இப்படி பண்ணி இருக்கலாம். அப்படி பண்ணி இருக்கலாம்'- ன்னு தோணக் கூடாது, சரியா...?” 

"அண்ணே... உங்க மேற்பார்வையில வளர்ந்தவன், நான். 'விரலுக்கேத்த வீக்கம் வேணும்' - ன்னு நீங்க அடிக்கடி சொல்வீங்க. என் விரல் எனக்குத் தெரியும். சரிண்ணே, நீங்க எப்போ தொடங்கப் போறீங்க...?”

"நீ முதல்ல முடி. அப்புறம் பார்த்துக்கலாம்” 

“இப்பவே, ப்ளான் பண்ண ஆரம்பிச்சிருங்கண்ணே... நான் எப்படியும் அடுத்த ஒரு வருஷத்துல, கொஞ்சம் கொஞ்சமா உங்ககிட்ட வாங்கின இருபத்திமூணு லட்சத்தை கொடுத்துடறேன்.”

இப்படித் தம்பி சொல்லவும், சில வினாடிகள் மௌனமாக இருந்தான், சொக்கலிங்கம். ‘என்னடா இது, இருபத்தியெட்டு லட்சம் ஆயிற்றே, இவன், இருபத்திமூன்று என்கிறானே...’ 

தொலைபேசியில்..., “தம்பி, அது இருபத்தி மூணா..? இருபத்தியெட்டுன்னு..., நான் நினைக்கிறேன்.” 

"அப்படியா, நான் செக் பண்ணிட்டு ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சுக் கூப்பிடுறேன்.”

இதுவரை நடந்த உரையாடல் ஒன்றும் பெரிதாகப்படவில்லை, சொக்கலிங்கத்திற்கு. இரண்டு நிமிடங்கள் கழித்து,  மறுபடியும் அழைப்பு வந்தது.

“அண்ணே, ஃபுல்லா செக் பண்ணிட்டேன், இருபத்திமூணு லட்சம்தான் வாங்கி இருக்கிறேன்.”

'இதற்கு, எப்படி பதில் அளிப்பது..?'- என்று சற்று யோசித்தான் சொக்கலிங்கம். 

ஹவுஸ் ஸஜ்ஜஜ்"ஒரு வாரம் முன்னாடிதான், இந்த வீடு கட்டின வரவு செலவுகளெல்லாம் எங்க ஆடிட்டர் கிட்ட கொடுத்தேன். அப்போ உங்க சைடுல இருந்து இருபத்திமூணு லட்சம் வந்திருக்குன்னு அவரும் சொன்னது ஞாபகம் இருக்கு.”

"அப்படியா, நானும் ஒண்ணுக்கு ரெண்டு தடவ செக் பண்றேன். நீயும், ஒரு தடவை மறுபடியும் பாரேன்..”

"சரி, பாக்குறேன்..”. அலைபேசி துண்டிக்கப்பட்டது 

அப்பொழுது ஆரம்பித்தத் தவிப்பு இப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருந்தது. 

'இதைத் தம்பி வேண்டுமென்றே செய்திருக்க வாய்ப்பு இல்லை. எங்கேயோ... தவறு நடந்திருக்கிறது. இப்பொழுது இதை மேற்கொண்டு எப்படி எடுத்துச் செல்வது..?'- மனைவியிடம், 'இந்த உரையாடலைச் சொல்லி, கலந்தாலோசிக்கலாமா...?' 

'வேண்டாம்,.. வேண்டாம்..., யாருக்கும், எந்த ஒரு மனக்கசப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது. ஐந்து லட்சம் என்பது, ஒரு சிறிய தொகை அல்ல. நாளை அழைக்கிறேன்'- என்று கூறியிருக்கிறான். ஒருவேளை இருபத்திமூன்று தான்'- என்று சொல்லிவிட்டால்...?’ 

யோசிக்க... யோசிக்க..., இந்த விவகாரத்தால், இத்தனை வருட உறவு முறிய வாய்ப்பு உள்ளதை உணர்ந்தான். மனது கனக்க ஆரம்பித்தது. 

'இல்லை... இல்லை... அப்படி ஒன்றும் நடக்காது...’

'ஒருவேளை தம்பி, தன்னை ஏமாற்ற நினைக்கிறானோ...'- என்று ஒரு கணம் சிந்தித்தான்.  

பின்னர், உடனே தன்னைத்தானே கடிந்து கொண்டான், அவ்வாறு நினைத்ததற்காக வருத்தப்பட்டான். மீண்டும் அந்தக் கணக்குப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தான். 

‘அவனுக்கு தரவில்லையென்றால்.., வேறு எதற்கு செலவு செய்தேனோ... அதை எழுதியிருப்பேன், அப்படி ஒன்றும் இல்லையே...’

இதோ படுக்கைக்கு வந்து நான்கு மணி நேரங்கள் ஆகிவிட்டன, தூக்கம் வரவில்லை. எப்படி வரும்...? 

'நாற்பது வருட பந்தம், இந்தப் பணம் என்னும் பேயால், அழிந்து விடுமோ...? என்ன செய்யலாம்…!!! என்ன செய்யலாம்..?’ 

திடீரென்று, ஒரு ஞானோதயம் உதித்தது. 

'நான், இனி அவனிடம் இதைப்பற்றி கேட்கப்போவதில்லை. ஐந்து லட்சம் தானே, அடுத்த ஆறு மாதங்களில், நான் அதை மீட்டெடுக்க முடியும். ஒரு சில மாதங்கள் என் தொழிலில் நஷ்டம் இருந்ததாக எண்ணிக் கொள்கிறேன், அவ்வளவுதானே. நல்ல வேளை, வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. இதை இப்படியே விட்டு விடுவோம். இதன் மூலம் குடும்பத்தில் எந்தக் குழப்பமும் இல்லாமல், எந்த விரிசலும் ஏற்படாமல் இப்பொழுது உள்ளபடியே தொடரட்டும். ஐந்து லட்சம் பெரிதா..?, தம்பி பெரிதா...?  போகட்டும் அந்தப் பணப்பேய்….”  

இந்த எண்ணம் தோன்றியவுடன், அவன் மனம் மிகவும் அமைதி அடைந்தது. அடுத்த பதினைந்து நிமிடங்களில் உறங்கிப் போனான். 

அடுத்த நாள் காலை, வெளியே சற்று உலாத்திவிட்டுத் திரும்பியபோது, அவர் மனைவி,

"என்னங்க நேத்து சரியா தூக்கம் இல்ல போல...? என்ன விஷயம்?” 

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல” 

"இப்போகூட காலையில இருந்து என்கிட்ட ரெண்டு வார்த்தை கூட பேசல..”

அதைக் காதில் வாங்காதது போல், அன்றைய தினசரியைப் படிக்க ஆரம்பித்தான் சொக்கலிங்கம்.

“அபிராமி, ஃபோன் பண்ணினா”

சட்டென்று நிமிர்ந்தான். 

அபிராமி ராமலிங்கத்தின் மனைவி. ‘தான் மறைக்க நினைத்தது, வெளிப்பட்டு விட்டதோ...?’

"என்னவாம்?”

“இந்த லீவுல, கொழந்தைங்கள இங்க கொண்டு வந்துவிடப் போறாளாம். பெரீம்மா வீட்டுக்குப் போணும்ன்னு சொல்றாங்களாம். நம்ம சித்திரைத் திருவிழா வருதில்ல... போன வருஷம் மிஸ் பண்ணிட்டாங்களாம், இந்த வருஷம் கண்டிப்பா பாக்கணுமாம். நம்ம பையனுக்கும் அவங்ககூட நல்லா பொழுது போகும்.”

"அவ்வளவு தானே...”

“என்ன கொஞ்சம் கூட சுவாரசியம் இல்லாமக் கேக்குறீங்க..?”

"வரட்டும்மா, நல்லா வரட்டும்..”

“ஒண்ணு கவனிச்சீங்களா...? பெரீம்மா வீடுன்னு சொன்னாங்களாம், பெரீப்பா வீடுன்னு சொல்லல…” - என்று சொல்லிச் சிரித்தாள் கற்பகம்.

அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான், சொக்கலிங்கம்.

"அப்புறம் இன்னொண்ணும் சொன்னா...”

“………………”

"நாம பணம் கொடுத்ததாலதான், இவ்வளவு சீக்கிரம் வீடு கட்ட முடிஞ்சதாம். ஒரு தாங்க்ஸ் சொல்லச் சொன்னா...”

இதுவரை இறுக்கமாக இருந்த சொக்கலிங்கத்தின் முகம் மலர்ந்தது. 'தான் எடுத்த முடிவு எவ்வளவு சரியானது'- என்று தன் மேல் ஒரு சிறிய கர்வம் கூட எட்டிப் பார்த்தது, அவனுக்கு. 

அன்றும், அடுத்த இரண்டு நாட்களும், தம்பியிடமிருந்து அழைப்பு வரவில்லை. 

மூன்று நாட்கள் கழித்து, காலையில் அலைபேசி சிணுங்கியது, ராமலிங்கம் என்று பெயரையும் காண்பித்தது. சொக்கலிங்கத்தின் மனம் படபடக்க ஆரம்பித்தது. தான் எடுத்த முடிவைக் காக்க உதவுமாறு ஒருகணம் ஆண்டவனை வேண்டிவிட்டு கைபேசியை எடுத்தான்.

“ஹலோ, சொல்லு ராமா...”

“அண்ணே... மன்னிக்கணும். ஆடிட்டர், இப்போ தான் கூப்பிட்டார். நீங்க சொன்னது தான் சரி, இருபத்தி எட்டு லட்சம் வாங்கியிருக்கேன் உங்ககிட்ட இருந்து”

சொக்கலிங்கத்திற்கு சட்டென்று பேச்சு வரவில்லை. இவ்வாறு நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று யூகித்து இருந்தாலும்,  'நடக்காமல் போய்விட்டால், என்ன ஆகும்.?'- என்ற கவலை மேலோங்கி இருந்ததால், தம்பி இவ்வாறு கூறியவுடன் அமைதியாகிவிட்டான். 

“சரிடா, பரவாயில்ல...”

"ஒண்ணும் நினைச்சுக்காதீங்கண்ணே, சரியா...?” 

“உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா..? இதை இப்படியே விட்டுற்றா”

இப்பொழுது மனம் குதூகலம் ஆகி விட்டது. ஐந்து லட்சம் தவறாமல் இருந்ததற்காக அல்ல, உறவைத் தவற விடாமல் இருந்ததற்காக... சட்டென்று எழுந்து சட்டையை மாற்றிக் கொண்டு புறப்பட்டான்.

"எங்கே கிளம்பிட்டீங்க...?” 

"கோவிலுக்கு...”

"என்ன இப்போ திடீர்னு..?” 

"ராமன் கால்ல போய் கொஞ்சம் விழுந்துட்டு வர்றேன்..”
 
 "---------------"

ஐந்து மாதங்கள் கழித்து, எல்லோரும் கிரகப்பிரவேசத்திற்கு சென்னை சென்று வந்தார்கள். வீடு கட்டிய அனுபவத்தை நன்கு விவரித்தான், தம்பி. 

சொக்கலிங்கம், மதுரையில் தான் வாங்கியிருந்த இடத்தைச் சொன்னவுடன், அதற்கேற்றவாறு எப்படி வீட்டைத் திட்டமிட வேண்டும் என்பதையும் விவாதித்தார்கள். 

பின்னர் வீடு கட்ட ஆரம்பித்து, ஒரு ஆண்டு ஓடிவிட்டது. சொன்னபடி, இருபத்தியெட்டு  லட்சத்தையும், இந்த ஒன்றரை ஆண்டுகளில் திருப்பித் தந்துவிட்டான் தம்பி. 

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. கடை இல்லாததால், வெளியே சென்றுவிட்டு சொக்கலிங்கம் திரும்பி வந்தபோது, வீட்டில் கற்பகம் யாருடனேயோ பேசிக்கொண்டிருந்தாள். 

“வாங்க, உங்களுக்காகத் தான், இவர் வெயிட் பண்ணிட்டு இருக்காரு.” 

சற்றுப் பொறுத்துதான் ஞாபகம் வந்தது. “ஓ, உன் தூரத்துச் சொந்தம் இல்ல...?  திருச்சியில இருக்கிறதாச் சொல்லுவியே..?"  

“ஆமாங்க,  பேரு ஸ்ரீதர். ”

ஸ்ரீதர் பேச ஆரம்பித்தான். “உங்களாலதான், நான் இன்னிக்கு ஒரு மனுசனா தலை நிமிர்ந்து நிக்கிறேன், மாமா.. ” 

"என்ன சொல்ல வர்ற, புரியலையே..”

"ரெண்டு வருஷம் கழிச்சு, இப்படி லேட்டா வந்ததுக்கு என்ன மன்னிக்கணும்.”

ஒன்றும் புரியாமல் தன் மனைவியை நோக்கினான் சொக்கலிங்கம்.

ஸ்ரீதர் தொடர்ந்தான். 

“நான் ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு, ஒருத்தர் கிட்ட பணம் கடனா வாங்கியிருந்தேன். சொன்ன நேரத்துக்கு  திருப்பிக் கொடுக்க முடியல. ஒரு நாள் அவர் வீட்டுக்கே வந்து சத்தம்போட்டுப் போயிட்டார், ரொம்ப அவமானமா இருந்தது. அப்போதுதான், என் மனைவி கற்பகம்,  'அக்காகிட்ட போய்க் கேட்டுப் பாருங்க'- ன்னு ஞாபகப்படுத்தினாள். நானும் இங்கே வந்து கேட்டேன். அப்போ, நீங்க எங்கேயோ அவசரமா வெளியூருக்குக் கிளம்பிக்கிட்டு இருந்தீங்க. நான் சொன்னதைக்கூட அரைகுறையாதான் கேட்ட மாதிரி பட்டுச்சு...” 

கற்பகம், “ஆமாங்க, இவன் கேட்கிற அந்த அஞ்சு லட்சத்தை நம்ம பீரோவில் இருந்து எடுத்துக் கொடும்மான்னு சொல்லிட்டு, நீங்க போயிட்டீங்க, நானும் கொடுத்துட்டேன்.”

ஸ்ரீதர், “அந்தப் பணம் என் சொந்தக்காரங்க மத்தியிலும், என்கூட தொழில் பண்ற மத்தவங்க மத்தியிலும், என் மானம் பறிபோகாம காப்பாத்துச்சி. அதுக்கப்புறம், இந்தப் பக்கம் வரத் தோதுபடல. 'அக்காவைப் பார்க்கப் போனா பணம் ரெடி பண்ணிட்டுதான் போகணும்'- னு உறுதியா இருந்தேன். இந்த ரெண்டு வருஷத்துல கொஞ்சம் கொஞ்சமா தேத்திக் கொண்டு வந்துட்டேன்..”

அவன் சொல்ல சொல்ல சொக்கலிங்கத்துக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. அந்தப் பழைய நிகழ்வை ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சித்தான்.

“ரொம்ப நன்றி... மாமா, நேரம் கிடைக்கிறப்போ திருச்சிக்கு வாங்க..”- என்று கூறிவிட்டு, கிளம்பிவிட்டான அவன். 

தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான், சொக்கலிங்கம். ‘நடந்தது என்ன..? சற்று நிதானமாக யோசிப்போம். ஆக, அன்று எட்டு லட்சத்தை தம்பிக்குக் கொடுப்பதாக கணக்கு எழுதி பீரோவில் வைத்திருந்தேன். இவன் வரவும் அதிலிருந்து, ஐந்து லட்சம் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தான் நேரடியாக பங்கு கொள்ளாததாலும்,  அன்று அவசரமாக வெளியூர் சென்று விட்டதாலும், திரும்பி வந்து இதை அந்த புத்தகத்தில் பதிவிட மறந்துவிட்டிருக்கிறேன். தம்பிக்கு அந்த சமயத்தில் மூன்று லட்சம்தான் கொடுத்திருக்கிறேன். அப்படியானால்... தம்பி 28 லட்சம் வாங்கியதாகச் சொன்னானே, எப்படி...? கணக்கு இடிக்கிறதே...’. 

யோசிக்க... யோசிக்க... ஒரு பலமான உண்மை புலப்பட்டது. உடனே, உள்அறைக்குச் சென்று, தன் தம்பி  ராமலிங்கத்தைக் கைபேசியில் அழைத்தான். 

“ஏன்டா பொய் சொன்னே...?” 

“என்னண்ணே புரியலையே...?”
 
“உன் நல்ல மனசுக்கு, அது புரியாதுடா...” 

"கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க...”

“அன்னைக்கு, மூணா எட்டான்னு குழப்பம் வந்துச்சு, இல்லையா...?  நீ, 23 - லட்சம் வாங்கிட்டு,  28 - ன்னு ஏன் சொன்னே...?”

“இல்லண்ணே, 28 - தான் வாங்கியிருந்தேன்” 

“இங்க பார், ஏற்கனவே தப்பு பண்ணிட்டேன்னு மனசு என்ன குத்திக்கிட்டு இருக்கு. நீ மேலும் என்னை வேதனைப் படுத்தாத. சொல்லு, உண்மையைச் சொல்லு.”

"ஆமாண்ணே.. அன்னைக்கு சாயந்திரம், நீங்க போன் பண்ணினப்போ உங்க நிலைப்பாட்டில உறுதியா இருந்ததைக் கவனிச்சேன். எங்கயோ தப்பு நடந்திருக்குன்னு புரிஞ்சது. அதுக்காக உங்ககூட சண்டை போட முடியுமா... என்ன.?  ரெண்டுக்கு நாலு முறை நான் எல்லாத்தையும் செக் பண்ணினேன். ரொம்ப உறுதியா 23 - தான்னு தெரிஞ்சது. அடுத்த நாள் நீங்களாவே என்னைக் கூப்பிட்டு, தப்பாச் சொல்லிட்டேன்னு சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா, உங்க கிட்டருந்து போன் வரல. அப்படீன்னா,  நீங்க சொன்னதுதான் சரின்னு நம்பிக்கிட்டு இருக்கீங்கன்னு புரிஞ்சது. அடுத்த ரெண்டு நாள் எனக்கு ஒண்ணுமே ஒடல. மனசுல என்னென்னமோ பயப்படும்படியான எண்ணங்கள் எல்லாம் வந்து போச்சு. இந்தப் பணப் பிரச்சினையினால, உங்கள இழந்துடுவேனோன்னு பயந்தேன்ணா..”

“………………….”

"அப்புறமா ஒரு முடிவுக்கு வந்தேன். உங்களைக் கூப்பிட்டு, 28 - ன்னு சொன்னேன். சொல்லி முடிச்ச உடனே, உங்க குரல்லயும் ஒரு சாந்தம் வந்ததை கவனிச்சேன். அதனால, நான் எடுத்த முடிவு சரிதான்னு உணர்ந்தேன்.”

சொக்கலிங்கத்தின் கண்களில் நீர் திரண்டு கொண்டிருந்தது. 

"இந்த அஞ்சு லட்சம் என்ன ஒரு பெரிய பணமா...? நீங்க என்னை இதுவரை கவனிச்சதுக்கு, ஐம்பது லட்சம்கூட கொடுக்கலாம். உங்ககிட்ட போன்ல பேசினதுக்கப்புறம் என் மனசு ரொம்ப அமைதி ஆயிடுச்சு..."

“நான்,  அன்னைக்கே அதை மறந்துட்டேன்ணே. இப்போ எப்படி அது வெளிய வந்துச்சு...?”

அவன் பேசிக்கொண்டே போக, தன் கைகுட்டையால் கண்களைத் துடைத்து கொண்டிருந்த சொக்கலிங்கம், தன்னை ஆசுவாசப்படுத்திகொள்ள சற்று நேரம் ஆனது. 

“அண்ணே, லைன்ல இருக்கீங்களா...?” 

“அப்புறம் பேசுறேன்டா..” - என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். மறுபடியும் வெளியே கிளம்பினான். 

கற்பகம், “எங்கே போறீங்க...?” 

"கோவிலுக்கு..."

'ராமலிங்கம் காலில் போய் விழ முடியாது, இங்கே ராமன் கால்லயாவது விழுந்துட்டு வரேன்.'-  என்று அவன் முனகியது கற்பகத்திற்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.

இந்த உன்னத உறவுகள் வாழ்க.. வாழ்கவே...

Sunday, May 24, 2020

63 நாயன்மார்கள் - வரலாற்று சுருக்கம்...!

1. திருநீலகண்ட நாயனார்:
கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.

2. இயற்பகை நாயனார்:
சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை, முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

3. இளையான்குடிமாற நாயனார்:
நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர். தன்னுடைய வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4. மெய்ப்பொருளார்:
தன்னுடைய பகைவன், போலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்.

5. விறல்மிண்டர்:
சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.

6. அமர்நீதியார்:
சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.

7. எறிபத்தர்:
சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

8. ஏனாதிநாதர்:
கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக் கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

9. கண்ணப்பர்:
பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.

10. குங்குலியக்கலயர்:
யானைகள் பல முயன்றும் நேராக்க முடியாத சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்து நிமிர்த்தினார். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக குங்குலியம் என்னும் தூபம் ஏற்றியவர்.

11. மானக்கஞ்சறார்:
தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும்,  பூணூலுக்காக சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை  வெட்டியவர்.

12. அரிவாட்டாயர்:
தினமும் தன் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை ஈசனுக்கு கோவிலில் படைப்பவர். ஒருநாள் தான் கொண்டு சென்ற சிவபூஜைக்குரிய உணவுப் பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

13. ஆனாயர்:
புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14. மூர்த்தி நாயனார்:
சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.

15. முருக நாயனார்:
வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

16. உருத்திரபசுபதி:
கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.

17. திருநாளைப்போவார் (நந்தனார்):
தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

18. திருக்குறிப்புத் தொண்டர்:
சிவனடியார் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், விடாத மழையின் காரணமாக குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோத முயல ஈசன் தன் திருக்கரத்தினால் தடுத்து நிறுத்தி அருள் செய்தார்.

19. சண்டேசுர நாயனார்:
சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.

20. திருநாவுக்கரசர் சுவாமிகள்:
தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21. குலச்சிறையார்:
பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22. பெருமிழலைக் குறும்பர்:
சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.
சுந்தரருடன் கயிலை சென்றவர்.

23. காரைக்கால் அம்மையார்:
இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24. அப்பூதி அடிகள்:
திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்து வைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.

25. திருநீலநக்கர்:
திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்.

26. நமிநந்தி அடிகள்:
ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.

27.திருஞானசம்பந்தர்:
ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28. ஏயர்கோன் கலிக்காமர்:
இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்:
திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர் விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.

30. தண்டி அடிகள்:
கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர்.சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.

31. மூர்க்கர்:
சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.

32. சோமாசிமாறர்:
நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.

33. சாக்கியர்:
அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.

34. சிறப்புலி:
சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்:
பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36. சேரமான் பெருமாள்:
சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.

37. கணநாதர்:
சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.

38.கூற்றுவர்:
நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39. புகழ்ச்சோழ நாயனார்:
எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.

40. நரசிங்க முனையரையர்:
சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.

41. அதிபத்தர்:
வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42. கலிக்கம்பர்:
முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

43. கலியர்:
வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.

44. சத்தி:
சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45. ஐயடிகள் காடவர்கோன்:
மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

46. கணம்புல்லர்:
விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்.

47. காரி:
காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48. நின்றசீர் நெடுமாறனார்:
திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49. வாயிலார்:
இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

50. முனையடுவார்:
அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்களா அனைவருக்கும் உணவு அளித்தார்.

51. கழற்சிங்க நாயனார்:
சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52. இடங்கழி:
அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53. செருத்துணை நாயனார்:
சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54. புகழ்த்துணை:
வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.

55. கோட்புலி:
சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56. பூசலார்:
பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

57. மங்கையர்க்கரசியார்சை:
சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58. நேசர்:
சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.
எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59. கோச்செங்கட் சோழர்:
முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம் கட்டினார்.

60. திருநீலகண்ட யாழ்ப்பாணர்:
ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்.

61. சடையனார் நாயனார்:
சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62. இசைஞானியார்:
சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63. சுந்தரமூர்த்தி நாயனார்:
தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியது பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

நாயன்மார்கள் திருவடிகளே சரணம்.

Saturday, May 23, 2020

Feels like Temperature

Have you ever noticed the term Feels like Temperature in your wether forecast page.

What is the difference between the max min and feels like temperatures. Why are these numbers sometimes so different? How do meteorologists know what the temperature will feel like to you?



How to calculate the ‘feels like’ temperature?

Although numeric, temperatures are not universal. Most of us have a sense of what a temperature of 75 degrees Fahrenheit means, but add a brisk wind and you will feel colder. Raise the humidity and the temperature your body experiences feels a lot higher too. Precipitation and cloud cover also play a role in making that 75 degrees a more relative experience. So how are “feels like” temperatures calculated?

Feels like temperature is calculated by taking into account the expected air temperature, relative humidity and the strength of the wind at around 5 feet (the typical height of an human face) combined with our understanding of how heat is lost from the human body during cold and windy days.

On windy days the speed of moisture evaporation from our skin increases and serves to move heat away from our body making it feel colder than it actually is. The exception to this rule, however, is when higher temperatures are concerned. At higher temperatures, wind chill is considered far less significant. Instead humidity plays a greater role. When a human being perspires, the water in his or her sweat evaporates. This results in the cooling of the body as heat is carried away from it. When humidity is high, the rate of evaporation and cooling is reduced, resulting in it feeling hotter than it actually is.

Using these facts we use a formula to adjust the air temperature based on our understanding of wind chill at lower temperatures, heat index at higher temperatures and a combination of the two in between.

So to understand better, 85 degrees at 10% humidity, the temperature feels closer to 79 degrees, but at 90% humidity, it will feel closer to 100 degrees outside.

Monday, May 18, 2020

சிந்தனை துளிகள் - 1

என் பள்ளித் தோழன் திரு.குமார் ராஜாவின் இனிய காலை வணக்கம் குறுஞ்செய்தி வாழ்த்துக்களின் தொகுப்பு..

1. நம்மை பிறர் எப்படி எண்ணுகிறார்கள் என்பதை விட

நம்மை நாம் எப்படி எண்ணுகிறோம் என்பதே முக்கியம்!


2. நாம் சரியாக இருந்தால் கோபப்படுவதற்கு அவசியமில்லை...

தவறாக இருந்தால் கோபப்படுவதில் அர்த்தமே இல்லை...


3. காலங்களும் மாற்றங்களும் மாறி கொண்டே தான் இருக்கும்...

ஆதலால் எந்த ஒரு வெற்றியும் நிரந்தரம் அல்ல...

எந்த ஒரு தோல்வியும் நிலையானது இல்லை...


4. துன்பம்  வரும் போதும் இன்பம் வரும் போதும்...

கூடவே இருக்கும் ஒரே நண்பன் நமது உழைப்பு மட்டுமே...


5. எவ்வளவு பணம் சம்பாதித்தோம் என்பது முக்கியம் இல்லை...

நம் வாழ்வில் இன்பத்திலும் துன்பத்திலும் நம்முடன்  உண்மையாக இருக்க எத்தனை மனிதர்களை சம்பாதித்தோம்  என்பதே முக்கியம்...
  

6. எல்லோரையும் நம்பிக் கொண்டே இருக்காதீர்கள்... 

ஏனென்றால் 

சிலருக்கு மட்டும் தான் நம்பிக்கையை காப்பாற்றும் பழக்கம் இருக்கிறது... 


7. வாழ்க்கையில் சில வலிகள் இருந்தால் தான்... 

அதில் இருந்து மீள  பல வழிகள் தோன்றும்...


8. எத்தனை கைகள் உங்களை  தள்ளி விட்டாலும்...

உங்கள்  தன்னம்பிக்கை ஒரு போதும் உங்களைக்  கைவிடாது...


9. விடா முயற்சி என்ற ஒற்றை நூல் மட்டும் சரியாக இருந்தால்...

வெற்றி என்னும் பட்டம் நம் வசமே இருக்கும்...


10. உங்கள் பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக்கொள்ளும் போது...

உங்களின் மன வலிமையும்... தன்னம்பிக்கையும்... தானாகவே அதிகரிக்கிறது...


11. யாரோ சொன்னார்கள் என்பதற்கெல்லாம் மனதைத் தளர விடாதீர்கள்...

உங்களுக்கான வாழ்க்கை எதுவோ அதை நோக்கியே பயணித்துக் கொண்டிருங்கள்...


12. தேவைக்கு மட்டும் உறவாடும் உறவை விட 

தேவைக்கு மட்டும் ரத்தம் குடித்துவிட்டுப் போகும்  கொசுக்களே மேல் 

என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டு செல்கின்றன சில உறவுகள்...


13. ஏமாற்றம் என்பது வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கே...

பக்குவமாக அதில் இருந்து மீண்டு விட்டால்... வாழ்வின் நிலையை நாம் கற்றுக்கொள்ளலாம்... 


14. யாரையும் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்காதீர்கள்...

அது உங்கள்  நிம்மதியைத் தொலைக்க  வைக்கும்...

காலம் அதன் கடமையைக் கச்சிதமாகச் செய்யும்...

அதை நீங்களே காண்பீர்கள்...


15. நிறைய சிரித்து பாருங்கள்... கவலைகள் குறையும்...

சிறிது சிந்தித்து பாருங்கள்... கவலைகள் மறைந்து விடும்...


16. வாழ்க்கையில் தடுமாற்றம் வரலாம் 

ஆனால்  மனம் தடுமாறினால் உங்கள்  வாழ்க்கையே தடம் மாறிவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்...


17. ஒருவரை விரும்பும் போது நல்ல குணங்களையும்...

அவரை வெறுக்கும் போது கெட்ட குணங்களையும்...

மட்டுமே பார்ப்பது மனித இயல்பு...


18. வாழ்க்கையில் நமக்கான அடையாளத்தை 

நாம் உருவாக்கியதாக இருக்க வேண்டும்...

பிறர் கொடுத்ததாக இருக்க கூடாது...


19. உயிர் வாழக் கற்றுக்கொள்ளுங்கள் போதும்...

வாழ்க்கையில் எவ்வாறு வாழ்வது என்பதை காலம் கற்றுத்தரும்...


20. வாழ்க்கையில் வேகமாக முன்னேறவில்லை என்று வருத்தப்படாதீர்கள்...

பின் வாங்காமல் செல்கிறோம் என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்...


21. எதிர்பார்ப்பதை விட எதிர்கொள்வதை கற்றுக்கொள்ளுங்கள்...

ஏனெனில், இங்கு எதிர்பார்க்கும் வாழ்க்கையை விட...

எதிர்கொள்ளும் வாழ்க்கையே கிடைக்கிறது...


22. பல நல்ல தொடக்கங்களுக்கு...

சில தைரியமான முடிவுகளே காரணமாக இருக்கும்...


23. பிடிக்காத விஷயங்களை கண்டு கொள்ளாமலும்...

வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமலும்...

தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும்...

இருந்தால்... நம் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்...


24. உங்களுக்கானது எதுவோ அதை நிச்சயம் அடைந்தே தீருவீர்கள்...

எதை நீங்கள்... கொடுக்கிறீர்களோ அது உங்களிடமே பல மடங்காக திரும்பி வரும்...


25.வார்த்தைகள் என்பது ஏணியை போன்றது...

நீங்கள் பயன்படுத்துவதைப் பொறுத்து...

ஏற்றியும் விடும்...

இறக்கியும் விடும்...


26. அவரவர் உடலின் அழகை கண்ணாடி காட்டுவது போல...

அவரவர் உள்ளத்தின் அழகை அவர்களின்  சொல்லும் , செயலுமே வெளிப்படுத்துகிறது...


27. இவர்கள் ஏன் இப்படி என்று எண்ணுவதை விட...

இவர்கள் இப்படித்தான் என்று கண்டு கொள்ளாமல் செல்வதே...

சில சமயங்களில் நமக்கு நன்மையைத் தரும்...


28. நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுகிறது....


29. உன்னால் முடியும் என்று நம்பு...
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே...


30. பிறரின் நிழலிலேயே வாழ பழகி  விடாதீர்கள்...

பிறகு  உங்களின் நிஜம் மறந்து விடும்..


31. குத்தி காட்டுகிற மனிதனாக இருந்தாலும் சரி...

குத்தி கிழிக்கின்ற முள்ளாக இருந்தாலும் சரி...

தூரமாக தூக்கி போடுறது தான் நல்லது...


32. மீண்டும் ஒருமுறை முகம் பார்த்து பேச வேண்டியிருக்குமே என்ற ஒரு  காரணத்திற்காகவே

நம்முடைய நிறைய கோபங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன...


33. நற்செயல்களுக்கான வெகுமதிகள் உடனே வருவதில்லை...

அது எவ்வளவு தாமதமாக வந்தாலும் நிலைத்து நிற்கும்...


34. எதிர்பார்ப்பதை நிறுத்தி விட்டு...

ஏற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்...

வாழ்க்கை எளிதாக மாறிவிடும்...


35. அதிகம் விட்டுக்கொடுத்து போறவர்களிடம்...

உங்கள் சக்தியை காமிக்காதீங்க...

முடிஞ்சா அவங்க ஏன் உங்களுக்காக விட்டுக்கொடுத்து போறாங்கனு யோசிங்க.


36. வீசுகின்ற வாசனையை பொறுத்து தான் மலர்கள் மதிக்கப்படுகின்றன...

அதே போல, பேசுகின்ற வார்த்தைகளை பொறுத்து தான் மனிதர்கள் மதிக்கப்படுகின்றனர்...


37. இன்று இருக்கும் நிலைமையைப் பார்த்து நாளையைத் தீர்மானித்து விடாதீர்கள்..

ஏனென்றால் உங்களை உருவாக்கிய கடவுளுக்கு உங்கள்  நிலையை மாற்ற ஒரு வினாடி போதுமானது...


38. நினைப்பதை சரியாக மட்டும்  நினைத்து பாருங்கள்...

நடப்பதும் சரியாகவே நடக்கும்...


39. நன்மை செய்தாலும் சரி... கெடுதல் செய்தாலும்  சரி...

நாம் செய்த செயல்களின் பலன்களை அடைந்தே ஆகவேண்டும்...

இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை...


40. நல்லவனிடம் கண்ட ஒரு  தவறுக்காக அவனை விட்டு விலகாதே....

கெட்டவனிடம் கண்ட ஒரு நற்செயலுக்காக அவனிடம் சேராதே...


41. சிறந்த உறவுகள்  கண்ணாடியும், நிழலும் போல...

கண்ணாடி பொய் சொல்லாது...

நிழல் நம்மை விட்டு விலகாது...


42. மற்றவர்களின்  மனதை நோகடித்து விடாமல் பார்த்து பார்த்து வாழ்பவர்கள் தான்...

அவ்வப்போது மற்றவர்களால் மனம் நோகடிக்கப் படுகிறார்கள்...


44. நினைத்த வாழ்க்கை எல்லோருக்கும்
வாழக் கிடைப்பதில்லை...

கிடைத்த வாழ்க்கையை சில பேருக்கு
வாழத் தெரியவில்லை...


45.பிறரிடம் இருந்து எழுப்பப்படும் தவறான கேள்விக்களுக்கு...

சரியான பதில் மௌனம்...


46. எந்தவொரு பெரிய அடிகளும் வெற்றியை தீர்மானிப்பதில்லை....

 நிறைய சிறு சிறு அடிகளே வெற்றியை தீர்மானிக்கின்றன.!


47. ஒவ்வொரு சம்பவத்துக்கும் மூன்று முகம் இருக்கும்...

உங்களுக்குத் தெரிந்தது...

பிறருக்கு தெரிந்தது...

உண்மையில் நடந்தது...


48. துணிவு உங்களை உழைப்பில் 
உயர வைக்கும்...

பணிவு உங்களை பிறர் மனதில்
உயர வைக்கும்...


49. காயங்கள் இல்லாமல் கனவு வேண்டுமானால் காணலாம்...

ஆனால், வலிகள் இல்லாமல் வெற்றி காண முடியாது...


50. அழகாய் அமைவதெல்லாம்
வாழ்க்கை அல்ல...

நமக்கு அமைவதை அழகாய் மாற்றுவதே  
வாழ்க்கை...


51. எல்லா மாற்றமும் ஏதோ ஒரு...

ஏமாற்றத்திலிருந்து தான் தொடங்குகிறது...


52. எதுவுமே நிரந்தரம் இல்லை என்று நாம் உணரும் நேரம்...

நம் கையில் எதுவுமே
இருக்கப்போவது இல்லை...

வலிகளையும்
வடுக்களையும் தவிர...


53. இன்பமும் துன்பமும் வாழ்வில் அடிக்கடி வந்து செல்லும் பேருந்துகள்...

எதில் ஏறி பயணிக்க வேண்டும் என்பதை  நாம் தான் தீர்மானிக்க வேண்டும்...


54. சந்தோஷமா இருக்க ஒரே வழி...

உங்களுக்கு மரியாதை எங்கு இல்லையோ...

அங்க அப்படியே சத்தமில்லாம விலகி போயிருங்க...


55. உங்களால் செய்ய முடியாத எந்த ஒரு செயலையும்...

இறைவன் உங்களிடம் கொடுப்பதில்லை...


56. நீங்கள் விழும் பொழுது முதலில் உதவி செய்பவர்...

ஏற்கனவே, அந்த வலியை உணர்ந்தவராக இருப்பார்...
 

57. தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை  என்றால்...

அது தான் உண்மையான தோல்வி
 

58. கொடுப்பது சிறிது என்று தயங்காதீர்கள்...

வாங்குபவர்க்கு அது பெரிது...

எடுப்பது சிறிது என்று எடுக்காதீர்கள்...

இழப்பவர்க்கு அது பெரிது...


59. நீங்கள் சொல்வது பொய்யென தெரிந்தும் பொறுமை காப்பவர்கள் ஏமாளிகள் அல்ல...

உங்களை இழந்து விட கூடாது என்று நினைப்பவர்கள்...


60. நடத்தையும் எண்ணமும் சரியாக இருந்தால்...

நீங்கள் போகுமிடமும் சந்திக்கும் நபரும் வெகு தொலைவில் இல்லை...


61. தன் தவறை உணர்ந்தவர்களை திருத்தி விடலாம்...

அதை நியாப்படுத்துபவர்களை., ஒரு போதும்... முடியாது.


62. உப்பும் அன்பும் ஒன்று தான்...

அளவோடு செலுத்தும் வரை தான் சுவை...

அள்ளி தெளித்தால் குப்பையில் தான்...


63. வாய்ப்பை இழந்தோர் வருத்தப் படுகிறார்கள்

வாய்ப்பை பெறாதோர் போராடுகிறார்கள்

வாய்ப்பை உருவாக்குவோர்
வெற்றி பெறுகிறார்கள்...


64. கடிகாரம்.

காத்திருக்கும் போது மெதுவாக நகரும்...

தாமதமாகும் போது வேகமாக நகரும்...

சோகத்தில் நகராது...

மகிழ்ச்சியில் போவது தெரியாது...

நேரம் நம் மனதை பொறுத்தது...


65. செய்த தவறை நியாயப்படுத்த
முயற்சி செய்வதை விட...

அடுத்த தவறு நடக்காமல் இருக்க
முயற்சி செய்வோம்...


66. எவ்வளவு முயன்றும் மாற்ற முடியாத விஷயங்களை...

அதன் இயல்பென ஏற்றுக்கொண்டு கடந்து செல்வதற்கு பெயர் தான்...

பக்குவம்...


67. ஒருவர் தன் வாழ்வில் முன்னேற நல்ல புத்தகம் தேவை இல்லை...

அவரவர் அப்பாவின்  'வாழ்க்கை அனுபவம்' புத்தகம் ஒன்றே போதும்


68. வசதியை வைத்து எந்த ஒரு  உறவையும்  தாழ்வாக கருதாதீர்கள்...

ஏனெனில் வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது.. நொடியில் அனைத்தும் மாறிவிடும்...


69. உதட்டிற்கும் உள்ளத்திற்கும்
இடையே உள்ள தூரத்தை குறையுங்கள்

இல்லையேல்

வாய் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும்
இடையே கடப்பதிலேயே
 நாட்கள் கடந்து விடும்...


70. சிலரை மறந்து விடுங்கள்..
சிலரை மன்னித்து விடுங்கள்...
சிலரை கடந்து விடுங்கள்...

எவரையும் தூக்கி சுமக்காதிர்கள்...
உங்கள் வாழ்க்கை சுமையாகிவிடும்...


71. தண்ணீர் அமைதியாயிருக்கும் போது தூசிகள் அடியில்
தானாகவே தங்கிவிடும்

வாழ்க்கையில்
பிரச்சனைகள் வரும் போது அமைதியாய் இருங்கள்...தானாகவே அடங்கி விடும்...


72. கொதிக்கின்ற நீரில்
பிம்பங்கள் தெரியாது

அதுபோல் கோபத்தில்
உண்மை தெரியாது

ஆகையால் ஆலோசித்து முடிவெடுங்கள்...


73. ஒரு விஷயத்தை பற்றி நாம் யோசிக்க வேண்டுமென்றால் அதற்கு மதிப்பு இருக்க வேண்டும்...

தகுதி இல்லாத ஒன்றை பற்றி யோசித்து நம் நிம்மதியை இழந்து விடக்கூடாது...


74. தவறை மன்னித்துவிட்டோம்
என்பதை விட...

மறந்து விட்டோம் என்பதே உறவை பலப்படுத்தும்...


75. பெற்ற தாயை மதித்துப் போற்றுங்கள்...

தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறு எங்கும் இருக்க முடியாது...


76. கைதட்டுபவர்களுக்கும்
கைதட்டல் வாங்குபவர்களுக்கும்

பெரிய வித்தியாசமில்லை
முயற்சியை தவிர...


77. மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும் போது "ஒரு வேளை முடியலாம்" என்று உங்களுக்குள் மெலிதாக குரல் கேட்குமே அதற்கு பெயர்தான் "நம்பிக்கை".


78. முடியாது என்று எதையும் விட்டுவிடாதீர்கள்...

முடியும் என்று அலட்சியமாக இருந்தும் விடாதீர்கள்...

உயர்ந்தாலும்... தாழ்ந்தாலும்...

முயற்சி செய்து கொண்டே இருங்கள்...


79. ஓடும் நீர் போல நல்லதையே நினைத்து நல்லதையே செய்யுங்கள்...

தீயவை தானாக குப்பை போல் ஓரமாக ஒதுங்கி விடும்...


80. விமர்சனங்களால் சிதைந்து விடாதீர்கள்...

உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ளுங்கள்...

அது உங்களின் விவேகத்தை வேகப்படுத்தும்...


81. கவலையை நினைத்து கண்ணீர் சிந்தாதீர்கள்...

லட்சியத்தை நினைத்து வியர்வை சிந்துங்கள்...

முன்னேறிவிடலாம்...


82. உண்மையில் இறைவன் கை கொடுப்பதும் இல்லை... கை விடுவதுமில்லை...

நாம் செய்த நன்மைகளே  நமக்குக் கை கொடுக்கின்றன...

நாம் செய்த பாவங்களே நமக்குக் குழி பறிக்கின்றன...


83. தெரிந்தவரிடம் மட்டுமே 
புன்னகையை பகிர முடியும்...

புரிந்தவரிடம் மட்டுமே
கண்ணீரை பகிர முடியும்...


84. ஏமாற்றுவது என்பது நம்பிக்கையை  உடைக்கும் செயல் ஆகும்...

இங்கு ஏமாறுபவர்கள் ஒரு மாற்றதை மட்டுமே சந்திக்கிறார்கள்...

ஆனால், ஏமாற்றுபவர்கள் இழப்பை சந்திக்கிறார்கள்...


85. உலகில் விலைமதிப்பில்லாதது உண்மையான அன்பு...

அது விலையில்லாமல் கிடைப்பதால் தான் அதன் மதிப்பு பலருக்கு புரிவதில்லை...

86. வாழ்க்கையில் நமக்கு  இரண்டு வாய்ப்புகள் உள்ளது...

ஒன்று உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்வது...

மற்றொன்று ஏற்றுக் கொள்ள முடியாதவற்றை மாற்றிக் காட்டுவது...


87. சில உறவுகளிடம் என்ன என்றால் என்ன என்று இருப்பது நல்லது...

அதிக அக்கறை காட்டினால் அவமானம் தான் மிஞ்சும்...


88. கோபத்தில் எடுத்தெறிந்து பேசும்
சிலருக்கு ஒரு குணம் இருக்கும்...

அவர்கள் பிறருக்கு ஒருபோதும் துரோகம் செய்யவே மாட்டார்கள்


89. வாழ்க்கை மிகவும் சிறியது.

முடிந்த வரை சந்தோசமாக இருக்க முயலுங்கள்...

வேகமாக மன்னியுங்கள்...

மெதுவாக கோபத்தை வெளிப் படுத்துங்கள்..

உங்களை புன்னகை செய்ய வைக்கும் எதையும் இழக்காதீர்கள்....


90. போதும் என்ற மனம் மட்டும் உங்களுக்கு இருந்தால்...

நீங்கள் தான் இந்த உலகில் நிம்மதியாக இருப்பவர்.


91. விதைகள் தங்களுக்கு பிடித்த இடத்தை தேடி முளைப்பதில்லை.

கிடைத்த இடங்களில் தன்னை செடியாகவோ மரமாகவோ மாற்றிக்கொள்கின்றன.

அதைப்போலதான் மனித வாழ்வு

தடுமாறும் போதும் தடமாறும் போதும் முன்னேறி முளைத்து எழுவோம்.


92. பிறருக்கு கொடுக்கும் நிலை நம்மிடம் இல்லை என்றாலும்...

பிறரை கெடுக்கும் நிலையை ஒருபோதும் நாம் செய்யக்கூடாது...


93. எந்த நிலையிலும் உங்கள் மனதை  அமைதியாக வைத்திருக்க பழகுங்கள்...

அமைதியை விட நல்ல
ஆதரவும் இல்லை...
ஆறுதலும் இல்லை...


94. அதிவேகமாக குதிரை மேல் சவாரி செய்பவரைப் பார்த்து எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால்...

எனக்குத் தெரியாது குதிரையைக் கேள் என்பது போல

நம் நிலையும் அது தான்...


95. கொடுப்பதற்குரியது பணம் மட்டுமல்ல...

உங்கள்  வார்த்தை ஒருவருக்கு தாகம் தணிக்கலாம்...

உங்கள் புன்னகை ஒருவர் உள்ளத்தில் விளக்கேற்றலாம்...

உங்கள் அன்பு ஒருவரை மனிதனாக வாழவைக்கலாம்


96. காலையில் கூட்டிலிருந்து புறப்படும் பறவைக்கு இரை கிடைக்கும் இடம் தெரிந்தா பறக்கிறது

தூரம் என்று எந்தப் பறவையும் சொல்வதில்லை

மழை வந்தாலும் மற்ற கூடுகளுக்குச் செல்வதில்லை

உலகம் பெரியது. வாழ்க்கையை கண்டு பயப்பட வேண்டாம்...


97. மனதிற்குக் காரணம் சொல்லிப் பழக்காதீர்கள்

நீங்கள் நம்பு என்றால் நம்ப வேண்டும்... நீங்கள் விடு என்றால் விடவேண்டும்

இல்லையெனில் அது தேவை இல்லாதவற்றுக்கு காரணம் கேட்டு உங்களை குழப்பும்.


98. வீசுகின்ற வாசனையைப் பொறுத்து தான் மலர்கள் மதிக்கப் படுகின்றன...

அதேபோல்...

பேசுகின்ற வார்த்தைகளைப் பொறுத்து தான் மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள்...


99.உங்களை சுற்றி உள்ளவர்களை நீங்கள் மாற்றி அமைக்க முடியாது...

ஆனால்...

உங்களை சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் மாற்றியமைக்கலாம்...


100. அனாதை குழந்தைகள் மனிதரின் ஆசையின் பிழைகள்...

முதியோர் இல்லங்கள் மனிதரின்  வளர்ப்பின் பிழைகள்...


101. நீங்கள் வெற்றி அல்லது தோல்வி  அடைவதை உங்களை தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது...


102. எதையும், ஆழமாக நேசிக்காதீர்கள்...
 
துன்பப்படுவீர்கள்...

எதையும், ஆழமாக யோசிக்காதீர்கள்...

குழம்பி விடுவீர்கள்...

எதையும், எங்கும் யாசிக்காதீர்கள்...

அவமானப்படுவீர்கள்...


103. தானாக உயரும் வயது... 

தடுக்க முடியாத நேரம்...

கடந்து செல்லும்  இளமை...

காலைத் தடுக்கும் சமூகம்...

இத்தனையும் சேர்ந்தது தான் வாழ்க்கை...


104. இவ்வுலகில் இருந்து விட்டு போவதல்ல மனித வாழ்க்கை...

உங்களின் செயலை சில காலமாவது பலர் பின்பற்றி வாழ்வதே நல் வாழ்க்கை...


105. வீரனைப் போரிலும்

யோக்கியனை கடனிலும்

மனைவியை வறுமையிலும்

நண்பனை கஷ்ட காலத்திலும் அறிந்து கொள்ளலாம்...


106. கடவுள் உங்களுககு கஷ்டங்கள் 
தரும் போது கலங்காதீர்கள்......

அவர் உங்களுக்கு கஷ்டங்கள் தருவது உங்களை சோதிக்க அல்ல...

உங்களைச் சுற்றி எத்தனை போலி 
உறவுகள் உள்ளன என்று உங்களுக்கு உணர்த்தத் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்....


107. பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பது முழு மௌனத்தைவிடச் சிறந்தது, பயன் உள்ள ஒரு விஷயத்தைப்பற்றி மிகமிகத் துல்லியமாகவும், உண்மையான முறையில் சொல்லக் கற்றுக் கொள்வதுதான் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.


108. கடலின் அலையில் மிதந்து வரும் தக்கை கரை சேர்ந்து விடும்...

வாழ்க்கை கடலில் துன்ப அலைகள் தொடர்ந்து தாக்கும் போது...

உங்கள் மனதை பற்றற்ற மிதவையாய் மாற்றி விடுங்கள்...

மகிழ்வாய் கரை சேர்ந்திடுவீர்கள்...


109. சிலருக்கு இலையாக இருப்பதும்...

சிலருக்கு கிளையாக இருப்பதும்...

சிலருக்கு நிழலாக இருப்பதும்...

சிலருக்கு வேராக இருப்பதும்...

அவரவர் நம்மை புரிந்து கொண்டு வெளிப்படுத்தும் உண்மையான அன்பில் தான் உள்ளது..


110. இன்னும் அடையாளப் படுத்தப்படாத எத்தனையோ விஷயங்கள் மறைத்து கிடக்கின்றன

அவை, உங்களது வெற்றியாக கூட இருக்கலாம்

அது மறைந்து தான் இருக்கின்றதே தவிர இல்லாமல் இல்லை

உண்மையான தேடலில் தான் வெற்றி உள்ளது


111. தூக்கி எறியும் முன் நன்றாக யோசியுங்கள்

உங்களை இன்னொருவர் தூக்கி எறிய வெகு நேரம் ஆகாது... 


112. மனதை மகிழ்ச்சிக்குப் பழக்குங்கள்...

எல்லா கஷ்டங்களும் தீர்ந்த பிறகுதான் சிரிப்பது என்று முடிவு கட்டினால் கடைசி வரை யாரும் சிரிக்கவே முடியாது...


113. சிரித்து கொண்டே கடந்து விடுங்கள்....

உங்கள் கஷ்டங்களை மட்டும் அல்ல...

உங்களை கலங்க வைத்தவர்களையும்....


114. இப்பூவுலகில் விதைகள்  தனக்கு தகுந்த இடத்தை தேடி முளைப்பதில்லை...

மாறாக கிடைத்த இடத்தில்,
தன்னை மரமாகவோ செடியாகவோ மாற்றிக்கொள்கின்றன.

விழுந்த இடத்திலேயே இருந்து,
எழுந்து வாருங்கள்... வெற்றி நிச்சயம்.


115. கோபம் என்பது ஓர் அற்புதமான எரிபொருள்...

அதை உங்கள் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துங்கள்...


116. ஓடி ஓடி உதவி செய்யும் வரைதான் அனைவரிடமும் மதிக்கப்படுவீர்கள்...

ஒரு முறை மறுத்துப்பாருங்கள்... 

அடுத்த நொடியே மறக்கப்படுவீர்கள்...


117. பிறரது சோகத்தைப் பார்த்து சிரிக்கும் போது  நீங்கள் முட்டாளாக மாறி விடுகிறீர்கள் ....

ஆனால் உங்கள் சோகத்தைப் பார்த்து சிரிக்கும் போது நீங்கள்
மேதையாகி விடுகிறீர்கள்....


118. பிடிவாதம் என்னும் வாதம் 

நம்மை ஆட்கொண்டிருக்கும் வரை 

விவாதங்கள் நீண்டு கொண்டே தான் போகும்


119. பொறாமை குணத்தை போர்வையாய் போர்த்தி கொள்ளாதீர்கள்...

அது உங்கள் மகிழ்ச்சியை மட்டுமின்றி உங்களையே அழித்துவிடும்.


120. நிரந்தரம் இல்லாத எதையோ அடைவதற்கான  நோக்கத்தில்...

நிரந்தரம் உள்ள நல்ல விஷயங்களை இழக்கிறோம்...
 

121. கர்வம் கொள்ளாதீர்கள்
கடவுளை இழப்பீர்கள்

பொறாமை கொள்ளாதீர்கள்  நண்பனை இழப்பீர்கள்

கோபம் கொள்ளாதீர்கள் 
உங்களையே இழப்பீர்கள் 


122. கடவுளிடம் தயங்காமல் கேட்கிறோம்

அதை விட சிறந்தது உரியவரிடமே கேட்டு விடுங்கள் 

கிடைக்குமா இல்லையா என்பது அடுத்த நொடியே தெரிந்துவிடும்...


123. தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால்...

அர்த்தம் இல்லாமல் போய்விடும்...

வார்த்தையும்...
வாழ்க்கையும்...


124. உங்களால் ஒருவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது என்றால்...

அந்த இடத்தை விட்டு விலகி விடுங்கள்...

அதுவே, அந்த பிரச்னையை தீர்ப்பதற்கான உங்களுடைய பங்கு ஆகும்...


125. உங்களை உண்மையாக நம்பியவரை எந்த நிலையிலும்...

காயப்படுத்தும் எண்ணத்தில் பழகாதீர்கள்...

ஏனெனில்,  உண்மை, நேர்மை, அன்பு எல்லாம் அழியாத சொத்துக்கள்

காலம் செல்ல செல்லத் தான் அதன் மகத்துவம் புரியும்...

அப்பொழுது, அது இல்லாமல் கூட போகலாம்...


126. எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இருங்கள்...

ஆனால் மனிதர்களிடத்தில் மட்டும் விழிப்பாய் இருங்கள்...


127. கற்றுக்கொடுப்பதும்...

கற்றுக்கொள்வதும்...

வாழ்வில் நிறைய பிரச்சனைகளை தவிர்க்கும்...

தவறு என்றால் கற்றுக் கொடுங்கள்...

சரி என்றால் கற்றுக்கொள்ளுங்கள்...


128. வாய்ப்பு என்பது தீக்குச்சி போன்றது

தீக்குச்சியை உரசியவுடன் பற்றி எரிய வேண்டும்

இல்லையேல்...

வாய்ப்பு மற்றொரு தீக்குச்சிக்கு வழங்கபடும்...


129. உங்களால முடியாது

இந்த வார்த்தை...

சிலரை தூண்டி விடவும் செய்கிறது...
 
சிலரை துவண்டு விடவும் செய்கிறது...


130. உங்கள் தவறை உணர்ந்து கொண்டு அமைதியாகும் போது

நீங்கள் தாழ்வதில்லை

மேலும் உயருகிறீர்கள்...


131. சோகத்தின் பக்கத்தில் சொர்க்கம் இருப்பதையும்

சுகத்தின் பக்கத்தில் துக்கம் இருப்பதையும் அறிந்து கொள்ளுங்கள்

சில சோகங்களை நேசிக்கப் பழகுங்கள் 

சில சோகங்களை மறக்க பழகுங்கள்

வாழ்க்கை யதார்த்தமானது.


132. சிறு தவறுக்காக உங்களை பின் தள்ள நிறைய பேர் இருக்கிறார்கள்...

அவர்களுக்கு உங்களையும் உங்கள் திறமையும் விட்டு கொடுத்து விடாதீர்கள்...


133. காலம் போடும் கணக்கை கடவுளை தவிர வேறு யாராலும் அறிய முடியாது...

கடமையை செய்யுங்கள்

கடவுளை நினையுங்கள் 

நடப்பதெல்லாம் நன்மைக்கே...


134. எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்...

உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது... 

எல்லாம் நீங்களாக  தேடி கொண்டதுதான்...


135. நிரந்தரம் இல்லாத உலகம்...

சுயநலம் நிறைந்த உலகம்...

யாரும் யாருக்காவும் இல்லை என்பது மட்டும் இங்கு நிஜம்...


136. திறமை நிறைந்த உலகில் தினம் புலம்பி என்ன செய்ய போகிறாய்?

எண்ணற்ற திறமைகளை 
உள்ளே மறைத்து 
உண்மை அறிந்தும் 
ஊமையாக நிற்பாயோ? 

செயல்கள் உனதாகும் 
பலன்கள் உனக்கேயாகும்! 

விடியலுக்கு காத்திருந்தாய் 
விடிந்தபின்னும் கண்மூடலா? 

நாளை உனதாகும் 
நம்பிக்கை உள்ளிருந்தால்....
வெற்றி நிச்சயம்!


137. நீங்கள் தைரியமாக எழுந்து போராடும் வரை..

உங்களை யாரும் மதிக்க போவதில்லை....

இங்கு பயத்திற்கு இடம் இல்லை....

பலத்திற்கும் உண்மைக்கும் மட்டுமே இடம் உண்டு...


138. முடிந்தவரை மனிதர்களிடம் எதிர்பார்ப்பதை குறைத்து கொள்ளுங்கள்...

ஏனெனில், எல்லோரும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள்...


139. நம்மில் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?

பிரச்சினைகள் வரும்போது அல்ல...

பிரச்சினைகளை பார்த்து பயந்து விலகும் போது...


140. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையாயிருங்கள்...

வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே...

ஆணவம் ஆயுளை குறைக்கும்...


141. அவர் சரியில்லை இவர் சரியில்லை என ஏராளமான ஏளன தள்ளுபடிகளை செய்து

நட்பு வட்டத்தையும் உறவு வட்டத்தையும்
சுருக்கி கொள்ளாதீர்கள்

உங்கள் உலகத்தை மிக சிறியதாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்


142. காத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்...

அனைத்திற்கும் உரிய நேரம் என்று ஒன்று இருக்கிறது...

அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர...

நன்மை ஏதும் இல்லை...


143. வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போது அமைதியாய் இருங்கள். தானாகவே அடங்கி விடும்...

வெள்ளை ஆடை அணிந்து கறைப்படாமல் வருவது எவ்வளவு கடினமோ

அதுபோல சிறு தவறு கூட செய்யாமல் ஒரு நாள் கடப்பது மிகவும் கடினம்...


144. வாழ்க்கையை சற்று தனித்து வாழவும் பழகிக்கொள்ளுங்கள்

நம்மோடு இருப்பவர்கள் அனைவரும் நம் முகத்தின் முன் நடந்து கொள்வது போன்று முதுகின் பின் இருப்பதில்லை

சர்க்கரை போன்று இனிக்க இனிக்க பேசினாலும்

ஒருநாள் பாகற்காய் போன்று மாறும் ஆற்றல் கொண்டவர்களே.


145. அறிவினால் வருவதில்லை பக்குவம்...

வாழ்க்கையில் விழும் அடிகளால் வருவதே பக்குவம்...


146. வாழ்வில் தடுக்கி விழும் தருணத்தில் தான் கற்றுக்கொள்கிறீர்கள்

நீங்கள் யார் என்பதையும்

உங்களுடன் இருப்பவர்கள் யார் என்பதையும்...


147. எதன் மீதோ, யார் மீதோ கோபம் கொண்டிருக்கிறீர்கள் என்றால்...

இன்னும் அவர்களை மனதில் வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்...


148. எதிரில் நிற்பவரெல்லாம் எதிரியுமில்லை...

தோளில் கையிட்டவரெல்லாம் நண்பருமில்லை...

இதை உணர்ந்தவருக்கு கவலையுமில்லை...

வாழ்க்கை ஒரு ஓவியம் அல்ல திரும்ப திரும்ப வரைவதற்கு...

அது ஒரு சிற்பம் செதுக்கினால் செதுக்கியதுதான்...


149. தவறுகளுக்கு சூழ்நிலை காரணமாக இருக்கலாம்

திருத்திக் கொள்ளாததற்கு சூழ்நிலை காரணமாகாது

ஒருவரின் அலட்சியம் மற்றவருக்கு அவசியம்

கற்றுக்கொள்ளுவத விட காயப்படுவதே அதிகம் இங்கே...


150. உங்கள் பாதையை நீங்களே தேடிக்கொள்ளும் தண்ணீராக இருங்கள்...

அடுத்தவர் பாதையை தடுக்கும் பாறாங்கல்லாக ஒரு போதும் இருந்து விடாதீர்கள்...


151. எவர் பிறர் செய்யும் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ

அவரால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது...


152. வாழ்க்கை என்னும் கணக்கு பாடத்தில் நீங்கள் சிந்தித்து செயல்படாவிடில் கழிக்கப்படுவீர்கள்...


153. எல்லோருக்கும் நமது மறதி அழகாய் தெரிகிறது

நமது மன்னிப்பு அழகாய் தெரிகிறது

நமது பொறுமை அழகாய் தெரிகிறது

ஆனால் நமது தன்மானம் மட்டும் அழகாய் தெரிவதில்லை

வீம்பாகவே தெரிகிறது


154. புறப்படும் போது தூரத்தை பார்க்காதீர்கள்

இலக்கை பாருங்கள்...

திரும்பும் போது இலக்கை பார்க்காதீர்கள்

சென்று வந்த தூரத்தை பாருங்கள்...


155. பிடித்தவர்களுக்காக நடிக்க கற்றுக் கொள்ளாதீர்கள்...

நாடகம் முடிந்த பின்பு உங்களுக்கு பிடித்தது என்று எதுவும் இருக்காது...


156. தேவைகள் என்னவோ தீரப்போவதில்லை

ஒன்று போனால் மற்றொன்று

வசதியில் இல்லை நமது வாழ்வு.

வாழ்தலில் தான் உள்ளது வாழ்க்கை.


158. பெருந்தன்மை என்பது உங்களால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது

பெருமை என்பது உங்களுக்கு தேவையானதை விட குறைவாக எடுத்துக்கொள்வது...


159. மனிதர்கள் முதலில் தேடுவது...

பிடிக்காதவர்களின் பாதகங்களையும்...

பிடித்தவர்களின் சாதகங்களையும் தான்...


160. சில தவறுகள் நாம் யார் என்பதை சொல்லிவிடும்...

சில தவறுகள் நாம் யாராக இருக்க வேண்டும் என்பதை சொல்லி தரும்...


161. உரிமையின் உச்சம் என்பது...

உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதே தவிர...

உத்தரவு கொடுப்பது அல்ல...


162. வாழ்வில் முன்னேற நாம் விட்டுச் செல்ல வேண்டியது கால் தடங்களை மட்டுமல்ல

ஏளனம், எதிர்பார்ப்பு, அவமானம் உள்பட சில துரோகங்களையும் தான்

சில சுவடுகள் மனதில் வடுக்களாக இருந்தால் தான்

வாழ்வில் நமக்கு சாதிக்கும் வல்லமை வருகிறது...


163. உங்களைத் தூக்கி விடுபவர்கள், உங்கள் தகுதியை அறிந்தவர்கள்
 
உங்களை வளர விடாமல் தடுப்பவர்கள், உங்கள் பலத்தை அறிய விரும்புபவர்கள்

அந்த இருவருக்குமே நன்றி சொல்லி கொண்டு பயணியுங்கள்.


164. நல்ல மனிதர்களை நீங்கள் காயப்படுத்தினால் சரிக்கு சரியாக நின்று சண்டை போடமாட்டார்கள்...

ஆனால் சத்தமில்லாமல் உங்களிடமிருந்து விலகி வெகு தூரம் சென்று விடுவார்கள்...


165. தான் தவறு செய்தால் வக்கீலாக மாறுவதும்..

பிறர் தவறு செய்தால் நீதிபதியாக மாறுவதும்..

இவ்வுலகின் இயல்பு...


166. புதைந்த பிறகே விதையும், சிதைந்த பிறகே மனமும் புதிய கோணம் காண்கிறது...
            
விளக்கிற்கு வெளிச்சம் கொடுக்க மட்டுமே தெரியும், வெளிச்சம் எங்கு தேவை என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்...


167. சக மனிதனை சமமாக மதிக்காத வரை நீங்கள் மனிதராக ஆக முடியாது

இங்கு எவரும் எவரையும் விட உயர்ந்தவரும் இல்லை... தாழ்ந்தவரும் இல்லை...


168. விருப்பங்களை கருத்தில் வையுங்கள்...

வெறுப்புகளை நெருப்பில் வையுங்கள்...

சறுக்கி விழுந்தாலும் நொறுங்கி போகாதீர்கள்...

சட்டென தவழ்ந்தெழுங்கள்...


169. கடுமையான பாதை என்று எதுவுமில்லை...

பாதையை மாற்றாதீர்கள்...

பாதை குறித்த உங்கள் பார்வையை மாற்றுங்கள்...


170. தவறும் சரியாகத் தெரியும் அதை உணராத வரையில்...

உணர்ந்தும் நம்முடனே இருக்கும் அதை திருத்தாத வரையில்...


171. நீங்கள் வைரமாக இருந்தாலும் தகுதியற்றவர் கையில் கிடைத்தால் வெறும் கல் தான்...

உங்கள் மதிப்பு உங்களை மட்டும் சார்ந்தது அல்ல...

நீங்கள் சேரும் இடத்தையும் சார்ந்தது...


172. மகிழ்ச்சி வரும்போது

இது எனக்கு ஏன் நேர்ந்தது?

என்று கேட்காத நமக்கு...

துன்பம் வரும் போது... 

இது எனக்கு ஏன் நேர்ந்தது?

என்று கேட்க உரிமை இல்லை...


173. தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை...

தெரிந்து செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்டு எந்த பயனுமில்லை...


174. பரவாயில்லை என்ற வார்த்தைக்குள் அடங்கி இருக்கிறது...

பல வலிகளும் சோகங்களும் ...


175. அதிக நேரம் இருக்காது அதிஷ்டம்

நீண்ட தூரம் வராது சிபாரிசு 

எல்லா நேரமும் கிடைக்காது உதவி

எப்பொழுதும் ஜெயிக்கும் தன்னம்பிக்கை.


176. எல்லா தத்துவங்களும் இளமையிலேயே வாசிக்க கிடைக்கிறது

ஆனால் அதை பின்பற்றத்தான் முதுமை வரை போராட வேண்டியிருக்கிறது


177. பிடித்தவர்களை தக்க வைத்து கொள்ள நிறைய செலவழியுங்கள்

பணத்தை அல்ல...

நேரத்தை...


178. கொடுப்பது இறைவன் என்று உணர்ந்து கொண்டால்

கிடைப்பது எதுவும் தாழ்வாக தெரியாது


179. எதிரிகளின் அவமானங்களை காட்டிலும்

உறவுகளின் அன்புக்காகவே

சுயமரியாதையை அதிகம் இழக்கிறோம்


180. யாரையும் நம்பி யாரும் இல்லை என்று புரிவதற்குள் பாதி வாழ்க்கை முடிந்து விடுகிறது...

நமக்கென்று யாரும் இல்லை என்று புரிவதற்குள் மீதி வாழ்க்கை முடிந்து விடுகிறது...


181. அதிகமாய் விவாதித்து மனங்கள் உடைபடுவதை விட

அமைதியாய் கடந்து செல்வதே உறவுகள் தொடர வழிவகுக்கும்


182. கண்ணாடி குடுவையில் உள்ள நீர், 
குடுவையின் வடிவுக்கு ஏற்ப மாறுகிறது.. 

உன் எண்ணங்களோடு கண்ணாடியில் உன்னை பார்.. 

எண்ணங்களின் வடிவமாய் நீயிருப்பாய்.  

நல்லோனுக்கு நல்லோனாய்... 
வல்லோனுக்கு வல்லோனாய்... 

நீரைப் போல நீயிருந்தால்...  வெற்றி நிச்சயம்!


183. உங்கள் வாழ்வில் அடுத்த நிலையை அடைய முயற்சி செய்யுங்கள்...

வெற்றி பெறுவீர்கள்...

ஒரு போதும் அடுத்தவர் நிலையை அடைய முயற்சி செய்யாதீர்கள்...


184. பொருட்களை பயன்படுத்துங்கள்
நேசிக்காதீர்கள்

மனிதர்களை நேசியுங்கள்
பயன்படுத்தாதீர்கள்.


185. பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள்...

இனி பிறக்கப் போவதில்லை என்று நினைத்து வாழுங்கள்...


186. தோற்றுவிட்டேன் என்று சொல்வதை விட

இந்த முறை வெற்றி பெறவில்லை என்று சொல்லி பழகுங்கள்...

 தன்னம்பிக்கை வளரும்...


187. உன்னைப் பற்றி உனக்கு மட்டுமே தெரியும்... 

உன்னை உன்னோடு மட்டுமே ஒப்பிட்டு பார்.. 

கண்ணை மூடி பயணம் செய்தாலும், 
உன்னை நம்பி செல்.. 

விண்ணைக் கூட, மண்ணை தொட வைக்கலாம்... 

உன்னை நம்பி நீ இருந்தால்...
வெற்றி நிச்சயம்!


188. பத்தில் ஒன்றாக இருப்பதை விட, 
பத்தில் முதன்மையாக இருக்க பழகு... 

வித்துகளில் முந்துபவை தான், 
மரமாகின்றன... 

அடி வாங்கும் பந்து தான், வெற்றியை தீர்மானிக்கின்றன. 

காத்துக் கொண்டிராமல், 
மனக்கண்ணை விழித்து முன்னே வா.   
வெற்றி நிச்சயம்!


189. நல்ல விஷயத்திற்காக

தனியாக நிற்க வேண்டி

வந்தாலும் தைரியமாக

நில்லுங்கள்...


190. அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்துவிடும் என்பதால் தான்

சிலவற்றை கிடைக்காத வரிசையிலே வைத்திருக்கிறது காலம்.


191. எந்த உறவிலும்

பிரிவின் வலி தீர்வதற்குள் பேசி விடுங்கள்...

வலி பழகி விட்டால் உறவு முறிந்துவிடும்...


192. வானம் ஒரே மாதிரியாக இருந்தாலும்...

வானிலை ஒரே மாதிரியாக இருப்பதில்லை...

வாழ்க்கையும் அப்படித்தான்...


193. வாழ்க்கையை சற்று திரும்பிப் பார்த்தால்

நாம் பெற்றுவிட்ட எல்லாவற்றின் பின்னும்

ஏதேனும் ஒரு இழப்பு இருக்கத்தான் செய்யும்


194. கோபத்தில் கிடைத்ததையெல்லாம் தூக்கி எறிவதை விட...

அந்த கோபத்தையே தூக்கி எறிந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.


195. உங்களை குறை கூறும் பலருக்கு உத்தமனாய் இருப்பதை விட...

உங்களை நம்பும் சிலருக்கு உண்மையாய் இருங்கள்...


196. கஷ்டங்களை பாரமாக நினைத்து கலங்காதீர்கள்

நம்மை விட உருவத்தில் மிக சிறிய நத்தை கூட

பிறந்த முதல் இறப்பு வரை முதுகில் சுமையை தாங்கி தான் வாழ்கிறது என்பதை மறக்காதீர்கள்.


197. அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது...

எல்லாவற்றையும் புரிந்த பிறகு எஞ்சி நிற்பதே...


198. வார்த்தைகளால் சொல்லும் பதிலை விட

வாழ்க்கையால் சொல்லும் பதில்களே வலிமையானவை...

Monday, May 4, 2020

எது உலக அதிசயம்?

தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒருகட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள்.

தாஜ்மஹால் மிக அழகான கட்டிடம்தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ்மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா? அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்? இல்லை. நிறையவே இருக்கிறது.

சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.

நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழுஇசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம்.


திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில், குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான நிலைல (position) இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம்.


அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட, இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.

இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப எவ்வளவு துல்லியமாக கணித்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும்.

வட சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்வளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம்.

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால், அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது. 


ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் என அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம்.

யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள்.  தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குங்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும் யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.


இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.

மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது.

அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது. அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது. அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்களில் சந்திரகாந்தக்கற்கள் பதித்துள்ளனர். அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும். அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.

மறதமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம். தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.

முன்னோா்களின் திறமையையும் & கலைநயத்தையும் போற்றி தலை வணங்குவோம்! இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம் கொள்வோம்!!

Sunday, May 3, 2020

ஊரடங்கால் ஆழகுற்ற கோவை

ஊரடங்கால் ஆழகுற்றது கோவை. ஆனந்த விகடன் வார இதழ் பாதிப்பிலிருந்து...

மார்ச் 22-ம் தேதியும், ஏப்ரல் 29-ம் தேதியும் கோவை காந்திபுரம் மேம்பாலம் பகுதியை ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்தோம். ஆனால், இரண்டு படங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள். மார்ச் 22-ம் தேதிதான் முதல்முதலாக சுய ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டது. அதனால், அன்று எடுக்கப்பட்ட படத்தில் மேம்பாலமும், கட்டடங்களும் மட்டுமே தெரிந்தன. அந்தப் படம் எடுத்து, ஒரு மாதம் கழித்து ஏப்ரல் 29-ம் தேதி அதே இடத்தில் மீண்டும் படம் பிடித்தோம்.

ஆனால், இந்த முறை மேம்பாலம் மற்றும் கட்டடங்களுடன் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் படத்தில் விழுந்தன. மார்ச் மாதம் நிலவரப்படி அங்கு மலை இருந்ததற்கான அறிகுறியே தெரியவில்லை. ஏப்ரல் மாதத்தில் கோவையின் உண்மையான அழகு தெரியத் தொடங்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பல பகுதிகளிலும் இந்தக் காட்சியைப் பார்க்க முடிந்தது.

The above msg is a fwd msg claiming it's from vikatan. As per me to claim that Coimbatore atmosphere has become really clean, both the photos should have been taken with same drone with same time (suns exposure) with same camera settings. This is the basic principle of our remote sensing satellites. These satellites pass over a definite place on the earth on its each orbit on same time. To make it more clear if a satellite passes over Coimbatore today by morning 10:35:00hrs IST and takes a photograph then tomorrow also it posses over Coimbatore by same time to have same sun illumination. Then only both the photos can be compared.  We call this as local time for the satellite. If the time (sun illumination) and camera exposures are different then such differences can easily happen.

But the above subject can't be ruled out. Such experiences had been witnessed in northern part of our country too. One fine morning people from Jalandhar could see the Himalayas from their roof which is about 200kms from their place. Aged people over there say, they used to have such beautiful sight of Himalayas from Jalandhar few decades ago.